Published:Updated:

`கனவு காணலாம்; ஆசைப்படலாம்!’ - ரஜினி குறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

``யார் வேண்டுமானாலும், கனவு காணலாம், ஆசைப்படலாம், எந்த ஒன்றையும் அடைய விரும்பலாம். இந்திய நாட்டில் அனைவருக்கும் ஜனநாயக உரிமை உண்டு" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.

ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து, ``நடிகர் ரஜினிகாந்த் கனவு காணலாம், ஆசைப்படலாம். அது இந்தியத் திருநாட்டில் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் உரிமை; அவ்வளவுதான்" என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

நாகப்பட்டினம், நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் 34,30,00,000 ரூபாய் மதிப்பில் சிறிய மீன்பிடித் துறைமுகமும், நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்துக்கு வெட்டாறு பகுதியில் 19 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு கருங்கல் சுவர் அமைக்கும் பணியையும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் நாகை எம்.பி செல்வராசு, மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன், ``வேளாண் திருத்தச் சட்டம் தமிழ்நாட்டிலுள்ள எந்த ஒரு விவசாயியையும், எந்தவொரு காலத்திலும் பாதிக்காது. தமிழ்நாட்டு விவசாயிகள் எந்தவித கஷ்டத்தையோ, நஷ்டத்தையோ, சிரமத்தையோ சந்திக்க தமிழக அரசு ஒருபோதும்  அனுமதிக்காது" என்றார்.

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

தமிழக முதல்வரை விவாதத்துக்கு அழைத்த தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``ரோட்டில் சென்றுகொண்டிருக்கும்போது கழுதை கத்தினால் பதிலுக்கு நானும் கத்த முடியுமா?" என்று பதிலளித்தார்.

அதேபோல், ரஜினி அரசியல் வருகை குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``யார் வேண்டுமானாலும் கனவு காணலாம், ஆசைப்படலாம், எந்த ஒன்றையும் அடைய விரும்பலாம். இந்திய நாட்டில் அனைவருக்கும் ஜனநாயக உரிமை உண்டு" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு