Published:Updated:

‘‘சசிகலா தலைமையா? - அப்படியோர் எண்ணமே இல்லை!’’

செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ தடாலடி

‘‘சசிகலா தலைமையா? - அப்படியோர் எண்ணமே இல்லை!’’

செல்லூர் ராஜூ தடாலடி

Published:Updated:
செல்லூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
செல்லூர் ராஜூ
விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாதவர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. அணைத் தண்ணீருக்கு தெர்மாகோல் ஷீட் போர்த்துவதில் தொடங்கி, ரேஷன் கடைக்கு பைக்கில் செல்வதுவரை அமைச்சரின் நடவடிக்கைகள் அதிரிபுதிரியாக இருக்கும். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘தி.மு.கழக எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன் மரணம் அடைந்தது பற்றி?’’

‘‘திராவிட இயக்கப் பாரம்பர்யத்தில் வந்த அன்பழகனின் மறைவு வருத்தம் அளிக்கிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு எதிராகப் பேசினாலும், தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர் அன்பு. தன் கட்சிக் கொள்கைப்படி வாழ்ந்தவர். அவருடைய மரணம் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு பாடம். கொரோனா காலத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். விலகியிருந்து மக்களுக்கு உதவ வேண்டும்.’’

‘ரேஷன் கடைக்கு டூவீலரில் சென்று நீங்கள் நடவடிக்கை எடுத்ததை, ‘பொலிட்டிக்கல் ஸ்டன்ட்’ என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனரே?’’

‘‘நான் எம்.ஜி.ஆர் வழியில் வந்தவன். அவர் எப்படி அநியாயத்தைத் தட்டிக் கேட்பாரோ அதேபோல், எங்கள் ஆட்சியில் யாராவது முறைகேடு செய்தால் நான் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். இதேபோல் திருச்சியில் புகார் வந்தபோது சர்ப்ரைஸாகச் சென்று நடவடிக்கை எடுத்தேன். மக்கள் ரேஷன் பொருள்களை நம்பியிருக்கும் சூழலில், இதில் முறைகேடு நடப்பதை அனுமதிக்க முடியாது. இதைக் கிண்டல் செய்பவர்கள் செய்யட்டும். அவர்களைப் பற்றிக் கவலையில்லை.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஆனால், தரமற்ற அரிசி உள்ளிட்ட பொருள்கள் தானே ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகளுக்கு அவற்றை சப்ளை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?”

‘‘ரேஷன் கடைகளுக்கு உணவுத்துறை மூலம் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. மத்திய தொகுப்பிலிருந்தும், மாநில தொகுப்பிலிருந்தும் ரேஷனுக்கு அரிசி வழங்கப்படுகிறது. அரிசியின் தரத்தை அடிக்கடி சோதனை செய்யும்படி அதிகாரிகளை முடுக்கிவிட்டிருக்கிறோம். அரிசி வழங்குவதில் எங்கேனும் முறைகேடு நடந்தால் உடனே புகார் தெரிவிக்கலாம். தவறு செய்யும் அதிகாரிகள், ஊழியர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.’’

“ `ரேஷன் கார்டு உள்ளவர்களுக்குக் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படும்’ என்று அறிவித்தீர்கள். ஆனால், வங்கிக்கு மக்கள் சென்றால் அதிகாரிகள் திருப்பி அனுப்புகிறார்களே?’’

‘‘கண்டிப்பாகக் கடன் வழங்கப்படும். அதற்கு அவர்கள் ஏதாவதொரு தொழில் செய்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், சிலர் எந்தத் தொழிலும் செய்யாமல் கடன் கேட்டுச் செல்கிறார்கள். இன்னும் பலர் தொடக்க வேளாண்மை வங்கிகளிலெல்லாம் இந்தக் கடனைக் கேட்டுச் செல்கிறார்கள். இது கூட்டுறவு வங்கியில் மட்டுமே கொடுக்கப்படும். அப்படிக் கொடுக்கவில்லை யென்றால், என்னிடம் புகார் செய்யலாம்.’’

‘‘ `சசிகலா விரைவில் விடுதலையாவார்’ என்கிறார்கள். அவர் வெளியே வந்தால், அ.தி.மு.க-வினர் அவரின் தலைமையை ஏற்றுக்கொள்வார்களா?”

‘‘அப்படியொரு சிந்தனையே எங்களிடம் இல்லை. எடப்பாடியார், ஓ.பி.எஸ் தலைமையை ஏற்று, சிறப்பாகச் செயல்பட்டுவருகிறோம். இதில் எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.’’

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

“நீங்கள், ‘என் வீட்டை விற்றும் மக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்குவேன்’ என்று கூறியிருக்கிறீர்களே..?”

“வரும்போது என்ன கொண்டு வந்தேன் நான்? இந்தப் பதவியும் அங்கீகாரமும் மக்கள் கொடுத்தது. அப்படிப்பட்ட மக்கள் கஷ்டப்படும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.

எம்.ஜி.ஆரையும், அதன் பிறகு ஜெயலலிதாவையும் பார்த்து வளர்ந்தவன் நான். `இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்’ என்ற எண்ணம் அவர்களைப் போல் எனக்கும் ரத்தத்தில் ஊறியிருக்கிறது.”

“கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின்மீது மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

‘‘தி.மு.க திட்டமிட்டுப் பரப்பும் வதந்தி இது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே கொரோனாவுக்குச் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது தமிழகத்தில்தான். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை ரேஷன் கடைகள் மூலம் அரசு வழங்கிவருகிறது. அனைத்து அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தங்கள் சொந்தச் செலவில் நிவாரண உதவிகளைச் செய்துவருகின்றனர். ஆனால், தி.மு.க தலைவரோ ‘ஒன்றிணைவோம் வா’ என்றார். தி.மு.க-வினர் உதவி செய்வார்கள் என்று நினைத்து மக்கள் அவர்களிடம் மனுக்களைக் கொடுத்தால், அவர்கள் அதை அரசிடம் கொடுத்தார்கள். இதுதான் மக்களுக்கு அவர்கள் செய்த சேவை. எடப்பாடியாரின் திட்டமிட்ட நடவடிக்கையால்தான் கொரோனா மரணம் தமிழகத்தில் குறைவாக உள்ளது.’’

“கொரோனா மரணங்களைத் தமிழக அரசு குறைத்துக் கூறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?”

‘‘இது அவதூறு. இதனால் அரசுக்கு என்ன லாபம்? கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. எதிர்க்கட்சிகள் அரசோடு ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும். அதைவிடுத்து இப்படி அவதூறு பரப்பக் கூடாது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism