Published:Updated:

``சுய விளம்பர காரியங்களுக்கு பதில் இல்லை!” - அண்ணாமலை புகாருக்கு செந்தில் பாலாஜி பதில்

செந்தில் பாலாஜி

``சில பேர் விளம்பரத்துக்குச் செய்யக்கூடிய காரியங்களுக்காக எங்களுடைய நேரத்தையோ, உங்களுடைய நேரத்தையோ வீணடிக்க வேண்டாம்.” - அமைச்சர் செந்தில் பாலாஜி.

``சுய விளம்பர காரியங்களுக்கு பதில் இல்லை!” - அண்ணாமலை புகாருக்கு செந்தில் பாலாஜி பதில்

``சில பேர் விளம்பரத்துக்குச் செய்யக்கூடிய காரியங்களுக்காக எங்களுடைய நேரத்தையோ, உங்களுடைய நேரத்தையோ வீணடிக்க வேண்டாம்.” - அமைச்சர் செந்தில் பாலாஜி.

Published:Updated:
செந்தில் பாலாஜி

கோவை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்திசெய்ய அறிமுகப்படுத்தியுள்ள, 24 x 7 சேவை மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுசெய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கோவை மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை நிவர்த்தி செய்ய, 24 மணி நேர உதவி மைய எண் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

செந்தில் பாலாஜி ஆய்வு
செந்தில் பாலாஜி ஆய்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போதுவரை 1,749 அழைப்புகள் வந்துள்ளன. சாலை வசதி, குடிநீர், சாக்கடை, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளன. அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, அந்தக் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவையில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கோவையில் பெரும்பாலான சாலைகள் மோசமாக உள்ளன. கடந்த ஆட்சியில் சாலை வசதிகள் முறையாகப் போடப்படவில்லை. அதற்காகத்தான் அரசு முதற்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

படிப்படியாக அனைத்து இடங்களிலும் சாலை வசதிகளை அமைப்போம்” என்றவரிடம் செய்தியாளர்கள், மின்சாரத்துறையில் பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டது குறித்த குற்றச்சாட்டை நிரூபிக்காததால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு செந்தில் பாலாஜி, ``அந்த விஷயத்துக்கு நான் அப்போதே முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். சில பேர் சுய விளம்பரத்துக்கு செய்யக்கூடிய காரியங்களுக்காக எங்களுடைய நேரத்தையோ, உங்களுடைய நேரத்தையோ வீணடிக்க வேண்டாம். ஒருவர் மீது உண்மையாகக் குற்றச்சாட்டு வைத்தால் உரிய ஆதாரத்துடன் சொல்ல வேண்டும்.

அண்ணாமலை
அண்ணாமலை

பி.ஜி.ஆர் நிறுவனத்தை பிளாக் லிஸ்ட்டில் வைக்கவில்லை. அந்த நிறுவனத்துக்குக் கடந்த ஆட்சியில் விடப்பட்ட டெண்டர் அது. எனவே, உரிய ஆவணங்கள் வெளியிட்டால்தான் அது சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளிப்பேன்” என்றார்.