Published:Updated:

``நான் விளையாட்டுத்தனமாக சும்மா பேசினேன்..!'' - `ஓசி பயணம்' சர்ச்சைப் பேச்சுக்கு பொன்முடி விளக்கம்

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

``பெண்களின் இலவசப் பயணம் குறித்து நான் விளையாட்டுத்தனமாக, சும்மா பேசியதைப் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்கள்." - அமைச்சர் பொன்முடி

Published:Updated:

``நான் விளையாட்டுத்தனமாக சும்மா பேசினேன்..!'' - `ஓசி பயணம்' சர்ச்சைப் பேச்சுக்கு பொன்முடி விளக்கம்

``பெண்களின் இலவசப் பயணம் குறித்து நான் விளையாட்டுத்தனமாக, சும்மா பேசியதைப் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்கள்." - அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்தாய்வைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றிருக்கிறது. வரும் அக்டோபர் 13-ம் தேதி மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவிருக்கிறது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

மேலும் நான்காவது கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்ற பிறகு அக்டோபர் இறுதியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும். நீட் தேர்வு போன்ற காரணங்களால் பொறியியல் கலந்தாய்வு மற்றும் வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது'' என்றார்.

அதைத் தொடர்ந்து, `பேருந்தில் பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள்' என்ற அமைச்சரின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ``பெண்களின் இலவசப் பயணம் குறித்து நான் விளையாட்டுத்தனமாக, சும்மா பேசியதைப் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை நான் எந்தத் தவறான எண்ணத்திலும் பேசவில்லை'' என்றார்.