Published:Updated:

``ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்!" - செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

``2,811 மின் அலுவலகங்களில் இன்று முதல் வருகிற டிசம்பர் 31-ம் தேதி வரை மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன." - அமைச்சர் செந்தில் பாலாஜி

``ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்!" - செந்தில் பாலாஜி

``2,811 மின் அலுவலகங்களில் இன்று முதல் வருகிற டிசம்பர் 31-ம் தேதி வரை மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன." - அமைச்சர் செந்தில் பாலாஜி

Published:Updated:
அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்திவருகிறது. அரசு உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் இதற்காகச் சிறப்பு முகாம்களும் இன்றுமுதல் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், சென்னையில் சிறப்பு முகாமை ஆய்வுசெய்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய செந்தில் பாலாஜி, ``மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான பணிகள் ஏற்கெனவே தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் தொடங்கப்பட்டன. இதுவரை 15 லட்சம் மின் இணைப்புதாரர்கள் ஆதாருடன் இணைத்திருக்கின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

இது குறித்து இன்னும் விரிவாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்பட்டுவருகிற 2811 மின் அலுவலகங்களில், இன்று முதல் வருகிற டிசம்பர் 31-ம் தேதி வரை மின் இணைப்பு எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

பண்டிகை நாள்கள் தவிர ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து தினங்களிலும், பிரிவு அலுவலகங்களில் இதற்கான பணிகள் நடைபெறும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் அரசு மானியம் வழங்கி 100 யூனிட்டுகளுக்குள்ளாக பயன்படுத்தக்கூடிய குடிசைகளாக இருந்தாலும் சரி, ஏற்கெனவே வழங்கக்கூடிய 100 யூனிட்டுகள் இலவச மின்சாரமாக இருந்தாலும் சரி... கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரமாக இருந்தாலும் சரி... விவசாய மின் இணைப்பாக இருந்தாலும் சரி, இலவச மின் திட்டங்கள் மற்றும் அரசு வழங்கக்கூடிய மானியங்கள் அனைத்து நடைமுறைகளும் தொடர்ந்து பின்பற்றப்படும்.

சிறப்பு முகாம்
சிறப்பு முகாம்

பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், சமூக வலைதளங்களும், `மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கிறபோது இதெல்லாம் ரத்தாகிவிடும்' என உண்மைக்கு மாறாக தவறான பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. எனவே ஏற்கெனவே இலவச மின்சாரம் உள்ளிட்ட அரசு மானியம் வழங்கக்கூடிய மின் இணைப்புக்கான அனைத்துத் திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். ஒருவர் ஐந்து மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் சரி, மூன்று மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் சரி, ஏற்கெனவே வழங்கப்படுகின்ற 100 யூனிட்டுகள் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஒரு ஆதார் எண்ணில் 10 சர்வீஸ் இருந்தாலும் இணைத்துக்கொள்ளலாம். ஒருவேளை முன்னோர்கள் இறந்திருந்தால், அவர்களின் பெயரில் மின் இணைப்புகள் இருந்திருந்தால், இந்தச் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

மாற்றுத்திறனாளிகளாக இருந்தாலும் சரி, வயதானவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்குச் சிறப்பு கவுன்ட்டர்கள் தொடங்குவதற்கான பணிகள் இன்று மதியம் முதல் நடைமுறைப்படுத்தப்படும். மின் இணைப்பு எண் இல்லாதவர்களும் விண்ணப்பித்து வாங்கிக்கொள்ளலாம். 2.33 கோடி பேர், வீடுகளுக்கான மின் இணைப்பு பெற்றவர்கள். இதில் 15 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்திருக்கிறார்கள். இந்தத் தரவுகள் முழுவதும் நமக்கு கிடைக்கப் பெற்ற பிறகுதான், யார் வேறு வகைகளில் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

கண்டுபிடித்த பிறகுதான் சீரமைக்க முடியும். சீரமைக்கவில்லை என்றால் மேம்படுத்தவே முடியாது. பிறகு தொடர்ந்து மின்சார வாரியம் நஷ்டத்திலே இயங்கவேண்டியதுதான். இந்த முயற்சி மின்சார வாரியத்துக்கு மிகப்பெரிய ஒரு பலனைக் கொடுக்கும். இலவச மின்சார இணைப்புக்கும் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.