Published:Updated:

கோவைச் சம்பவம்: ``முதலில் தமிழக பாஜக தலைவரைத்தான் என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும்!" - செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

``காவல்துறை விசாரணை விவரங்களை வெளியிடுவதற்கு முன்பே, ஒரு கட்சியின் தலைவர் வெளியிடுகிறார். தமிழக பாஜக தலைவரைத்தான் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டும்." - செந்தில் பாலாஜி

கோவைச் சம்பவம்: ``முதலில் தமிழக பாஜக தலைவரைத்தான் என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும்!" - செந்தில் பாலாஜி

``காவல்துறை விசாரணை விவரங்களை வெளியிடுவதற்கு முன்பே, ஒரு கட்சியின் தலைவர் வெளியிடுகிறார். தமிழக பாஜக தலைவரைத்தான் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டும்." - செந்தில் பாலாஜி

Published:Updated:
அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``கோவை கோட்டைமேடு பகுதியில் சம்பவம் நடந்த உடனே அதிகாரிகள் அங்கு விரைந்துவிட்டனர். சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் காரின் உரிமையாளர், இறந்தவரின் விவரங்கள் கண்டறியப்பட்டன. 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அன்றைய தினம் மாலையே கோவை இயல்பு நிலைக்கு திரும்பி, மாலை அங்குக் கடைகள் எல்லாம் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக திறக்கப்பட்டன. தீபாவளி நாளில் பொதுமக்களுக்கு, எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாமல் பண்டிகை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் பதற்றமான சூழ்நிலை என தவறான கண்ணோட்டத்தை பரப்புகின்றனர். நடந்த சம்பவம் வருத்தபடக்கூடியது. முதல்வர் மற்ற மாவட்டங்களைவிட, கோவை மாவட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவு வருகை புரிந்துள்ளார். கோவை மாவட்டத்துக்கு அவர் தனிகவனம் செலுத்துகிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் சொல்லுகின்ற செய்திகளை பெரிதாக்கி, மக்களிடம் பதற்றமான சூழ்நிலை உருவாக்க துணை போக வேண்டாம். மதுரையில் ராணுவ வீரரின் உயிரிழப்பையே அரசியலாக்க முயற்சித்தவர் அவர் (அண்ணாமலை).

காவல்துறை விசாரணை விவரங்களை வெளியிடுவதற்கு முன்பே, ஒரு கட்சியின் தலைவர் வெளியிடுகிறார். தமிழக பா.ஜ.க தலைவரைதான் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டும்.

கோவை ஆலோசனைக் கூட்டம்
கோவை ஆலோசனைக் கூட்டம்

உள்ளூரில் விலை போகாத மாடு, வெளியூர் சந்தைக்கு போகுமாம். அப்படி ஒரு மட்டரக அரசியலைத்தான் செய்கின்றனர். அவருக்கு அரசியலில் அடிப்படை பக்குவம் இல்லை. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.

25 ஆண்டுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்துடன் இதை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஒன்றிய அரசு என்ன செய்ய வேண்டும் என ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில்கூட, நேற்று தலைமை செயலகத்தில் கூட்டம் போட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். வெடிகுண்டை உருவாக்கி சம்பவத்தை நிகழ்த்தவில்லை. சிலிண்டர், ஆணி என அனைத்துப் பொருள்களும் அங்கு தனித்தனியாகத்தான் இருந்தன.

கோவை கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு

கடையடைப்பு என்ற பெயரில் பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி அதில் ஆதாயமடைய நினைக்கின்றனர். அவர்களின் முயற்சி இந்த மண்ணில் எடுபடாது” என்றார்.