Published:Updated:

``மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின்வெட்டு!" - சட்டசபையில் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

``மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால்தான் மின்வெட்டு!" - சட்டசபையில் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

Published:Updated:
செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில், ``தமிழகத்தில் பல பகுதிகளில் தற்போது மின் தடை நிலவுகிறது. கோடைக்காலத்தில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதால், தமிழக அரசு நிலக்கரியைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கையிருப்பு வைத்திருக்கவில்லை. மின்வெட்டு காரணமாக விவசாயிகள் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனத்தினர், மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் இல்லாமல் இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகிறது. தடையில்லா மின்சாரம் கொடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதைத் தொடர்ந்து, மின்வெட்டு தொடர்பாக அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், ``மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய மின்சாரம் கிடைக்காததால்தான் தற்போது மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. குறைந்த விலையில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஒரு நாள் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு கடைசியாக நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே வழங்கியிருக்கிறது.

மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி ஒதுக்கிவருவதால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது அதுவும் இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும். அதிமுக ஆட்சியில் 68 முறை மின்வெட்டு ஏற்பட்டிருந்தது. மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் போதுமான நிலக்கரி இல்லாதபோதிலும் தொழிற்சாலைகளுக்குத் தடையின்றி மின் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. .இனி வருகின்ற ஐந்து ஆண்டு காலத்துக்குள் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருக்கும். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன’’ என்றார்.

மின்வெட்டு விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி அதிமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism