Published:Updated:

பரந்தூர் விமான நிலையம்: "மக்கள் மறுவாழ்வுக்கு சந்தை விலையைவிட அதிக இழப்பீடு" - தங்கம் தென்னரசு தகவல்

பரந்தூர் விமான நிலையம்

பரந்தூர் விமான நிலையத்துக்கான தேவை, பொருளாதார முக்கியத்தும், நீர்நிலைகள் பாதுகாப்பு, விவசாய நிலங்களுக்கான இழப்பீடு, மக்களுக்கான மீள்குடியமர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பரந்தூர் விமான நிலையம்: "மக்கள் மறுவாழ்வுக்கு சந்தை விலையைவிட அதிக இழப்பீடு" - தங்கம் தென்னரசு தகவல்

பரந்தூர் விமான நிலையத்துக்கான தேவை, பொருளாதார முக்கியத்தும், நீர்நிலைகள் பாதுகாப்பு, விவசாய நிலங்களுக்கான இழப்பீடு, மக்களுக்கான மீள்குடியமர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Published:Updated:
பரந்தூர் விமான நிலையம்

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர் பகுதியில் அமைக்கப்படுவதற்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த 12 கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கான தேவை, பொருளாதார முக்கியத்தும், நீர்நிலைகள் பாதுகாப்பு, விவசாய நிலங்களுக்கான இழப்பீடு, மக்களுக்கான மீள்குடியமர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பரந்தூர் கிராமம்
பரந்தூர் கிராமம்

அந்த அறிக்கை விவரத்தை சுருக்கமாகக் காண்போம்.

புதிய விமான நிலையத்திற்கான தேவைகள்:

``தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில், பொதுமக்கள் வசிக்கும் நிறைய குடியிருப்புகளும் கட்டடங்களும் நிறைந்திருப்பதாலும், நிலத்தின் மதிப்பு மிக அதிக அளவில் இருப்பதாலும், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அவசியம் தேவையான நிலத்தை கையகப்படுத்துவது மிகவும் கடினமாகும். மேலும், ஏற்கெனவே அமைந்துள்ள மூன்று விமான நிலைய முனையங்கள் (Terminals) மற்றும் தற்போது கட்டப்பட்டு வரும் நான்காவது முனையம் ஆகியவை இணையாக அமைந்துள்ளதால், முனையங்களுக்கு அருகில் விமானங்கள் நிறுத்தும் இடத்தினை தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைப்பது கடினமாகும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்திய விமானப் பயணிகள் போக்குவரத்தில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், 2008-ம் ஆண்டில் மூன்றாவது இடத்தை வகித்தது. தற்போது, 5-வது இடத்தினை வகிக்கிறது. 2008-ம் ஆண்டில், 5-வது இடம் வகித்த அப்போதைய பெங்களூர் விமான நிலையம், புதிய விமான நிலையம் அமைத்தப் பின், சென்னை விமான நிலையத்தைவிட அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை முறையே 14 விழுக்காடு மற்றும் 12 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. அதே வேளையில், சென்னை விமான நிலையத்தின் வளர்ச்சி 9 விழுக்காடு மட்டுமே.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

2028-ற்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லையெனில் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியின் தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி தேக்கமடையும். மேலும், விமானப் போக்குவரத்து மற்றும் அதன் தொடர்புடைய பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பலன்களையும் தமிழ்நாடு இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.

பரந்தூர் பகுதி
பரந்தூர் பகுதி

எனவேதான் பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையம் அடுத்த 30-35 வருடங்களுக்கான எதிர்கால விமான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்படவுள்ளது. மேலும் பெரிய அளவிலான விமானங்கள் நிறுத்துவதற்கும் விமான நிலைய முனையம் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு அமைப்பதற்கும். சுமார் 4,700 ஏக்கர் தொடர்ச்சியான நிலங்கள் தேவைப்படுகின்றது. பல்வேறு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, தொடர்ச்சியான நிலங்கள், பரப்பு, நில அமைப்பு மற்றும் சமூக பொருளாதார காரணிகளை கருத்திற்கொண்டு, பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

பரந்தூரில் உள்ள நீர் வழித்தடங்களில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி தமிழ்நாடு அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும். பெரிய நெல்வாய் ஏரி (360 ஏக்கர்) திட்ட செயல்பாட்டு பகுதிக்கு உள்ளே இருந்தாலும், அதனை ஆழப்படுத்தி தொடர்ந்து ஏரியாக பராமரிக்கப்படும். விமான நிலைய செயல்பாட்டினால் சுற்றுப்பகுதி நீர்நிலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும்.

புதிய விமான நிலைய திட்ட பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் நீர்நிலைகள், விவசாய நிலங்களின் நீர்பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இணைக்கப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதற்காக தற்போதுள்ள நீர்நிலைகள் தேவைப்படும் இடங்களில் ஆழப்படுத்தப்படும், அந்த நீர்நிலைகள், வடிகால் மூலம் சுற்றியுள்ள நீர்நிலைகளுடன் இணைக்கப்படும்.

பரந்தூர் கிராம மக்கள்
பரந்தூர் கிராம மக்கள்

மேலும் அந்த நீர்நிலைகளை ஆய்வு செய்வதற்கும், அதனை தொடர்ந்து பராமரிப்பதற்கும்... நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்கும், புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் மாற்று திட்டங்களை பரிந்துரைக்கவும், ஒரு உயர்மட்ட தொழில் நுட்ப குழு அமைக்கப்படும். இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் காக்கப்படும். மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும்.

பரந்தூர் விவசாயப் பகுதி
பரந்தூர் விவசாயப் பகுதி

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததான இப்புதிய விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு, விவசாயிகளின் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கும் சந்தை விலையைவிட கூடுதலாக மிகவும் திருப்திகரமான இழப்பீட்டை வழங்கும்.

புதிய விமான நிலையத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கப்பெறும் பொருளாதார வளர்ச்சி சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் (ICAO) ஆய்வின்படி, விமான போக்குவரத்திற்கு செலவழிக்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், 325 ரூபாய் அளவிற்கு பொருளாதார பலன்கள் கிடைக்கும் (3.25 மடங்கு) மற்றும் ஒவ்வொரு 100 நேரடி வேலை வாய்ப்புக்கும் 610 நபர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

இப்புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாடு பல மடங்கு அதிகமாக தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும். இதன் மூலம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவது மட்டுமின்றி, விமான நிலையம் மூலம் உருவாகும் அனைத்து பொருளாதார பலன்களையும் அவர்கள் கிடைக்கப் பெறுவர்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.