Published:Updated:

``அண்ணாமலையிடம் சொல்லி அந்த ஹாஸ்பிட்டலை மட்டும் வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க” - கே.என்.நேரு பதில்!

அமைச்சர் கே.என்.நேரு

``அண்ணாமலை அவரோட கட்சியை வளர்க்க இப்படியெல்லாம் செய்றாரு. அவர் எது சொன்னாலும் ஓட்டுப் போட்டு முடிவுசெய்யப்போறது மக்கள்தான்” - கே.என்.நேரு

Published:Updated:

``அண்ணாமலையிடம் சொல்லி அந்த ஹாஸ்பிட்டலை மட்டும் வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க” - கே.என்.நேரு பதில்!

``அண்ணாமலை அவரோட கட்சியை வளர்க்க இப்படியெல்லாம் செய்றாரு. அவர் எது சொன்னாலும் ஓட்டுப் போட்டு முடிவுசெய்யப்போறது மக்கள்தான்” - கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டமாக ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்கிற முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி வரும் 23 முதல் 30-ம் தேதி வரை எட்டு நாள்கள் திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. 325-க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் இந்தக் கண்காட்சியை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

கே.என் நேரு
கே.என் நேரு

இதன் ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த அமைச்சர் கே.என்.நேரு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு முதல்வருக்கும் ஒரு பின்புலமும், உழைப்பும் இருந்திருக்கிறது. அதேபோல தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யக்கூடிய தமிழக முதல்வர் கடந்த 40 ஆண்டுக்காலமாக தன்னுடைய உழைப்பால், இந்த முதலமைச்சர் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார். எனவே, அவருடைய வாழ்க்கைப் பயணங்கள் அடங்கிய இந்தக் கண்காட்சியானது பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் அரசியல் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமையும்” என்றார்.

‘உங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டை வைத்திருக்கிறாரே!’ எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே.என்.நேரு, “திருச்சியில் இருக்கும் காவேரி ஹாஸ்பிட்டல், தனலெட்சுமி சீனிவாசன் குழுமங்கள் எல்லாம் என்னோடதுன்னு சொல்றாரு. அவரைச் சொல்லி காவேரி ஹாஸ்பிட்டலை மட்டும் வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு

அட ஏங்க, 7 பேர் சேர்ந்து அந்த ஹாஸ்பிட்டலை நடத்திக்கிட்டு இருக்காங்க. அதைப் போய் என்னோடதுன்னு சொன்னா என்ன அர்த்தம். என்னுடைய சொத்து மதிப்பைத் தேர்தலில் நிக்கும்போதே கொடுத்துருக்கோம். அதுக்கு மேல எங்ககிட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்து இருந்தா, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு போடப்போறாங்க. அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் நாங்கள் அதைச் சந்திப்போம். அரசாங்கமே அண்ணாமலை மீது வழக்கு போடவிருக்கிறது. அண்ணாமலை அவரோட கட்சியை வளர்க்க இப்படியெல்லாம் செய்றாரு. அவர் எது சொன்னாலும் ஓட்டுப் போட்டு முடிவு செய்யப்போறது மக்கள்தான்” என்றார்.