Published:Updated:

``இந்தியாவிலேயே மின்கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடுதான்'' - செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

``மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு குறைவாகவே இருக்கிறது." - அமைச்சர் செந்தில் பாலாஜி

``இந்தியாவிலேயே மின்கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடுதான்'' - செந்தில் பாலாஜி

``மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு குறைவாகவே இருக்கிறது." - அமைச்சர் செந்தில் பாலாஜி

Published:Updated:
அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மின்கட்டணம் குறைவான அளவிலேயே உயர்த்தப்பட்டிருக்கிறது. மின்கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அ.தி.மு.க ஆட்சியைவிட தற்போது மின்கட்டணம் குறைவாகவே உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மின்கட்டணம் மிகக் குறைவாக வசூலிக்ககூடிய மாநிலம் தமிழ்நாடுதான். அதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். கடந்த ஆண்டு 9,000 கோடி ரூபாயை மானியமாக கொடுத்தார்கள்.

மின்கட்டணம்
மின்கட்டணம்

இந்த வருடம் மின்கட்டண உயர்வுக்குப் பிறகு 3,500 கோடியிலிருந்து 4,000 கோடி ரூபாய் அளவுக்கான அரசு மானியம் விடுவிப்பதற்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு 4,000 கோடி ரூபாய் கூடுதலாக மானியம் கொடுத்து மின்சார வாரியத்தை காப்பாற்றி வருவதால் இந்தக் கட்டணம் மற்ற மாநிலங்களைவிட குறைவாகவே இருக்கிறது.

சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கேரளாவை ஒப்பிட்டு பார்த்து இங்கே என்ன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை கணக்கிட்டு பார்க்க வேண்டும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தி.மு.க வாக்குறுதிகளில் ஒன்று.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

தற்போது தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. ரெய்டுகள் நடைபெற்றாலும் அ.தி.மு.க-வினர்மீது எதுவும் தவறில்லை என்றால் அதை வெளிப்படையாகக் கூறிவிடலாம். அதற்கு ஏன் காரணங்களை தேடி குறைகளையும், குற்றங்களையும் கூற வேண்டும். யாரு தவறு செய்தாலும் தவறுக்கான தண்டனை இருக்கிறது. எப்படி ஐந்து ஆண்டுகளில் சொத்து மதிப்பு பல மடங்கு உயரும் '' என்றார்.