Published:Updated:

``பிற மாநிலங்களுக்கே மின்சாரம் கொடுக்கிறோம்” - செந்தில் பாலாஜி பெருமிதம்

செந்தில் பாலாஜி

``இந்தியா முழுவதும் நிலக்கரிப் பற்றாக்குறை. திராவிட மாடல் ஆட்சியான தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகம் உள்ளது.” - செந்தில் பாலாஜி

``பிற மாநிலங்களுக்கே மின்சாரம் கொடுக்கிறோம்” - செந்தில் பாலாஜி பெருமிதம்

``இந்தியா முழுவதும் நிலக்கரிப் பற்றாக்குறை. திராவிட மாடல் ஆட்சியான தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகம் உள்ளது.” - செந்தில் பாலாஜி

Published:Updated:
செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் திராவிட மாடல் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “திராவிடம் என்பது வெறும் கோட்பாடு மட்டும் அல்ல. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக நம்மீது அடிமைத்தனத்தைத் திணித்தவர்களிடமிருந்து மீட்க வந்த ஆயுதம்தான் திராவிட மாடல்.

திராவிட மாடல் பயிலரங்கம்
திராவிட மாடல் பயிலரங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதனை மனிதனாக நடத்த வேண்டும் என்ற பகுத்தறிவுதான் திராவிட மாடல். பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் கட்டிக்காத்து, இன்று தளபதி கையில் ஏந்தியிருக்கும் சுயமரியாதைச் சுடர்தான் திராவிட மாடல். சில பேர் குஜராத் மாடல் என்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கு தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டு அறிவிக்கப்பட்டு, மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியான தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் நிலக்கரிப் பற்றாக்குறை. தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகம் உள்ளது.

மின்சாரம்
மின்சாரம்

இடையில் மூன்று நாள்கள் மின் விநியோகம் தடைப்பட்டது. ஒன்றிய அரசு வழங்கக்கூடிய மின்சாரத்தில் ஏற்பட்ட தடங்கல்தான் காரணம். அதை மூன்று நாள்களில் சரிசெய்து, இப்போது உபரியாக மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுத்துவருகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவையைப் பொறுத்தவரை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்தான் இலக்கு. சில பேர், ‘நாங்கள் வருகிறோம். அந்த மாடலைக் கொண்டுவரப்போகிறோம்.’ எனச் சொல்கின்றனர். நாம் ஒரு ரூபாய் வரி கட்டினால் ஒன்றிய அரசு திருப்பித் தருவது 35 பைசா மட்டுமே. ரூ.100 வரி கட்டினால் ரூ.35 மட்டுமே நமக்கு திருப்பித் தருகின்றனர்.

கோவை
கோவை

பல்வேறு மாநில முதல்வர்களும், நம் முதல்வரின் செயல்பாடுகளைப் பார்த்து வியந்துகொண்டிருக்கின்றனர். அதனால்தான் அவர் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக இருக்கிறார்” என்றார்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பி-யுமான ஆ.ராசா, ``அம்பேத்கரைத் தோற்கடித்தது ஆரிய மாடல். அம்பேத்கரின் கனவை நிறைவேற்றியது திராவிட மாடல். காமராஜர் கொண்டு வந்ததும் திராவிட மாடல்தான். தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் திராவிட மாடல் பேசப்படுகிறது.

ராசா
ராசா

இதற்குக் காரணம் முதல்வர். செந்தில் பாலாஜி அதிமுக-வில் இருந்தபோதே சிறப்பாகச் செயல்பட்டார். திராவிடத்தைக் காப்பாற்ற, கடவுள் நம்பிக்கையுள்ள செந்தில் பாலாஜி இந்தக் கருத்தரங்கை நடத்துவதை பாராட்டுகிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism