Published:Updated:

``அவங்க போன காரணம் வேற; வெளியில வந்து பேட்டி கொடுத்தது வேற!" - இபிஎஸ் குறித்து அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

"அவங்க கட்சிக்குள்ள அடிச்சிக்கிறாங்களே அதை எப்படியாவது கவர்னரிடம் சொல்லி, உள்துறை அமைச்சரிடம் கூறி சரிபண்ண முடியுமா... என்பதற்காகத்தான் போனாரே தவிர, இதெல்லாம் சும்மா..." - பொன்முடி

``அவங்க போன காரணம் வேற; வெளியில வந்து பேட்டி கொடுத்தது வேற!" - இபிஎஸ் குறித்து அமைச்சர் பொன்முடி

"அவங்க கட்சிக்குள்ள அடிச்சிக்கிறாங்களே அதை எப்படியாவது கவர்னரிடம் சொல்லி, உள்துறை அமைச்சரிடம் கூறி சரிபண்ண முடியுமா... என்பதற்காகத்தான் போனாரே தவிர, இதெல்லாம் சும்மா..." - பொன்முடி

Published:Updated:
அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம், வேம்பி ஊராட்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் நலத்திட்டங்களை வழங்கும் அரசு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தைத்தான் இன்று இந்த கிராமத்திலே தொடங்கிவைத்திருக்கிறோம். ஆற்றுப் பாசனம் அதிகம் இல்லாத பகுதிகளில் தரிசு நிலங்களே அதிகமாக இருக்கும். நம் பகுதிகளிலெல்லாம் தரிசு நிலங்கள்தான். எனவே, தரிசு நிலங்களில் உரிய மண் பரிசோதனை செய்து, விளைநிலங்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

பொன்முடி
பொன்முடி

அதனடிப்படையில், இன்றைக்கு 273 கிராமங்களில் இந்தத் திட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,000 ஹெக்டேர் நிலங்களைக் கண்டறிந்து, தரிசு நிலமா என்று ஆய்வுசெய்து, பயிர் செய்வதற்கு ஏற்பாடு செய்துவருகிறோம். தி.மு.க-தான் விவசாயிகளின் நலனைக் கருதிச் செயல்படும் அரசு" என்றார்.

`தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, ஆளுநரைக் குறை கூறும் அரசாக தி.மு.க இருக்கிறது' என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "அவர் எல்லாம் சொல்லுவார். துப்பாக்கிச்சூட்டையே டி.வி-யில் பார்த்துத் தெரிந்துகொண்டேன் என்று சொன்னவர் அவர். அவர் ஆளுநரைப் பார்க்கப் போனதே இதற்கு அல்ல. அவங்க கட்சிக்குள்ள அடிச்சிக்கிறாங்களே அதை எப்படியாவது ஆளுநரிடம் சொல்லி, உள்துறை அமைச்சரிடம் கூறி சரிபண்ண முடியுமா என்பதற்காகத்தான் போனாரே தவிர, இதெல்லாம் சும்மா...

எடப்பாடி பழனிசாமி - ஆர்.என்.ரவி
எடப்பாடி பழனிசாமி - ஆர்.என்.ரவி

அரசியல் பேசணுமே என்பதற்காகப் பேசினாரே தவிர, வேறேதும் கிடையாது. அவங்க ஆளுநரைப் பார்க்கப் போன காரணம் வேற, வெளியில வந்து பேட்டி கொடுத்தது வேற" என்றார்.