Published:Updated:

``இறைவன் சொத்து இறைவனுக்கே; கோயில் நிலத்துக்குப் பட்டா வழங்க முடியாது!''- அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர்கள் ஆய்வு
அமைச்சர்கள் ஆய்வு

அறங்காவலர் குழு அமைப்பதற்கான சட்ட விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளனா. மூன்றாண்டுகள் இருந்த குழுவின் கால அளவு தற்போது இரண்டாண்டுகளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் வரும் 16-ம் தேதியிலிருந்து தொடங்கப்படவிருக்கிறது. அதையொட்டி, சமயபுரம் கோயிலிலுள்ள அன்னதான மண்டபத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கோயிலில் ஆய்வு
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கோயிலில் ஆய்வு

அதேபோல், திருவானைக்கோயில் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயிலில், கோயில் யானைக்காக அமைக்கப்பட்டுள்ள குளியல் தொட்டியையும், அதில் யானை குளிப்பதையும் அமைச்சர்கள் நேரு, சேகர் பாபு இருவரும் பார்வையிட்டனர். கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசினர்.

அமைச்சர்கள் ஆய்வு
அமைச்சர்கள் ஆய்வு

``ஐந்தாண்டுகள் கோயில்களில் யானைப் பாகன்களாகப் பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதைச் செயல்படுத்தவில்லை

தற்போது விவரங்களைத் திரட்டி விரைவில் அனைவருக்கும் பணி நிரந்தர ஆணை வழங்கப்படும். தமிழ்நாட்டில் 180 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்ட திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். யார் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

`எடப்பாடி பக்கம் திரும்பும்`வாளையார்' மனோஜ் முதல் சசிகலாவின் சமாதான முயற்சி வரை'- கழுகார் அப்டேட்ஸ்!
ஆய்வு
ஆய்வு

`இறைவன் சொத்து இறைவனுக்கே' என்கிற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும். கோயில்களிலுள்ள அறங்காவலர் குழுவில் ஏதேனும் பிரச்னை என்றால் அதற்குரிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அறங்காவலர் குழு அமைப்பதற்கான சட்ட விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகள் இருந்த குழுவின் கால அளவு தற்போது இரண்டாண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் குழுவில் உறுப்பினராக வாய்ப்பு கிடைக்கும்.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர்கள் ஆய்வு
அமைச்சர்கள் ஆய்வு

திருக்கோயில் நிலங்கள் மன்னர்கள், ஜமீன்தார்கள் இனாமாகக் கொடுத்தவை. அந்த நிலங்களுக்குப் பட்டா கொடுக்க இயலாது. மயிலாடுதுறையில் அவ்வாறாகப் பட்டா கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, தற்போது பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு