Published:Updated:

``இது ஆன்மிக புரட்சி ஏற்படுத்துகின்ற ஆட்சி" - மண்டைக்காடு கோயிலில் அமைச்சர் சேகர் பாபு பேச்சு

அமைச்சர் சேகர் பாபு மண்டைக்காட்டில் ஆய்வு

மண்டைக்காடு மாநாடு சம்பந்தமாக பா.ஜ.க முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான இந்து அமைப்பினருடன் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் சேகர் பாபு பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

Published:Updated:

``இது ஆன்மிக புரட்சி ஏற்படுத்துகின்ற ஆட்சி" - மண்டைக்காடு கோயிலில் அமைச்சர் சேகர் பாபு பேச்சு

மண்டைக்காடு மாநாடு சம்பந்தமாக பா.ஜ.க முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான இந்து அமைப்பினருடன் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் சேகர் பாபு பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

அமைச்சர் சேகர் பாபு மண்டைக்காட்டில் ஆய்வு

மண்டைக்காட்டில் சமய மாநாடு நடத்துவதில் விவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று ஆய்வுமேற்கொண்டார். அப்போது, மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார். மேலும், ``இது யாருக்குச் சொந்தமான இடம்?” என்று இணை ஆணையர் ஞான சேகரிடம் கேட்டார். அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என இணை ஆணையர் தெரிவித்தார். மேலும், மராமத்து பொறியாளர் ஐயப்பன் அந்த இடத்துக்கான வரைபடத்தைக் காண்பித்தார்.

பின்னர் குமாரகோவில் குமாரசுவாமி கோயிலை ஆய்வுசெய்தபின் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "கிராமப்புறக் கோயில்கள், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்ற திருக்கோயில்கள் எனக் கணக்கிட்டு ஏற்கெனவே ஒரு லட்சம் ரூபாய் அந்தத் திருக்கோயில் திருப்பணிக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுவந்தது. அந்தத் தொகையை இரண்டு லட்சம் ஆக்கி ஆண்டுதோறும் ஆயிரம் கோயில்கள் என இருந்ததை 1,250 கோயில்களாக உயர்த்தி அந்தத் திருக்கோயில்களுக்காக தலா இரண்டு லட்சம் என 50 கோடி ரூபாயை ஒரே தவணையாக மாநாடுபோல் நடத்தி அனைவர் கையிலும் அதை ஒப்படைத்தவர் முதல்வர். இப்படிப்பட்ட இறைப்பணிகள் இதுவரை இந்துசமய அறநிலையத்துறை வரலாற்றில் நடைபெறவில்லை. இது ஆன்மிக புரட்சி ஏற்படுத்துகின்ற ஆட்சி என்பதை நாங்கள் தொடர்ந்து கூறிவருகிறோம்.

மண்டைக்காட்டில் அமைச்சர் சேகர் பாபு
மண்டைக்காட்டில் அமைச்சர் சேகர் பாபு

மண்டைக்காடு விவகாரத்தில் ஒரே தரப்பினரின் கேள்விகளை நீங்கள் கேட்கின்றபோது எங்களைப் போன்றவர்கள் அதற்கு பதில் சொல்லி, அந்தப் பிரச்னையை மேலும் பெரிதாக்க விரும்பவில்லை. இரண்டு தரப்பில் இருக்கின்ற பிரச்னைகளையும் நீங்கள் கேட்டால் நன்றாக இருக்கும். ஒரே தரப்பினுடைய கேள்விகளைக் கேட்கின்றபோது அதற்கு பொறுப்பில் இருக்கின்ற எங்களைப் போன்றவர்கள் பதில் சொல்லுகின்றபோது அந்தப் பிரச்னை இன்னும் வேகமெடுக்கும். எனவே, அந்தக் கேள்விக்கான பதிலை தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறேன். பிரச்னைக்கு பதில் சொல்லிவிட்டேன். அதை ஊதி பெரிதாக்குவது என்னுடைய கடமை இல்லை. நான் பொறுப்புள்ள அமைச்சர், அதற்கு எதிர்வாதமாக, குதர்க்கமாக பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு

பிரச்னையை சுமுகமாக கொண்டுசெல்ல அரசுத் தரப்பில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சுமுகமாகக் கொண்டுசெல்லும் கடமை அரசுக்கு உண்டு. ஏட்டிக்குப் போட்டியாக பதில் சொல்லுவது சரியாக வராது. மண்டைக்காடு பிரச்னை என்பது 5-ம் தேதிதான் அந்த நிகழ்ச்சி தொடங்கவிருக்கின்றது. இன்னும் 15 நாள்கள் இருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறையும் சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. ஆகவே, சுமுகமாக முடியும் என்ற நம்பிக்கை துறைசார்ந்த அமைச்சர் என்ற வகையில் எனக்கும் புலப்படுகிறது.

யாருடைய மனதும் புண்படுகின்ற அளவுக்கு கருத்து பரிமாற்றம் இல்லாமல், சுமுகமான அனைத்து மக்களும் இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காக சாதி, மதங்கள் சமயங்களைக் கடந்து அனைவரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற கேள்விகளைத் தவிர்க்கின்றேன். பத்திரிகையாளர்களை சந்திக்கின்றபோது கேள்விகளைத் தவிர்க்கின்ற அமைச்சர் அல்ல நான். முதல்வர் எங்களை அப்படி வழிநடத்தவில்லை. இது போன்ற சென்சிட்டிவ்வான பிரச்னைகளில் கருத்துகளை தவிர்ப்பது நல்லது என்று பொறுப்பான அமைச்சர் என்ற நிலையில் கேட்டுக்கொள்கிறேன். பிரச்னைகளைப் பெரிதாக்க இந்த அரசு விரும்பவில்லை.

மண்டைக்காடு மாநாடு நடக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர் சேகர் பாபு
மண்டைக்காடு மாநாடு நடக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர் சேகர் பாபு

ஈரோடு இடைத்தேர்தலில் கொலுசு கொடுப்பது யார் என்பதுதான் பிரச்னை. எப்போதுமே ஆளுங்கட்சியின்மீது எதிர்க்கட்சிகள் இப்படியான குற்றச்சாட்டுகளைக் கூறுவது இயல்பு. ஆதாரத்துடன் எங்களுக்குப் புகார் வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையரே அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பொருள் விநியோகத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் தேர்தல் ஆணையம் அது குறித்து தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்" என்றார். இந்த நிலையில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான இந்து அமைப்பினருடன் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் சேகர் பாபு பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.