Published:Updated:

"இது அரசு நிகழ்ச்சி இங்கு அரசியல் பேசக் கூடாது"-ஜெயக்குமார் குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில்

செந்தில் பாலாஜி ( நா.ராஜமுருகன் )

``தனக்குத் தானே 'கன்ட்ரோல் இல்லாதவர்கள்' சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை.'' - செந்தில் பாலாஜி

"இது அரசு நிகழ்ச்சி இங்கு அரசியல் பேசக் கூடாது"-ஜெயக்குமார் குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜி பதில்

``தனக்குத் தானே 'கன்ட்ரோல் இல்லாதவர்கள்' சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை.'' - செந்தில் பாலாஜி

Published:Updated:
செந்தில் பாலாஜி ( நா.ராஜமுருகன் )

கரூர், காந்திகிராமம் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான பள்ளிக்கல்வித்துறை கலை விழாவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கரூர் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் கீதா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறைகள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு, வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார் .

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரூர் மாநகராட்சி சார்பில் ரூ.6,75,00,000 மதிப்பீட்டில் கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் வணிக வளாகப் பணிகள் திட்ட மதிப்பீடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இன்னும் ஐந்து மாத காலத்துக்குள் முதல் தளப் பணிகள் நிறைவுற்று, ஜூன் மாதத்தில் தமிழக முதலமைச்சரால் திறந்துவைக்கப்படவிருக்கிறது. 174 காய்கறிக் கடைகள் அமைப்பதற்கு திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கரூர் நகர்ப் பகுதியில் 20 ஆண்டுக்கால காமராஜ் தினசரி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பல்வேறு பணிகள் விரைவாக தொடங்கப்பட்டிருக்கின்றன. இது தவிர, ரூ.1,65,00,000 மதிப்பீட்டில் மீன் மார்க்கெட் அமைப்பதற்கு தனி வணிக வளாகம் கட்டுவதற்கான டெண்டர் பணிகள் நிறைவுபெற்றிருக்கின்றன. இப்படி, அடுத்தடுத்து பணிகள் மெதுவாக முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்படும்" என்றார்.

பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி
பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

அப்போது அவரிடம் செய்தியாளர்கள், "அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து குறித்தும், அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் கடுமையான ட்விட்டர் பதிவு குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு, "அரசு ஆய்வு நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. அரசு அதிகாரிகளும் இங்கு இருக்கின்றனர். வேறோரிடத்தில் இதற்காகத் தனியாகப் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து பதில் அளிக்கிறேன்" என்றார்.

கரூரில் அ.தி.மு.க ஐடி விங் நிர்வாகிகள்மீது பொய் வழக்கு புனையப்படுவதாக, அ.தி.மு.க தரப்பு குற்றம்சாட்டிவருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான அ.தி.மு.க ஐடி விங் நிர்வாகியைத் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

இதனால், அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், முன்னாள் அமைச்சரான ஜெயக்குமாரும் தமிழக டி.ஜி.பி-யைச் சந்தித்து, குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதோடு, ஜெயக்குமார், கரூர் மாவட்டத்தில் தி.மு.க அராஜகப் போக்கைக் கடைப்பிடித்துவருவதாகவும், 'கரூரில் கன்ட்ரோல் இல்லை' என்றும் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னைப் பற்றி செய்த விமர்சனத்துக்கு பதிலாக செந்தில் பாலாஜி தன் ட்விட்டர் பக்கத்தில், ``கரூர் மாவட்டத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் மக்களால் புறக்கணிக்கப்படும் அ.தி.மு.க., எப்படியாவது செய்திகளில் இடம்பெற்றுவிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

'கரூரில் கன்ட்ரோல் இல்லை' என ஜெயக்குமார் பேசியிருக்கிறார். முதலமைச்சர் தளபதி அவர்களின் நல்லாட்சியில் தமிழ்நாடு முழுக்க சட்டம்-ஒழுங்கு மிகச்சிறப்பாகக் கையாளப்பட்டு, அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. தனக்குத் தானே 'கன்ட்ரோல் இல்லாதவர்கள்' சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.