Published:Updated:

`முஷாரப்புக்கு அளித்த தண்டனை கொடுமையானது' - வருத்தப்படும் ராஜேந்திர பாலாஜி!

``பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை மிகவும் கொடுமையானது.''

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி ( ஆர்.எம்.முத்துராஜ் )

''உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டிவிடுவதற்காக ஸ்டாலின், சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் திட்டம் தீட்டி வருகிறார்கள் என்ற தகவல் எனக்குக் கிடைத்துள்ளது'' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசும்போது, ''உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நல்லாட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறர்கள். அ.தி.மு.க-வை வெல்வதற்கு இனி ஒரு கட்சி பிறந்து தான் வர வேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மக்களிடம் பீதியைக் கிளப்பிவிடுகிறார்கள். ஸ்டாலினைப் பொறுத்தவரை எரிந்த வீட்டில் பிடுங்க நினைக்கிறார். மொழி, இனப்பிரச்சினையைத் தூண்டிவிட வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

மம்தா பானர்ஜி நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஆதரித்து அந்த மாநிலத்தில் தீவிரவாதத்தை உருவாக்குகிறார். மம்தா கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் மேற்கு வங்காளம் சுடுகாடாகிவிடும்.

இந்தியாவுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் மத்திய மாநில அரசுகள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
ஆர்.எம்.முத்துராஜ்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை மிகவும் கொடுமையானது. அவர் பாகிஸ்தான் இறையாண்மைக்கு எதிராக எதுவும் செய்ததாகத் தெரியவில்லை'' என்று உள்ளூரில் ஆரம்பித்து தேசிய அரசியல், உலக அரசியல் வரை கருத்து கூறினார்.