Published:Updated:

`பாகிஸ்தான் செய்யும் வேலையை எதிர்க்கட்சிகள் செய்கின்றன!' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

இனி ஆண்டுதோறும் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர்
அமைச்சர் ( ஆர்.எம்.முத்துராஜ் )

பாகிஸ்தான் வெளியில் இருந்து செய்யும் வேலையை இங்குள்ள எதிர்க்கட்சிகள் செய்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

விருதுநகரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``கடந்த 5 ஆண்டுகளாகக் கொள்முதல் விலை ஏற்றப்படாமலும், பால் விலை உயர்த்தப்படாமலும் இருந்தது. தற்போது கால்நடை தீவனங்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளோம். இந்த விலைஉயர்வு மக்களைப் பாதிக்காது.

தனியார் நிறுவனங்களும் இனி கொள்முதல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது. இனி ஆண்டுதோறும் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள எதிர்க்கட்சிகள் இந்திய இறையான்மைக்கு எதிராகச் செயல்படுகின்றன. காஷ்மீர் விவகாரத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருத்தும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கருத்தும் ஒன்றாகவே உள்ளது. பாகிஸ்தான் வெளியில் இருந்து தீவிரவாதத்தைத் தூண்டி வருகிறது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

இங்கே உள்ள எதிர்க்கட்சிகள் பேச்சுரிமை என்ற பெயரில் இங்கிருந்தே இந்திய இறையாண்மைக்கு எதிராக மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றன. பாகிஸ்தான் வெளியே இருந்து இந்தியாவுக்கு எதிராகச் செய்யும் சதி வேலைகளை இங்குள்ள எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்குள்ளே இருந்து செய்கின்றன” எனத் தெரிவித்தார்.

`தி.மு.க-வை இரண்டாகப் பிரித்துவிடுவோம்!' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி