Published:Updated:

சென்னை: அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் தற்கொலை!: போலீஸார் விசாரணை

அமைச்சர் சேகர் பாபு அண்ணன் தேவராஜ்

தேவராஜ் நேற்றைய தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சென்னை: அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் தற்கொலை!: போலீஸார் விசாரணை

தேவராஜ் நேற்றைய தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
அமைச்சர் சேகர் பாபு அண்ணன் தேவராஜ்

அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் சென்னையிலுள்ள அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருபவர் பி.கே.சேகர் பாபு. இவரின் அண்ணன் தேவராஜ், சென்னையில் குடும்பத்துடன் வசித்துவந்தார்.

அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் தேவராஜ்
அமைச்சர் சேகர் பாபுவின் அண்ணன் தேவராஜ்

தேவராஜ் கடந்த சில தினங்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தேவராஜ் நேற்றைய தினம் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கீழ்பாக்கம் ஆயிஷா மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்கொலைக்கான காரணம் பற்றி போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்