ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தாலும், ‘பயணங்கள் முடிவதில்லை!’ என்கிறார்கள் அமைச்சர்கள். அடுத்தடுத்து இஸ்ரேல், கனடா என்று பறப்பதற்குத் தயாராகிவருகிறார்கள். விமர்சனங் களுக்கு எல்லாம் அஞ்சாமல் நாள் ஒன்றுக்கு 70 லிட்டர் பால் கறக்கும் மாட்டின் அருமைபெருமைகளை அடுக்குகிறார் ‘விவசாயி’ எடப்பாடி பழனிசாமி! இந்த நிலையில், முதல்வருடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, மதுரை வந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பயணம்பற்றி சில கேள்விகளை முன்வைத்தோம்.

“இந்த சுற்றுப்பயணத்தில் எவ்வளவு கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன?’’

“முதல்வரின் 13 நாள்கள் சுற்றுப்பயணத்தில் 41 தொழில் நிறுவனங்களுடன் 8,300 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் 35,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.’’

“மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது குறைவு என்கிறார்களே?’’

“பெயருக்கு ஒப்பந்தம் போடாமல், சாத்தியக்கூறுகள் உள்ள தொழில்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. குறுகிய நாள்களில் வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் இந்தளவு முதலீடுகளைப் பெறுவது சாதாரண விஷயமல்ல. சொல்லப்போனால் இது ஆரம்பம்தான். இன்னும் பல நாடுகளுக்குச் சென்று முதலீடுகளைப் பெற உள்ளோம்.’’

“முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறதே?”

“எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்குச் சென்றதை விமர்சிக்கிறார்கள். ஆனால், ஆந்திர முதல்வர் ஒவ்வொரு மாதமும் அமெரிக்கா சென்று முதலீடுகளைப் பெறுகிறார். தெலங்கானா முதல்வர் அமெரிக்காவிலேயே அமைச்சர் ஒருவரை அமரவைத்து முதலீடுகளைப் பெறுகிறார். நாம் இப்போதுதான் முதல்முறையாகச் சென்றிருக்கிறோம். இதன்மூலம் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அடுத்து, காலத்தால் அழியாத மாபெரும் தலைவராக எடப்பாடி உருவெடுத்துள்ளார். விமர்சனங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை.”

“ஆனால், ஒரேநேரத்தில் இவ்வளவு அமைச்சர்கள் வெளிநாட்டுக்குச் சென்றது சரியா?”

“முதலமைச்சருடன் மற்ற அமைச்சர்கள் அவரவர் துறை சார்ந்த திட்டங்களுக்காக வெளிநாடு சென்றனர். இதில் என்ன தவறு?’’

“மாறுபட்ட காலநிலை, புதிய மனிதர்கள் இவற்றை எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்கொண்டார்?’’

“மக்கள்மீது அக்கறை கொண்டவர் களுக்கு இவையெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. முதல்வர் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிடுவார். நாங்கள் தாமதமாக கிளம்பினாலும் எங்களுக்காகக் காத்திருப்பார். முதலீட்டாளர்கள் மத்தியில் நிறைய பேசி நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஒருநாள்கூட அவர் ஓய்வெடுக்க வில்லை. அவரைப் பார்த்து, அங்குள்ள மக்கள் ‘எப்படி உங்களால் இப்படி சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது?’ என்று ஆச்சர்யப்பட்டு கேட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!’’

“உங்கள் ஐ.டி துறை சார்ந்து எவ்வளவு முதலீடு பெற முடிந்தது?’’

“கலிஃபோர்னியா, சான்பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களிலிருந்து மூவாயிரம் கோடி அளவுக்கு முதலீடு கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் வங்கி திறக்க ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார். மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கவும் தமிழர் ஒருவர் இசைவு தெரிவித்துள்ளார்.’’

“நீங்கள் சென்ற நாடுகளில் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?”

“இந்தியத் தூதரகம்மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் அரசு அதிகாரிகள் சிறப்பாக உதவிகளைச் செய்தார்கள். தவிர, நமது முதல்வருக்கு விமான நிலையங்களில் சோதனைக்கு விதிவிலக்கு அளித்தார்கள். ஆனால், நம் முதல்வர்தான் தானாக முன்வந்து சோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.”

“அமெரிக்காவில் நீங்கள் பார்த்து வியந்த விஷயம்?”

“அங்குள்ள மக்கள் விதிகளை மதிக்கிறார்கள். எந்த சிக்னலிலும் காவல்துறையினரைப் பார்க்க முடியவில்லை.

ஆனால், யாரும் சாலை விதிகளை மீறுவதில்லை. தவிர, எங்கு பார்த்தாலும் 12 வழிச்சாலைகள், 16 வழிச்சாலைகள், கடலுக்குள் சாலைகள், மிகப்பெரிய மேம்பாலங்கள் என்று பிரமிக்க வைக்கின்றன! ஆனால், இங்கு ஒரு எட்டு வழிச்சாலை அமைக்கக்கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.’’

“எடப்பாடியை எட்டாவது அதிசயம் என்று நீங்கள் கூறியதற்கு, உங்களை, ஒன்பதாவது அதிசயம் என்று தினகரன் கூறியுள்ளாரே?”

“ஆமாம்... நான் ஒன்பதாவது அதிசயம்தான். அது வஞ்சப்புகழ்ச்சியாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.”

“வெளிநாட்டுப் பயணம்பற்றி ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டிருக்கிறாரே?’’

“சட்டசபையில் 110 விதி அறிவிப்புக்கே வெள்ளை அறிக்கை கேட்பவர், முதலமைச்சர் கடல்கடந்து சாதித்துவிட்டு வந்துள்ளதற்கு கேட்காமல் இருப்பாரா? எடப்பாடியாரின் முயற்சியை உலகத் தமிழர்கள் பாராட்டி வரும் நிலையில், அது பொறுக்காமல் கூப்பாடு போடத் தொடங்கிவிட்டார் ஸ்டாலின்.’’