Published:Updated:

``மத்திய அரசு சொல்லியும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கேட்கவில்லை!" - செந்தில் பாலாஜி

மின்சாரத்துறை மாநாடு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது.

``மத்திய அரசு சொல்லியும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கேட்கவில்லை!" - செந்தில் பாலாஜி

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது.

Published:Updated:
மின்சாரத்துறை மாநாடு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.

அந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ``மின்சாரம் (திருத்தம்) மசோதா 2022-ஐ திரும்பப் பெற வேண்டும் என வலியுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதேபோல, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்திலும் முதல்வர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியிருக்கிறார். மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை குறைந்த விலையில் தொடர்ந்து வழங்க மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின்பகிர்மான நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கவேண்டும்.

மத்திய அமைச்சருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி, துறை உயரதிகாரிகள் ரமேஷ்சந்த் மீனா, ராஜேஷ் லக்கானி
மத்திய அமைச்சருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி, துறை உயரதிகாரிகள் ரமேஷ்சந்த் மீனா, ராஜேஷ் லக்கானி

அதன்படி, மின்சார (திருத்தம்) மசோதா 2022-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். வருங்கால மின் தேவைக்காக வடசென்னை அனல்மின் திட்டம் நிலை-3, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் திட்டம், உடன்குடி விரிவாக்க நிலை-1 மற்றும் நிலை 3, உப்பூர் மிக உய்ய அனல் மின் திட்டம் என நிலக்கரி மின் திட்டங்கள் மூலமாக 8,340 மெகாவாட் திறன் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது மின் உற்பத்திக்கு தேவைப்படும் நிலக்கரி தால்சர் சுரங்கத்திலிருந்து 14 ரேக்குகள் மட்டுமே தமிழ்நாடு மின்வாரியத்துக்கு அனுப்பப்படுகின்றன. எனவே, எங்கள் மின் உற்பத்தி தேவையை பூர்த்தி செய்ய தேவைப்படும் நிலக்கரியை தர நிலக்கரி நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும். அதேபோல, நிலக்கரியை தடையின்றி அனுப்ப கூடுதல் ரேக்குகளை வழங்க ரயில்வே துறையை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். ராய்கர்-புகளூர்-திருச்சூர் உயர் அழுத்த நேர்திசை மின் தொடரமைப்பை மிகவும் இன்றியமையாத மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவித்து தொடரமைப்புக் கட்டணத்தை தேசிய அளவிலான அனைத்து பயனீட்டாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க மத்திய அரசு பரிந்துரை செய்தும், அதை மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

குறிப்பாக, முந்த்ரா - மொஹிந்தர்கர் மற்றும், பிஸ்வநாத் சரியாலி- ஆக்ரா போன்றவற்றை தேசிய சொத்தாக அறிவிக்க மறுத்துவிட்டது. இதனால், நுகர்வோர் மீது பெரும் கட்டணச் சுமை ஏற்றிவைக்கப்படுகிறது. இதை தவிர்க்கவும், மாநிலங்களுக்கு நீதி வழங்கவும் மேற்குறிப்பிடப்பட்டவற்றை தேசிய சொத்தாக அறிவிக்கவேண்டும். மத்திய நிதி நிறுவனங்களான ஆர்.இ.சி, பி.எஃப்.சி ஆகியவற்றிலிருந்து மின்வாரியம் பெற்ற கடனுக்கான வட்டித் தொகையை 8 சதவிகிதமாக குறைக்கவேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வட்டித் தொகையை குறைக்கவேண்டும். தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தேவையான ஸ்மார்ட் மீட்டர்களை நேரடியாக மின்வாரியமே கொள்முதல் செய்யும். மீட்டர்களின் தரம், விலை, தொழில்நுட்பம் உள்ளிட்டவை டெண்டர் மூலம் கண்டறியப்படும்" என்றார்.