Published:Updated:

கரூர்: ``திமுக வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு நான் பொறுப்பு!" - செந்தில் பாலாஜி உறுதி

பிரசாரத்தில் செந்தில் பாலாஜி

`தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் அதிக மக்கள் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட மாநகராட்சியாக கரூர் மாநகராட்சி இருக்கும். கரூர் மாவட்டத்தில் கடந்த ஒன்பது மாதகால தி.மு.க ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.' - செந்தில் பாலாஜி.

கரூர்: ``திமுக வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு நான் பொறுப்பு!" - செந்தில் பாலாஜி உறுதி

`தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் அதிக மக்கள் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட மாநகராட்சியாக கரூர் மாநகராட்சி இருக்கும். கரூர் மாவட்டத்தில் கடந்த ஒன்பது மாதகால தி.மு.க ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.' - செந்தில் பாலாஜி.

Published:Updated:
பிரசாரத்தில் செந்தில் பாலாஜி

கரூர் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ``கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தி.மு.க ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்டது. கரூரில் 15 நாள்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டுவந்த குடிநீர், தற்போது தினந்தோறும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகளில் சாக்கடை, கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்திட பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று கரூர் மாநகராட்சியில் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த உரிய நிதி பெற்றுத்தரப்படும். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் அதிக மக்கள் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட மாநகராட்சியாக கரூர் மாநகராட்சி இருக்கும். கரூர் மாவட்டத்தில் கடந்த ஒன்பது மாதகால தி.மு.க ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களுக்கான ஆட்சி நடத்திவரும் தமிழக முதலமைச்சர், கடந்த ஒன்பது மாதங்களில் கரூர் மாவட்டத்துக்கு ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கியுள்ளார்.

பிரசாரத்தில் செந்தில் பாலாஜி
பிரசாரத்தில் செந்தில் பாலாஜி

இதில், ரூபாய் 1,450 கோடி மதிப்பில் புதிய தடுப்பணைகள், கரூரில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 200 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்சாலை, அரசு வேளாண்மைக் கல்லூரி, கரூர் புதிய பேருந்து நிலையம் ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தபோது, கரூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வேலை இழப்பால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என சுமார் 3.19 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 1,279 டன் அரிசியை தி.மு.க கட்சி நிர்வாகிகள் இல்லம் தேடிச் சென்று வழங்கினர். ஆட்சிக்கு வந்த முதல் நாளே தமிழக முதலமைச்சர் கொரோனா உதவித்தொகையாக ரூ.4,000-ஐ இரண்டு தவணைகளாக வழங்க உத்தரவிட்டார்.

பிரசாரத்தில் செந்தில் பாலாஜி
பிரசாரத்தில் செந்தில் பாலாஜி

அத்துடன், தி.மு.க சார்பில் ஆயிரம் ரூபாய் சேர்த்து ரூ. 5,000 கரூர் தொகுதி முழுவதும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, தி.மு.க சார்பில் உயிர்காக்கும் ரத்ததான உதவிகள், உணவின்றித் தவிப்பவர்களுக்கு மூன்று வேளை உணவுப் பொட்டலங்கள் என பல்வேறு மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதிர்க்கட்சியான பிறகு அ.தி.மு.க-வினர் கரூர் மக்களுக்காக எந்த உதவியும், நலத் திட்டமும் மேற்கொள்ளவில்லை. தி.மு.க சார்பில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் உதவிகள் வழங்கப்பட்டன.

கரூர் நகராட்சி, மாநகராட்சியாக தி.மு.க ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட பிறகு, விரைவாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, முதல் பெண் மேயர் கரூர் மாநகராட்சியை அலங்கரிக்கவிருக்கிறார். ஏனென்றால், பெண்களின் முன்னேற்றத்துக்குத் தனி அக்கறைகொண்ட முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் செயல்பட்டுவருகிறார். கரூர் மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வழங்கும் வாக்குறுதிகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன். அந்த வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அதேபோல, இதுவரை கரூருக்கு செய்த திட்டங்கள் மட்டுமின்றி, இனிவரும் காலங்களில் செய்யாத திட்டங்களும் முதல்வரிடம் பெற்று, செயல்படுத்தப்படும். எனவே, எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும்" என்றார்.