Published:Updated:

``தருமபுரம் விவகாரத்தில் ஆதீனங்களுடன் பேசி முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்” - அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர்பாபு

`தருமபுரம் விவகாரம் தொடர்பாக ஆதீனங்களுடன் பேசி அரசு சுமூக தீர்வு காணும்' என அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

``தருமபுரம் விவகாரத்தில் ஆதீனங்களுடன் பேசி முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்” - அமைச்சர் சேகர்பாபு

`தருமபுரம் விவகாரம் தொடர்பாக ஆதீனங்களுடன் பேசி அரசு சுமூக தீர்வு காணும்' என அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அமைச்சர் சேகர்பாபு

தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கத் தடை விதிக்கப்பட்டதற்கு சட்டப்பேரவையில் அதிமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது. தருமபுர பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக்கொள்ள முடியாது. பட்டினப்பிரவேசத்தை நடத்த வேண்டும் என சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசினார். மேலும் அதிமுக பாஜக, பாமகவினர் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

இதைத்தொடர்ந்து, தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் விளக்கம் கொடுத்தார். அப்போது பேசிய அவர், ``தருமபுரம் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள். ஆதீனங்களுடன் மூன்று மணி நேரம் இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கடந்தவாரம் முதலமைச்சரை சந்தித்து விட்டு இது ஆன்மீக அரசு என பாராட்டியிருந்தனர். மே 22-ம் தேதியில் தான் பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. தருமபுரம் விவகாரத்தில் ஆதீனங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும். ஆதீனங்களுடன் பேசி விரைவில் நல்ல முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism