Published:Updated:

``டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை!" - அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி ( கோப்புப் படம் )

`மதுக்கடைகள் மூடப்படுவது அல்லது நேரம் குறைக்கப்படுவது குறித்து மருத்துவ குழுவினருடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்.' - அமைச்சர் செந்தில் பாலாஜி.

``டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை!" - அமைச்சர் செந்தில் பாலாஜி

`மதுக்கடைகள் மூடப்படுவது அல்லது நேரம் குறைக்கப்படுவது குறித்து மருத்துவ குழுவினருடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்.' - அமைச்சர் செந்தில் பாலாஜி.

Published:Updated:
அமைச்சர் செந்தில் பாலாஜி ( கோப்புப் படம் )

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 30,000 மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜன. 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவேண்டும் எனத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலகத்தில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இயக்குநர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ``விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 26,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

மதுக்கடைகள்
மதுக்கடைகள்

தமிழ்நாடு மின்வாரியம் முழுவதும் கணினி மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எங்காவது திடீரென மின் கசிவு ஏற்பட்டாலோ, மின் விபத்து ஏற்பட்டாலோ தானியங்கி முறையில் டிரான்ஸ்ஃபார்மர் ஆஃப் ஆகும்படியான முறை அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில் சென்னை 100 சதவிகித புதைவட கம்பிகள் பொருத்திய நகரமாக மாற்றப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கொரொனா 2-ம் அலையின் போது கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் கடைகள் ஏதும் மூடப்படவில்லை. அதனால் மதுபானங்கள் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டுப் பல குற்றச் சம்பவங்கள் நடக்கும் சூழல் உருவானது. தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது அல்லது நேரம் குறைக்கப்படுவது குறித்து மருத்துவ குழுவினருடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism