Published:Updated:

``விளம்பரம் வேறு, வேலை வேறு; அண்ணாமலை வெட்டி விளம்பரம் செய்கிறார்” - செந்தில் பாலாஜி தாக்கு

செந்தில் பாலாஜி

``அரவக்குறிச்சியில் ஓட்டுக்கு ரூ.1,000 பணம் கொடுத்தனர். ஐ.பி.எஸ் ஆபிஸராக இருந்தபோது சம்பளத்தில் சேர்த்து வைத்த பணமா.. இல்லை ஆட்டுக்குட்டி மேய்த்ததில் வந்த பணத்தையா கொடுத்தார்” - அமைச்சர் செந்தில் பாலாஜி

``விளம்பரம் வேறு, வேலை வேறு; அண்ணாமலை வெட்டி விளம்பரம் செய்கிறார்” - செந்தில் பாலாஜி தாக்கு

``அரவக்குறிச்சியில் ஓட்டுக்கு ரூ.1,000 பணம் கொடுத்தனர். ஐ.பி.எஸ் ஆபிஸராக இருந்தபோது சம்பளத்தில் சேர்த்து வைத்த பணமா.. இல்லை ஆட்டுக்குட்டி மேய்த்ததில் வந்த பணத்தையா கொடுத்தார்” - அமைச்சர் செந்தில் பாலாஜி

Published:Updated:
செந்தில் பாலாஜி

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஆட்சி மாறியதும் நீங்கள் முதலில் கைது செய்யப்படுவீர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி,

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சிலபேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கறந்த பால் மடி புகாது. அதேபோல நீங்கள் சொன்னவரின் கனவு ஒருபோதும் பலிக்காது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் அவர்கள். கோவையில் 100 வார்டுகளில் போட்டியிட்டனர். ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கரூரில் அவர் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என நீங்கள் கேட்க வேண்டும். இவ்வளவு வீர வசனம் பேசுபவர் அரவக்குறிச்சியில் ஏன் மண்ணைக் கவ்வினார்.

அண்ணாமலை
அண்ணாமலை

மக்கள் ஏன் விரட்டியடித்தார்கள். இப்போதும் கூட அவர்கள் என் மீது நடவடிக்கை எடுக்காலமே. அரவக்குறிச்சியில் ஓட்டுக்கு ரூ.1,000 பணம் கொடுத்தனர். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐ.பி.எஸ் ஆபிஸராக இருந்தபோது சம்பளத்தில் சேர்த்து வைத்த பணமா.. இல்லை ஆட்டுக்குட்டி மேய்த்ததில் வந்த பணத்தையா கொடுத்தார். நேர்மையான அதிகாரி போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கினார். மக்களுக்கு சேவை செய்யவா வேலையை விட்டார்..

நிலக்கரி
நிலக்கரி

எந்த காலத்திலும் அவர்கள் நினைப்பது நடக்காது. 143 டாலருக்கு நாங்கள் நிலக்கரி இறக்குமதி செய்துள்ளோம். இதுவே பாஜக ஆளும் மாநிலங்களில் எத்தனை டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.

நிலக்கரி தட்டுப்பாடு இருந்தபோது கூட இங்கு தடை இல்லாத மின்சாரம் கொடுத்தோம். பாஜக ஆளும் குஜராத்தில் ஏன் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அறிவித்தனர். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பாரத பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் இருப்பார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது என்னை தூக்கிப் போட்டு பல்லை உடைப்பேன் என்று அவர் கூறினார். இப்படித்தான் அவர் மக்கள் முன்பு பேசுவார். மக்கள் பணியாற்ற நினைப்பவர்கள் இப்படியா பேசுவார்கள்.

அதிமுக ஆட்சியில் மின்வாரிய வயரால் ஒருவர் இறந்துவிட்டார். அதற்கு அப்போதே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்கு தாக்கல் செய்தனர். அணிலால் ஏற்பட்ட பாதிப்பில் விபத்தாகி இறந்தார் என்று மின்வாரியம் பதில் அளித்தது. நீங்கள் சொன்ன படித்த முட்டாள், அதி மேதாவியை நான் கேட்கிறேன்.

மின் கம்பத்தில் அணில்
மின் கம்பத்தில் அணில்

இதுபோன்ற உயிரினங்களால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுமா ஏற்படாதா. இணையதளத்தில் பார்த்தாலே அது தெளிவாகும். விளம்பரத்துக்கும் வேலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் வேலையில் இருக்கிறோம். அவர் வெட்டி விளம்பரத்தில் இருக்கிறார்.

வெறும் நான்கு எம்எல்ஏகளை வைத்துக் கொண்டு பிரதான எதிர்க்கட்சி பாஜக என சொல்வதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அவர் மட்ட ரகமான அரசியல்வாதி. உள்ளாட்சி தேர்தல் நடத்துவது மாநில தேர்தல் ஆணையம். ஆனால் மத்திய தேர்தல் ஆணையத்துக்கு பதிவு போட்டவர் அவர். படித்த முட்டாள்களில் அவர் நம்பர் 1 முட்டாள் அவர்.

பாஜக கமலாலயம்
பாஜக கமலாலயம்

அப்படி தரம் தாழ்ந்து பேசும் அரசியல்வாதிக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம். தமிழகத்தின் தொழில்துறை தலைநகராக கோவையை உருவாக்குவது தான் முதல்வரின் இலக்கு. அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism