‘சங்க காலம் என்பது கி.மு. 4-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2-ம் நூற்றாண்டு வரை’ என்று நம் வரலாற்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ‘அதைவிடவும் பழைமையானது தமிழர் நாகரிகம்’ என்பதை நிரூபித்திருக்கிறது கீழடி அகழாய்வு. தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலம் கி.மு 583 என்று தெரியவந்துள்ளது. ஆனால், ‘அது இன்னும் பழைமையா கவும் இருக்கலாம்’ என்கிறார்கள் தொல்லியல் வல்லுநர்கள். இந்நிலையில், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை சந்தித்தோம்.

‘‘கீழடியின் தொன்மை மிகவும் பழைமையானது என்பது நிரூபணமாகியிருக்கிறது. துறை அமைச்சராக எப்படி உணர்கிறீர்கள்?’’

‘‘ `மூன்றாம்கட்ட அகழாய்வில் எதுவும் கிடைக்கவில்லை’ என்று அப்போதைய கீழடி கண்காணிப்பாளர் தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் கீழடி சென்று பார்வையிட்டோம். பல அரிய பொருள்கள் கிடைத்திருப்பதைப் பார்த்தோம். அகழாய்வைத் தொடர விரும்பி, அப்போதைய முதல்வர் அம்மாவிடம் இதுகுறித்து எடுத்துரைத்தோம். அவரும் இதை ஏற்றுக்கொண்டு, மத்திய அரசுக்கு எடுத்துச்சொல்லிப் போராடி, கீழடியில் தமிழக அரசு அகழாய்வு செய்தது.

உதயச்சந்திரன், மிக அருமையாக உலகத் தரத்துக்கு ஆராய்ச்சி மேற்கொண் டார். அதன் முடிவுகளைப் பார்த்ததும் பெருமகிழ்ச்சியாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் இருந்தது. தொழிலறிவு, எழுத்தறிவு சார்ந்த பொருள்கள் கண்டுபிடிக்கப் பட்டிருப்பது மகிழ்ச்சி. கீழடி எங்கள் தாய்மடி என்பது நிரூபணமாகியிருக்கிறது. அகழாய்வு தொடரும்!’’

‘‘கீழடி முடிவுகளையடுத்து வரலாறே மாறும் வாய்ப்பிருக்கிறதா?’’

‘‘நிச்சயமாக வரலாறு மாறும். சிந்து சமவெளியின் மொகஞ்சதாரோ, ஹரப்பா உள்ளிட்ட நகர நாகரிகங்களுக்கு இணையாக நமது நாகரிகம் இருக்கிறது. அரிக்கமேடு முதல் ஆதிச்சநல்லூர் வரை இதற்கு முன்பும் இதுபோல் பல முக்கிய கண்டுபிடிப்புகள் கிடைத்திருக்கின்றன. தற்போது கிழடியில் 3 மீட்டர் வரைதான் தோண்டியுள்ளோம். இதற்கே கி.மு. 6-ம் நூற்றாண்டு காலத்திய பொருள்கள் கிடைத்துள்ளன. அடுத்தடுத்த ஆய்வுகளில் நம்முடையது உலகிலேயே மிகப்பழமையான நாகரிகம் என்பதை நிறுவதற்கான சான்றுகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பாரதத்தின் பண்பாடுதான் கீழடி என்று மத்திய அமைச்சரிடம் எடுத்துரைக்கப்போகிறேன். அதேசமயம், தமிழ் தமிழருக்குள் இதை அடைத்திட விரும்பவில்லை. தமிழர் நாகரிகம் என்பது இந்திய நாகரிகம்தான். இதை வேறுபடுத்த விரும்பவில்லை. இதை வலியுறுத்தித்தான் மத்திய அரசிடம் நிதி பெறப்போகிறோம். கீழடியில் கிடைத்த பொருள்களைக்கொண்டு உலகத்தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்போகிறோம். அதேசமயம் ‘லைவ் மியூசியம்’ இணையத்திலும் கொண்டுவரப்போகிறோம்.’’

‘‘நீங்கள் இதை இந்திய நாகரிகம் என்கிறீர்கள். ஆனால் மத்திய அரசு, இதை தமிழர் நாகரிகமாகக் கருதுகிறதே?’’

‘‘தமிழர்களின் தொல்லியல் துறையை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து நிதி கொடுத்தது. எழும்பூர் அருங்காட்சியகத்தை மேம்படுத்த மத்திய அரசு உதவியது. கீழடி தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ள, மத்திய அரசு உறுதுணையாகத்தான் இருந்தது. கீழடி பொருள்களைக் காட்சிப்படுத்தவும் பெரிய அளவில் உதவும்.’’

‘‘‘ஆனால், மூன்றாம் அகழாய்வின் முடிவில் கீழடி ஆராய்ச்சி மூடப்படவிருந்ததே?’’

‘‘அந்தக் கண்காணிப்பாளர் எடுத்த முடிவு அது. அவரும் ஒரு தமிழர்தான். முதல் இரண்டு கட்டங்களை ஆராய்ச்சி செய்தவர், பல பொருள்களைக் கண்டுபிடித்தார். அவருக்குப் பிறகு வந்தவர், இதில் பெரிதாக எதுவும் கிடைக்காது எனத் தெரிவித்தார். நான்காம் கட்ட ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதி கொடுத்ததும் மத்திய அரசுதான்.’’

‘‘அதேசமயம், அமர்நாத் ராமகிருஷ்ணனை அறிக்கை தாக்கல் செய்யவிடாமல் செய்கிறார்களே?’’

‘‘முதல் இரண்டு ஆய்வுகள் மேற்கொண்ட தும் அவர் மாற்றப்பட்டார். தொல்லியல் துறையைப் பொறுத்தவரை அவர்கள் இடைக்கால அறிக்கையைக் கொடுப்பார்கள். சிறிது காலம் கழித்து முழு அறிக்கையும் கொடுப்பார்கள். ஆதிச்சநல்லூரை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு ஆய்வு நடந்து பல வருடங்கள் ஆகிறது. இடைக்கால அறிக்கையை மட்டும் தமிழக அரசிடம் கொடுத் தார்கள். அதன் முழு அறிக்கையும் வேண்டும் எனக் கேட்கவிருக் கிறோம். இந்தத் துறையின் பிரச்னை இதுதான்.’’

‘‘தமிழகத் தொல்லியல் துறையை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளதே?’’

‘‘தவறான குற்றச்சாட்டு. தமிழகத் தொல்லியல் துறையில் சுமார் நூறு பேர்தான் பணியில் இருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் பிரிவில்தான் தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் உள்ள 414 தொல்லியல் களங்களை மத்திய அரசுதான் பராமரித்து வருகிறது. தமிழகத் தொல்லியல் களமும் பெரிதாகிக்கொண்டிருக்கிறது. அதை இரண்டு மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும். திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு மற்றொரு மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். கீழடி அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசிடம் எடுத்துரைக்கிறோம். எங்களுக்கும் தொடர்ந்து நிதியுதவி கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.’’

‘‘கீழடி ஆய்வு விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனவே?’’

‘‘தி.மு.க-வுக்கு கீழடி குறித்துப் பேச எந்த உரிமையும் இல்லை. இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் கீழடியில் ஆராய்ச்சி நடத்தியிருக்கலாமே... மத்திய அரசில் அங்கம்வகித்தபோது கீழடியில் இன்னும் பெரிதாக ஆராய்ச்சி மேற்கொண்டிருக் கலாமே. இப்போது எல்லாம் சரியாக நடந்து வரும்போது, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாகச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? எங்களைக் குறை சொல்ல முடியாததால், மத்திய அரசைக் குறை சொல்கிறது தி.மு.க.’’