Published:Updated:

"முதலீட்டாளர் மாநாட்டுக்கு பிறகு ரூ. 2.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்!"-தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

"பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. திறன் மிகு நிறுவனங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன." -அமைச்சர் தங்கம் தென்னரசு

"முதலீட்டாளர் மாநாட்டுக்கு பிறகு ரூ. 2.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்!"-தங்கம் தென்னரசு

"பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. திறன் மிகு நிறுவனங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன." -அமைச்சர் தங்கம் தென்னரசு

Published:Updated:
அமைச்சர் தங்கம் தென்னரசு

தொழில்துறை வாய்ப்புகள் அதிகம் இல்லாத மலை மாவட்டமான நீலகிரியில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்திருந்தார். இதனடிப்படையில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான இடத்தேர்வு நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்திருந்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி எம்.பி ராசா மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோரும் இவருடன் ஆய்வில் ஈடுபட்டனர். நீலகிரி ஆட்சியர் அம்ரித் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊட்டியில் மினி டைடல் பார்க் விரைவில் உருவாக்கப்படும். இதன் மூலம் சுமார் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஊட்டியில் இயங்கி வந்த போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை அருகில் உள்ள இடம் தேர்வாக இருக்கிறது. வனத்துறை வசமுள்ள இந்தப் பகுதியில் 5 முதல் 10 ஏக்கர் வரை பெற்று டைடல் பார்க் அமைக்கப்படும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல ஐ.டி நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றன. கோவையில் உள்ள டைடல் பார்க்கிற்கு தற்போது ஏராளமான நிறுவனங்கள் வந்த நிலையில், கோவை டைடல் பார்க் தற்போது நிரம்பி வழிகிறது. தொழில்கள் முடங்கும் நிலை தமிழ்நாட்டில் உருவாகவில்லை. தொழில் முதலீட்டாளர் மாநாட்டிற்கு பின்பு 2.50 லட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. திறன் மிகு நிறுவனங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. வேறு மாநிலங்களை காட்டிலும் தொழில்திறன் கொண்ட மாணவர்கள் இங்கு அதிகம் உள்ளனர். 4.0 தொழில்புரட்சி கொண்டு வர தொழில்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது" என்றார்.