Published:Updated:

``நம் தலைவர் ஒரு மலை; சில மடுக்கள் மலையோட மோத நினைக்கிறார்கள்!" - கோவையில் செந்தில் பாலாஜி பேச்சு

செந்தில் பாலாஜி பேச்சு

`முதலமைச்சர் கோவை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து காப்பாற்றி விட வேண்டும். ' - செந்தில் பாலாஜி

``நம் தலைவர் ஒரு மலை; சில மடுக்கள் மலையோட மோத நினைக்கிறார்கள்!" - கோவையில் செந்தில் பாலாஜி பேச்சு

`முதலமைச்சர் கோவை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து காப்பாற்றி விட வேண்டும். ' - செந்தில் பாலாஜி

Published:Updated:
செந்தில் பாலாஜி பேச்சு

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 10 ஆண்டுகள் கழித்து ஆட்சியைப் பிடித்தாலும், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றைக்கூட பிடிக்க முடியவில்லை. அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணியே வெற்றிபெற்றது. இதனால் கோவையிலிருந்து யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில்தான், கோவை மாவட்டத்து பொறுப்பு அமைச்சராக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். கோவை அ.தி.மு.க-வின் கோட்டை என்று அந்தக் கட்சியினர் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சொல்லி அடித்தார் செந்தில் பாலாஜி.

கடந்த மாதம் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மத்திய அரசின் எட்டு ஆண்டுக்கால சாதனையை விளக்க பா.ஜ.க பொதுக்கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். மேலும் இந்த பொதுக்கூட்ட மேடை தமிழ்நாடு சட்டசபைத் தோற்றத்தில் அமைக்கப்பட்டிருந்தது பேசுபொருளானது.

கூட்டம்
கூட்டம்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொள்ளாச்சியில் வரும் ஜூலை 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க சார்பாக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்த அமைச்சர் செந்தில் பாலாஜி பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து கலந்தலோசிக்க கோவையில் இன்று ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கழக செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோவைக்கு வருகை தரவுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் வரவேற்பு தரவேண்டும் என்றும், முதல்வர் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகளில் தி.மு.க-வினர் பெருந்திரளாக பங்கு கொள்ளவேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ``ஜூலை 15-ம் தேதி மாலை பொள்ளாச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இதில் மாற்றுக் கட்சியினர் பலர் தி.மு.க-வில் இணையவுள்ளனர்.

மேலும் இந்த செயற்குழுக் கூட்டத்தின் அடுத்த இலக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலாக இருக்கவேண்டும். இந்தியாவில் இருக்கும் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் நம் முதல்வர். நம் மாநிலத்தில் உள்ள திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தக்கூடிய வகையில் தீர்மானிக்கூடிய சக்தியாக திகழ 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நாம் வென்றிட வேண்டும். கோவை, பொள்ளாச்சியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும்.

கூட்டம்
கூட்டம்

சில பேர் கோவையிலும், பொள்ளாச்சியிலும் கூட்டங்களை நடத்தி மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இந்த மேடை வாயிலாக, கோவை டாக்டர் கலைஞர் அவர்களின் கோட்டையாக இருந்தது. மீண்டும் இப்பொழுது மாண்புமிகு தளபதி அவர்களின் இரும்பு கோட்டையாக இருக்கிறது என்பதை நிரூபித்து காட்டவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் இரவு பகல் பாராமல் அயராது வெற்றிக்கு உழைத்ததுப்போல், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும். கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.

இதற்கு கூட்டம் போட்டார்கள், அதற்கு கூட்டம் போட்டார்கள் என்று சில பேர் சில கருத்துகளைச் சொல்லலாம். நாம் கூட்டம் இல்லை, நாம் மலை. நமது தலைவர் ஒரு மலை. சில மடுக்கள் மலையோட மோத நினைக்கிறார்கள். அவர்கள் சில நேரங்களில் சில வார்த்தைகளை கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்கு நாம் செவி சாய்க்க அவசியம் இல்லை.

நம்மை பொறுத்தவரை நமது கழகத்தலைவர் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக ஏற்று வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் முதலமைச்சருக்கு எழுச்சியான வரவேற்பை வழங்கி வருகிறார்கள். மக்கள் மனுக்களை தருவதற்கு பதிலாக முதலமைச்சரின் உடல்நலத்தை விசாரிக்கிறார்கள்.

``நம் தலைவர் ஒரு மலை; சில மடுக்கள் மலையோட மோத நினைக்கிறார்கள்!" - கோவையில் செந்தில் பாலாஜி பேச்சு

முதலமைச்சர் அவர்கள் இந்தியாவை வழிநடத்தக்கூடிய தகுதி வாய்ந்தவர். எனவே அவருக்கு நாம் நிச்சயமாக 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தரவேண்டும். முதலமைச்சர் கோவை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து காப்பாற்றி விட வேண்டும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, கண்ணப்பன், கோவை மாவட்ட செயலாளர்கள், திருப்பூர் மாவட்ட செயலாளர்கள், தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.