Published:Updated:

``உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்பதை நானும் எதிர்பார்க்கிறேன்!" - அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

``உதயநிதி ஸ்டாலினுக்கு ஒன்றரை வருடங்கள் தாமதமாகவே அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது." - பொன்முடி

``உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்பதை நானும் எதிர்பார்க்கிறேன்!" - அமைச்சர் பொன்முடி

``உதயநிதி ஸ்டாலினுக்கு ஒன்றரை வருடங்கள் தாமதமாகவே அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது." - பொன்முடி

Published:Updated:
அமைச்சர் பொன்முடி

சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டபோது, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்தத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று, ஸ்டாலின் முதல்வரானார். அதேபோல, உதயநிதியும் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்றார். அப்போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பேசப்பட்டது. இந்த நிலையில், உதயநிதி வரும் 14-ம் தேதி காலை 9:30 மணியளவில் அமைச்சராகப் பதவியேற்கவிருப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.

உதயநிதி, ஸ்டாலின்
உதயநிதி, ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின்பேரில் உதயநிதியை அமைச்சராக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ``உதயநிதி ஸ்டாலினுக்கு ஒன்றை வருடங்கள் தாமதமாகவே அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

என்னைக் கேட்டால் அவருக்கு முன்னரே அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், தேர்தலில் அவர் அவ்வளவு வேலை செய்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரை திரைத்துறை முதல் அரசியல் வரை அனைத்திலும் திறமையாகச் செயல்படுபவர். மாணவர்கள், இளைஞர்களின் எல்லாவிதமான எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற துடிப்போடு செயலாற்றுகிறவர்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

அவருக்கு எந்தத் துறை வழங்கப்படும் என்பதை முதல்வர் நாளை அறிவிப்பார். வாரிசு அரசியல் என்பது முதல்வர் ஸ்டாலின் காலத்திலிருந்தே சொல்லப்படுகிறது. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடலை நிலைநிறுத்த எல்லா வகையிலும் உதயநிதி செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது என தி.மு.க-வைச் சேர்ந்த யாரும் சொல்லவில்லை. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பதை நானும் எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.