Published:Updated:

`தமிழகத்தில் 825 மின்சாரப் பேருந்துகள்; சென்னையில் 300 பேருந்துகள்!'- எம்.ஆர். விஜயபாஸ்கர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
News
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் முதற்கட்டமாக 825 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் 29- வது பொதுக்குழு கூட்டம் தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இதில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவராக மீண்டும் குமாரசாமி பதவியேற்று கொண்டார்.தொடர்ந்து செயலாளராக வாங்கிலி, பொருளாளராக தன்ராஜ் மற்றும் துணை தலைவர்கள், இணைசெயலாளர்கள் பதவியேற்று கொண்டனர். விழாவில் பேசிய நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், ``லாரி தொழிலைப் பாதுகாக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். டெல்லியில் மத்திய அமைச்சரைச் சந்தித்து லாரி தொழிலைக் காக்க பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளோம். நாமக்கல்லில் போக்குவரத்துக்கு ஏற்ப லைட் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் ரூ.1,000 கோடி வரை சாலை வசதிக்காக ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம் சாலை, துறையூர் சாலை, திருச்சி சாலை விரிவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன'' என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அடுத்து பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், ``விபத்துகளில் தவறு செய்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். லாரி தொழிலுக்கு பல்வேறு பிரச்சனை வரும் போது மாநில அரசு உதவி செய்துள்ளோம். எப்.சி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற நடைமுறையை விரைவில் தமிழக அரசு கொண்டு வரும். இ - சலான் முறை வரும் 13ம் தேதி நடைமுறைக்கு வர உள்ளது. நாமக்கல்லில் புதிய வட்டாரப் போக்குவரத்து அமைக்கப்படும். ரூ 1.30 கோடி சாலை பாதுகாப்பிற்கு வழங்க உள்ளோம். கடந்த 6 மாதங்களில் 15 சதவிகிதம் விபத்துகள் குறைந்துள்ளன. ஒரு வருடத்தில் 25 சதவிகிதம் அளவுக்கு விபத்து குறைந்துள்ளன. இதற்கு உச்சநீதின்றம் பாராட்டி உள்ளது. விபத்தைக் குறைத்ததில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தமிழகத்தை சுட்டிக்காட்டி உள்ளார். அந்தளவிற்கு தமிழகத்தில் போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எம்.ஆர். விஜயபாஸ்கர்
எம்.ஆர். விஜயபாஸ்கர்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லாரி தற்காலிகப் பதிவை ஒரு மாதத்தில் இருந்து 3 மாதங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்துத் துறையில் 825 மின்சாரப் பேருந்துகளை முதற்கட்டமாக தமிழகத்தில் இயக்க உள்ளோம். அதில், சென்னையில் 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அடுத்து படிப்படியாக 2,000 மின்சார பேருந்துகள் இயக்கப்படும். தலைக்கவசம் அணிவது நகர்ப்புறங்களில் 90 சதவிகிதம் செயல்பாட்டுக்கு வந்தாலும், கிராமப்புறங்களில் செயல்பாட்டுக்கு வரவில்லை. சட்டத்தை அரசு கொண்டு வந்தாலும் மக்கள்தான் பின்பற்றவேண்டும். முதற்கட்டமாக சாலை விபத்தைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் செயல்பாட்டிற்கு வரும்'' என்றார்.