Published:Updated:

``மக்கள், முதல்வர் திருப்தி போதும், வேறு யாரையும்..!" - பி.டி.ஆர் பாய்ச்சலுக்கு ஐ.பெரியசாமி பதில்

ஐ.பெரியசாமி

``​மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள், முதல்வர் திருப்தியாக இருக்கிறார். வேறுயாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியமில்லை." - ஐ.பெரியசாமி

``மக்கள், முதல்வர் திருப்தி போதும், வேறு யாரையும்..!" - பி.டி.ஆர் பாய்ச்சலுக்கு ஐ.பெரியசாமி பதில்

``​மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள், முதல்வர் திருப்தியாக இருக்கிறார். வேறுயாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியமில்லை." - ஐ.பெரியசாமி

Published:Updated:
ஐ.பெரியசாமி

தமிழகத்தில் கூட்டுறவு வார விழா நடந்துவரும் நிலையில், ​``கொள்கை மற்றும் வரலாற்றுரீதியாக கூட்டுறவுத்துறை சிறப்பாக உள்ளது. ஆனால் தினமும் கடத்தல் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் ரெய்டுகள் நடத்தப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. நிதியமைச்சராக கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தியாக இல்லை" என​ பி.டி.ஆர் விமர்சித்திருந்தார். 

கூட்டுறவுத்துறை வாரவிழா
கூட்டுறவுத்துறை வாரவிழா

​இ​ந்த நிலையில், திண்டுக்கல்லில் நடந்த வாரவிழாவில் பி.டி.ஆருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ​``ரேஷன் கடையே தெரியாதவர்கள் சொல்வது பற்றி கவலை இல்லை​. மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள்​. முதல்வரும் திருப்தியாக இருக்கிறார்" எனக் கூறியிருக்கிறார்.

​திண்டுக்கல்லில் 69​ -வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா தாடிக்கொம்பு சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது​. இதில் தமிழக கூட்டுறவு​த்​துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்துகொ​ண்டு 37.44 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட​​ உதவிகளை வழங்கினர்.

விழாவில் பங்கேற்ற பயனாளிகள்
விழாவில் பங்கேற்ற பயனாளிகள்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ​.​பெரியசாமி,​ ```திட்டங்கள் அனைத்தும் மக்களிடையே முறையாக சேர்ந்து வருவதில் கூட்டுறவுத்துறை​ முதன்மையாக இருக்கிறது. தற்போது வரை 7,200 கோடி ரூபாய் விவசாயக் கடன், 900 கோடி ரூபாய் சுயஉதவி குழு கடன் வழங்கப்பட்டிருக்கிறது. நமது கூட்டுறவு தானிய கிடங்கில் 33 சதவிகிதம் தானியங்களை வைத்துகொண்டு இந்தியாவில் எங்கு விலை அதிகமோ அங்கு விற்க முடியும். இதில் தமிழகம்தான் முதலாவதாக உள்ளது. இதற்காக மத்திய அரசு பாராட்டி கேடயம் அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சிறப்பாகச் செயல்பட்ட கூட்டுறவு வங்கிகளில் நாம் டெபாசிட் உட்பட சிறப்பாக செயல்படுவதற்கும் பாராட்டப்படுகிறோம். அரசு நிதியை எதிர்பார்க்காமல் கூட்டுறவில் வரும் லாபத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க விரைவில் அறிவிப்பு வெளியாகும். 

இதில் வெளிப்படைத்தன்மை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். குறைகள் வரவேற்கப்படுகின்றன... குறைகள் எங்கே நடக்கின்றன என்று சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் பி.டி.ஆர் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ``அவரைக் கேளுங்கள் என்ன நடந்தது, எங்கே தவறு நடந்தது என்று. அவர் திருப்தி அடையவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. மக்கள் திருப்தி அடைய வேண்டும். எனக்கும் அமைச்சர் சக்கரபாணிக்கும் 7 கோடி மக்கள் திருப்தி அடைய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் திருப்தி அடைய வேண்டும். வேறு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

​நான் 50 ஆண்டுக்காலம் அரசியலில் இருக்கிறேன்​,​ அமைச்சர் சக்கரபாணி 35 ஆண்டுக்காலம் அரசியலில் இருக்கிறார். ஆறுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மக்களின் திருப்திதான் எங்களுக்கு திருப்தி. எந்த திட்டமாக இருந்தாலும் மக்களின் கைகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 

​அதுதான் எண்களின் வேலை. நாங்கள் இருவரும் வேலைக்காரர்கள். மக்களுக்கு எங்கள்மீது நம்பிக்கை இருக்க வேண்டும், அவர்கள் திருப்தி அடைய வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.​ ​இது மக்களுக்கான துறை. உணவுப்பொருள் வழங்கல் துறையும் அதற்காகவே உள்ளது. எங்காவது குறை இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் மாலை போட்டு உங்களுக்கு மரியாதை செய்வோம்.

வாரவிழா
வாரவிழா

​குறையை நீங்கள் சொன்னால் நாங்கள் சந்தோஷப்படுவோம். மக்கள்தான் திருப்தி அடைய வேண்டும். ரேஷன் கடையை பற்றி தெரியாதவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் நிதியே கேட்கவில்லை. அவரையே கேளுங்கள். ​​மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள், முதல்வர் திருப்தியாக இருக்கிறார். அதற்காகத்தான் எங்களை அமைச்சராக்கி இருக்கிறார். பெருமைக்காக​,​ சுயலாபத்திற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. பொதுநல நோக்கோடு அரசியலுக்கு வந்தவர்கள்" ​என்றார். ​