தமிழக அரசியலை எப்போதும் கலகலப்புடன் வைத்திருப்பவர்... மீம்ஸ் கிரியேட்டர்களின் விருப்பத்துக்குரியவர்... சட்னிக்கு பேமஸான மதுரையை சிட்னியாக்கி அழகு பார்க்கத் துடிக்கும் அமைச்சர் செல்லூர்ராஜூவை சில நாள்கள் வீட்டுக்குள் முடக்கிப் போட்டது கொரோனா. அதில் மீண்டு வந்தவர், ‘`போற போக்குல என்னையும் கொஞ்சம் டச்சு பண்ணிட்டுப் போச்சு கொரோனா....’’ என்று ஜாலி கமென்ட் அடித்தபடி மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்.

‘`உங்களுக்குக் கொரோனா பாதிப்பு என்று கேள்விப்பட்டதும் கட்சியினர் வெளிப்படுத்திய உணர்வுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘`உண்மையிலேயே நெகிழ்ந்துபோனேன். நான் எல்லோரிடமும் சகஜமாகப் பழகுபவன். அதனால் எனக்கு பாதிப்பு என்றதும் கட்சியினர் அதிக பிரியத்தைக் காட்டினார்கள். பலர் பிரார்த்தனை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்தபோது இன்னும் இவர்களுக்காக உழைக்க வேண்டும் என்று நினைத்தேன்.’’

‘`கொரோனா என்றாலே பெரும்பாலோர் அஞ்சும் நிலையில் நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?’’

‘`நான் கவலைப்படவில்லை. முதலில் என் மனைவிக்குத்தான் தொற்று ஏற்பட்டது. நான் நிறைய உடற்பயிற்சிகளைச் செய்கிறேன். வீட்டு சாப்பாட்டையே அதிகம் சாப்பிடுவேன். வேறு எந்தப் பழக்கமும் இல்லை. அதனால் அவ்வளவு சீக்கிரத்தில் எந்த நோயும் என்னை அண்டாது. என் மனைவியைச் சென்னையில் உள்ள மருத்துமனையில் சேர்த்தபோது அவருக்கு உடலில் வேறுசில பிரச்னைகளும் இருந்தன. பயந்துவிட்டார். அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டேன். அவர் மீண்டு வந்த பிறகுதான் எனக்குக் கொரோனா பாதிப்பு தெரிந்தது. ஆனால் உற்சாக மனநிலை, உணவு, உடற்பயிற்சி மூலம் கடந்து வந்துவிட்டேன்.’’

‘`கொரோனா பணக்கரார்களுக்கு மட்டும்தான் வரும் நோய் என்று முதலமைச்சர் கூறினாரே. அந்தளவுக்கு பணக்காரரா நீங்கள்...?’’

(சிரிக்கிறார்) ‘`மக்களின் செல்வாக்கைப் பெற்ற பணக்காரன் நான்.’’

‘`சசிகலா சிறையிலிருந்து வெளியில் வந்தால் தமிழக அரசியலில், அதிமுகவில் என்னென்ன மாற்றங்கள் வரும்?’’

‘`வரும்போது பார்த்துக்கொள்ளலாம். ஜெயலலிதாவின் ஆட்சியையும், கட்சியையும் முதலமைச்சர் எடப்பாடியும், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஸும் சிறப்பாக வழி நடத்திவருகிறார்கள். அதனால் வேறு எதைப்பற்றியும் எங்களுக்கு சிந்தனையில்லை.’’

‘`சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்?’’

‘`திராவிட இயக்க வரலாற்றில் யாரையும் முன்னிறுத்தித் தேர்தலைச் சந்தித்ததில்லை.

1967-ல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோது அறிஞர் அண்ணா எம்.எல்.வுக்குப் போட்டியிடவில்லை. எம்.பிக்குத்தான் போட்டி யிட்டார். அவர் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துக்கொள்ளவில்லை. 1977-ல் அதிமுக ஆட்சியைப் பிடித்த தேர்தலிலும் எம்.ஜி.ஆர் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. ஆனால், மக்கள் அவருக்காகத்தான் வாக்களித்தார்கள். அந்த வழியில் தற்போதும், நல்லாட்சி செய்துவரும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்களால் விரும்பப்படுகிறார்கள். யார் முதல்வர் என்பதைத் தேர்தலுக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்வார்கள்.’’

“பெரியாரையும் அண்ணாவையும் அ.தி.மு.க மறக்க வேண்டும் என்கிறாரே எஸ்.வி.சேகர்?’’

“எஸ்.வி.சேகரெல்லாம் ஒரு ஆளே இல்லை. கோமாளி. ஜெயலலிதா இருக்கும்போதே அவர்மீது நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கி வைத்திருந்தார். இப்படி ஏதாவது உளறிக் கொண்டிருப்பார். அண்ணாவும் பெரியாரும் இல்லாமல் அ.தி.மு.க இல்லை.’’

‘`பிறகு ஏன், பால் பாக்கெட் கெட்டுவிட்டது என்று எஸ்.வி.சேகர் கேட்டால் முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்கிறார், அவருக்கு அ.தி.மு.க பயப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகிறார்களே?’’

‘`அவர் காமெடி பண்ண வேண்டும் என்று நினைக்கிறார். தைரியமான ஆளாக இருந்தால் வழக்கைச் சந்திப்பேன் என்று சொல்ல வேண்டியதுதானே. அரசியலிலும் நடிப்பிலும் எப்போதும் காமெடியனாகவே இருக்கிறார், ஹீரோவாக முடியவில்லை.’’

‘`திராவிடர் கழகத்தினர், முற்போக்கு அமைப்பினரைக் கைது செய்யும் அரசு ஏன் எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றோரைக் கைது செய்வதில்லை என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறார்களே?’’

‘`நிச்சயம் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். திராவிட இயக்கத்துக்கு ஒரு இழிவு என்றால் விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணா, பெரியார் கொள்கை வழியில்தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இருமொழிக் கொள்கை உட்பட பல விஷயங்களில் இந்த ஆட்சி அண்ணா, பெரியார் கொள்கைகளில் உறுதியுடன் உள்ளது.’’

‘`திராவிட இயக்கம், பெரியார் பற்றி பி.ஜே.பி.யினர் விமர்சித்தால் அதைச் சில அமைச்சர்களே ஆதரித்துப் பேசுகிறார்களே. அ.தி.மு.க தலைமை அவர்களைக் கண்டிப்பதில்லையே. திராவிடக் கொள்கையிலிருந்து விலகிச்சென்றுவிட்டதா?’’

‘`அ.தி.மு.க என்றைக்குமே திராவிடக் கட்சிதான். அமைச்சர்கள் அப்படிப் பேசினாலோ கட்சிக்கு துரோகம் செய்தாலோ, பத்திரிகை வாயிலாகக் கண்டிக்காவிட்டாலும் தனிப்பட்ட முறையில் அழைத்துத் தலைமையில் கண்டிப்பார்கள்.’’

‘`தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி இனி இருக்காது. அதற்கு மாற்று வரும் என்று சிலர் சொல்கிறார்களே?’’

‘`சும்மா சொல்வார்கள். திராவிட மண். இது பெரியார் மண். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள்தான் எப்போதும் ஆட்சி செய்யும் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.’’

‘`ரஜினி கட்சி தொடங்குவாரா?’’

‘`ரஜினி இனிமேல் கட்சி ஆரம்பித்தாலும் பத்தோடு பதினொன்றாக இருக்கும். வயதும் எழுபதாகிவிட்டது. அதனால அவர் கட்சி தொடங்குவது சந்தேகம்தான்.’’