Published:Updated:

அ.தி.மு.க - அ.ம.மு.க விரைவில் இணையும்!

 ராஜேந்திர பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
ராஜேந்திர பாலாஜி

- ஆரூடம் சொல்லும் ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.க - அ.ம.மு.க விரைவில் இணையும்!

- ஆரூடம் சொல்லும் ராஜேந்திர பாலாஜி

Published:Updated:
 ராஜேந்திர பாலாஜி
பிரீமியம் ஸ்டோரி
ராஜேந்திர பாலாஜி
‘குற்றாலத்துக்குக் குளிக்கப் போவோம் வர்றியா?’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினைக் கலாய்ப்பதில் ஆரம்பித்து, தி.மு.க குடும்பப் பஞ்சாயத்துகள் வரை மேடைக்கு மேடை வறுத்தெடுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், தற்போதைய அரசியல் சூழல் குறித்துச் சில கேள்விகளை முன்வைத்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘உங்கள் அரசுமீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துகிறாரே?’’

‘‘முதல்வர் பதவிக்கு வர முடியாத ஆதங்கத்தில் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். டெண்டர் கிடைக்காத ஒரு சிலருடன் சேர்ந்துகொண்டு, ஆட்சிக்கு எதிராக ஊளைச் சத்தம் எழுப்பியபடி ஸ்டாலின் போடும் நாடகம்தான் இந்தக் காட்சிகள். இதில் எள்ளளவும் உண்மையில்லை. ஸ்டாலினை காமெடி பீஸாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். இவ்வளவு பேசுகிறாரே, இவர் யோக்கியனா? கலைஞரே தன்னுடைய சுயசரிதையில், ‘கோயம்புத்தூர்ல இருக்கும்போது, சொந்தமா நாலு முழ வேட்டிகூட இல்லாத எனக்கு, எம்.ஜி.ஆர்-தான் வேட்டி வாங்கிக் கொடுத்தார்’ என்று எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட குடும்பத்துக்கு இவ்வளவு சொத்துகள், இத்தனை டி.வி சேனல்கள், பத்திரிகைகள், வெளிநாட்டு கார்கள் எல்லாம் எப்படி வந்தன?

தி.மு.க ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்தது. இரண்டு ஏக்கர் நிலம் தருவதாகச் சொன்னவர்கள், செய்யவில்லை. பொய் பேசுவதையே தொழிலாகவைத்திருக்கிறார் ஸ்டாலின். பிரசாந்த் கிஷோர் எழுதிக் கொடுப்பதை வாசிப்பவரை மக்கள் நம்புவதாக இல்லை. அவரின் சொந்த அண்ணன் மு.க.அழகிரியே, ‘ஸ்டாலின் எனக்குத் துரோகம் இழைத்துவிட்டார்’ என்று சொல்கிறார். ஸ்டாலினுக்கு ஒரு பிரச்னை வந்தால், உடன் பிறந்த கனிமொழியை ஜெயிலுக்கு அனுப்புவார்; அழகிரியை வீட்டுக்கு அனுப்புவார். தன் வளர்ச்சிக்காக எந்த எல்லைக்கும் செல்பவர்தான் ஸ்டாலின்.’’

‘‘அ.தி.மு.க கூட்டணியில் குழப்பமா... இன்றுவரை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக உங்கள் கூட்டணியிலுள்ள கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லையே?’’

‘‘எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் கிடையாது. இது பெரிய கூட்டணி. எல்லோருக்கும் சுதந்திரமாகக் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. சீட் பேச்சுவார்த்தை முடிவு பெறாமல், ‘முதல்வர் வேட்பாளர்’ என்பதை அவர்களால் எப்படி அறிவிக்க முடியும்? ‘கொடுப்பதைத்தான் வாங்கிக்கொள்ள வேண்டும்; தி.மு.க சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்’ என்று ஸ்டாலின் போடும் சர்வாதிகார உத்தரவுகளை அங்குள்ள கூட்டணித் தலைவர்கள் யாரும் ரசிக்கவில்லை. தி.மு.க கூட்டணி உடைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை, ஜனவரி மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தைகள் முடிந்து, பிப்ரவரி ஆரம்பத்தில் கூட்டணிப் பிரசாரத்தை ஆரம்பித்துவிடுவோம்.’’

 ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

‘‘பா.ஜ.க உங்களுடன் இருப்பது பலமா... பலவீனமா?’’

‘‘பா.ஜ.க எங்களுடன் இருப்பது பலம்தான். மத்திய அரசின் கரம்பிடித்துப் போவதுதான் மாநில அரசுக்கு பலம். அப்போதுதான், மத்திய அரசின் நிறைய சலுகைகளைப் பெற முடியும். பா.ஜ.க உடனிருந்தால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் பறிபோய்விடும் என்று கூறுவது சுத்த அபத்தம். தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்கும் முதல்வர் சென்றிருக்கிறார். மத நல்லிணக்கத்தை அ.தி.மு.க எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை. அண்ணன்கள் எடப்பாடியும் பன்னீர்செல்வமும் ஒற்றுமையாக வெற்றியின் இலக்கை நோக்கிப் பயணிக்கிறார்கள்.’’

‘‘சசிகலா விரைவில் விடுதலையாகப்போகிறார். அரசியல்ரீதியாக என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?’’

‘‘தி.மு.க தொடுத்த பொய் வழக்கில்தான் அவர் சிறை சென்றார். சசிகலா விடுதலையாகி வெளியே வந்த பிறகு, தி.மு.க-வுக்குச் சாதகமான எந்த முடிவையும் எடுக்க மாட்டார். அ.தி.மு.க-வுக்கு பலம் கொடுக்கும் முடிவைத்தான் சசிகலா எடுப்பார்.’’

‘‘அப்படியென்றால், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா அமர்வார் என்று பொருள் கொள்ளலாமா?’’

‘‘அது, அண்ணன்கள் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. ஆனால், சசிகலா எடுக்கும் முடிவு அ.தி.மு.க-வுக்கு பலமாக மட்டுமே இருக்கும் என்பது மட்டும் உறுதி.’’

‘‘ஆனால், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உங்களுக்கு எதிராக வேட்பாளர்களைக் களமிறக்க ஆயத்தமாகிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள்... தி.மு.க ஆட்சிக்கு வருவதை தினகரன் விரும்புவாரா? தாய் இல்லாத நேரத்தில் அண்ணன், தம்பிகளுக்குள் சண்டை நடப்பது இயல்பு. நல்ல நிகழ்ச்சிகள் வரும்போது வேற்றுமையை மறந்து ஒன்றுசேர்ந்துவிடுவார்கள். அதுபோலத்தான், அ.தி.மு.க - அ.ம.மு.க இடையில் நடப்பது பங்காளிச் சண்டை. தேர்தல் வரும்போது, இணையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. பிரச்னைகளைப் பேசித் தீர்க்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. ஏதும் விபரீதமாக நடக்க வாய்ப்பில்லை.’’

‘‘உங்கள்மீது சாத்தூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜவர்மன் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை எழுப்புகிறாரே..?’’

‘‘அவர் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வதற்காக என்னைத் தாக்குகிறார். தி.மு.க பின்னணியிலிருக்கும் தைரியத்தில் ராஜவர்மன் இதுபோலப் பேசிவருகிறார்.

எம்.எல்.ஏ ஆன பிறகு, அவர் படமெடுத்து ஆடியதால்தான் கட்சியிலிருந்து ஓரங்கட்டி வைத்தேன். அந்த வயிற்றெரிச்சலில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார். நான் யார் என்பது கட்சித் தலைமைக்கும், தொகுதி மக்களுக்கும் தெரியும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism