தமிழக பா.ஜ.க-வையும் ரஜினியையும் ‘அப்படி ஓரமா போய் விளையாடுங்கப்பா...’ என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நேருக்கு நேர் உக்கிரமாக மோத ஆரம்பித்திருக்கின்றன. கொடும்பாவி எரிப்பு, ஆபாச அர்ச்சனை, வன்முறை மிரட்டல் என அரசியல் களம் சூடுபறந்துகொண்டிருக்கும் நேரத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பேசினோம்...

‘‘2ஜி வழக்கில் நீதிமன்றமே விடுதலை செய்துவிட்ட பிறகும்கூட, ஆ.ராசாவை நீங்கள் குற்றவாளியாகச் சித்திரிப்பது எந்தவகையில் நியாயம்?’’

‘‘சாதிக் பாட்சா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், ஆ.ராசா குற்றவாளியாகி தண்டனைக்கு ஆளாகியிருப்பார் என்பது உலகுக்கே தெரியும். தான் தப்பிப்பதற்காக, தன் நண்பனையே பலிகொடுத்தவர்தான் ஆ.ராசா.

மு.க.ஸ்டாலினை 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர் சந்தித்து பணப் பரிவர்த்தனை நடந்தபோது, ஆ.ராசாவும் சாதிக் பாட்சாவும் உடனிருந்தார்கள். சி.பி.ஐ விசாரணையின்போது சாதிக் பாட்சா தங்களைக் காட்டிக்கொடுத்து விடுவார்; கோர்ட்டில் சாட்சி சொல்லிவிடுவார் என்று பயந்து, திட்டமிட்டு அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்குத் தூண்டியவர்கள் இவர்கள். எனவே, மனசாட்சிப்படி ஆ.ராசா குற்றவாளிதான்!’’

‘‘விடுதலை செய்யப்பட்டவரைக் குற்றவாளி என்கிறீர்கள்... நீதிமன்றத்தால் ‘ஏ1’ குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவை நிரபராதி என்கிறீர்கள்... எப்படி?’’

‘‘சட்டத்துக்குத் தேவை நான்கு சாட்சிகள் மட்டும்தான். சட்டத்தின் சந்துபொந்துகள் வழியே வெளியேறி வந்தவர்கள் ஒன்றும் நிரபராதியும் கிடையாது; நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுபவர்கள் அனைவரும் குற்றவாளிகளும் கிடையாது. சர்ச்பார்க் கான்வென்ட்டில் படித்த காலத்திலிருந்தே அம்மாவின் குடும்பம், செல்வச் செழிப்புமிக்க குடும்பம்தான். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில், திட்டமிட்ட பொய்சாட்சிகளுக்கு முன்பு, புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மா குற்றவாளியாகச் சித்திரிக்கப்பட்டுவிட்டார். ஆ.ராசா, மு.க.ஸ்டாலின் போன்றவர்களோ 2ஜி வழக்கில் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டவர்கள்.’’

‘‘சொத்துக்குவிப்பு வழக்கில், சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவும் நிரபராதிதான் என்கிறீர்களா?’’’

‘‘தி.மு.க ஆட்சியின்போது, எங்களைப் பழிவாங்குவதற்காகப் போடப்பட்ட பயங்கரமான பொய் வழக்குதான் இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கு. அன்றைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உதவியோடு தனி நீதிமன்றம் அமைத்து, தவறு செய்த அரசு அதிகாரிகளையே அப்ரூவர்களாக மாறச் செய்து, முன்னுக்குப் பின் முரணான சாட்சிகளைத் தயார்செய்துவிட்டனர். சட்டத்தின் முன்பு சில நேரங்களில், சாட்சிகளால் நீதி செத்துவிடும். எனவே, இந்த வழக்கில் பலிகடாவாக்கப்பட்ட அனைவருமே நிரபராதிகள்தான்.’’

‘‘எதிர்க்கட்சியினரை ‘வெளியில் நடமாட முடியாது’ என்று மிரட்டுவது... தரம் தாழ்ந்த வார்த்தைகளில் விமர்சிப்பது... என வரம்பு மீறிப் பேசுகிறீர்களே...?’’

‘‘நீங்கள் சொல்வது சரி... ஆனால், முதலில் மிரட்டியது யார்? ‘அ.தி.மு.க மந்திரிகள் ஊரில் நடமாட முடியாது, புழல் சிறைக்கு அனுப்புவோம், கோவை, மதுரை சிறைக்கு அனுப்புவோம்’ என்றெல்லாம் மிரட்டினாரே ஸ்டாலின். நாங்கள் என்ன தப்பு செய்துவிட்டோம்... இல்லை, இவர்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியா?

இறந்துபோன தலைவர்களை மரியாதையாகப் பேச வேண்டும். ‘கலைஞர்’ என்றுதானே இப்போதுவரை நான் பேசிவருகிறேன். ஆனால், எங்கள் புரட்சித் தலைவியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தரம்கெட்ட வார்த்தையில் ஆ.ராசா விமர்சித்தாரே... அதைக் கேட்டுக்கொண்டு கைகட்டி, வாய் பொத்தி நிற்க நாங்கள் ஒன்றும் பயந்தவர்கள் கிடையாது. அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுப்பதுதான் எனது வேலை!’’

‘‘2021 தேர்தலின் பேசுபொருளாக ‘ரஜினி - பா.ஜ.க’ இருக்கக் கூடாது என்பதற்காகவே ‘தி.மு.க - அ.தி.மு.க’ இந்தக் காரசார மோதலைத் தொடங்கியிருக்கின்றனவா?’’

‘‘அப்படியெல்லாம் கிடையாது. புரட்சித் தலைவரும் தலைவியும் சினிமாவில் மட்டுமே நடிப்பை வைத்துக்கொண்டார்கள். அவர்களது வழியில் வந்த எங்களுக்கும், அரசியலில் நடிக்கவோ, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கவோ தெரியாது. மக்களுக்கு உண்மையாக உழைக்கிற எங்களுக்குத் தான் மக்கள் வாக்களிப்பார்கள். எனவே, தி.மு.க அழியப்போகிறது; அ.தி.மு.க மறுபடியும் ஆளப்போகிறது.’’

‘‘ஆனால் ‘எல்லாவற்றையும் மாத்துவோம்... அதிசயம் அற்புதம் நிகழும்’ என்கிறாரே ரஜினிகாந்த்?’’

‘‘ரஜினி, தன் பின்னால் வரக்கூடிய ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காகப் பயன்படுத்திய வார்த்தைகளாகவே இதைப் பார்க்க வேண்டும். ரஜினியின் கருத்துகளை ஆழமாக ஊன்றிப் பார்த்தால், தெய்வ நம்பிக்கையற்ற, தி.மு.க போன்ற கட்சிகளுக்கு எதிரான ஆன்மிக அரசியலைத்தான் முன்வைத்துவருகிறார்.’’

‘‘அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும் என்று அ.தி.மு.க-தான் சொல்கிறது. அமித் ஷாவோ எல்.முருகனோ ஆமோதிக்கவில்லையே?’’

‘‘அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி கிடையாது என்றும்தான் அமித் ஷா சொல்லவில்லை. இதுவே அவர் ஏற்றுக்கொண்டார் என்பதைத்தானே சொல்கிறது. தேசியக் கட்சிகளைப் பொறுத்த வரையில், கூட்டணி குறித்த முடிவுகளை டெல்லியில்தான் எடுப்பார்கள்.’’

‘‘அ.தி.மு.க - ரஜினி இடையிலான கூட்டணி குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறதே..?’’

‘‘செய்தியாளர்கள் கேட்கிற கேள்விகளுக்கு சில நேரங்களில், ஒருசில வார்த்தைகளில் தலைவர்கள் பதிலளிப்பதை வைத்துக்கொண்டு, நீங்களாக ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. கட்சியின் ஒருங் கிணைப்பாளர் சொல்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்; இணை ஒருங்கிணைப்பாளர் சொல்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். இந்த இருபெரும் தலைவர்கள் சொல்வதுதான் அ.தி.மு.க-வின் கருத்து.’’