Published:Updated:

`ஸ்டாலின் 'பெஞ்ச்மார்க்’.. அமைச்சர்களால் நெருங்க முடியவில்லை!' - ஆச்சர்ய தங்கம் தென்னரசு

ஸ்டாலின்
ஸ்டாலின்

“முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய பணி இலக்குகள் குறித்து தனக்கென ஒரு ‘பெஞ்ச்மார்க்’ செட் பண்ணிவிடுகிறார். அதை நோக்கி வேகமாக ஓடுகிறார். என்னைப் போன்றவர்களால்கூட அவருக்கு இணையாக ஓட முடியவில்லை” என்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விகடன் யூடியூப் சேனலுக்கு சிறப்பு நேர்காணல் அளித்தார். அதிலிருந்து சில பகுதிகள்...

“எழுத்தாற்றல், பேச்சாற்றல், நிர்வாகத்திறன் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பல ஆற்றல்கள் உண்டு. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் தனித் திறமைகள் என எதைப் பார்க்கிறீர்கள்?”

“இருவரையும் ஒரு தட்டில் வைத்து ஒப்பீடு செய்ய வேண்டியதில்லை என்பது என் கருத்து. ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உண்டு.

கருணாநிதி
கருணாநிதி

இருவருமே கடினமான உழைப்பாளிகள். முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரையில், கடினமான உழைக்கக்கூடியவர் என்கிற அதே நேரத்தில், உடனடியாக ரிசல்ட் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். முதல்வர் ஸ்டாலினுக்கு இணையான ஓடுவது என்பது என்னைப் போன்றவர்களுக்கு பெரும் சவாலான விஷயமாக இருக்கிறது. ‘உழைப்பு... உழைப்பு... உழைப்பு என்பதற்கு ஓர் உருவம்தான் ஸ்டாலின்’ என்று மறைந்த தலைவர் கருணாநிதியே சொல்லியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரை, உழைப்பதற்கு ஒரு பெஞ்ச்மார்க் செட் பண்ணிவிடுகிறார். எனவே, அவர் அளவுக்கு இணையாக ஓட முடியாவிட்டாலும், அவருக்கு பக்கத்திலாவது ஓட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் வேகமாக இருக்கின்றன. அதனால், வேகமாக செயல்பட வேண்டும் என்கிற கட்டாயத்தில் நாங்கள் அவருடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

அதே நேரத்தில், ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தனிமைகள் உண்டு. தலைவர் கருணாநிதிக்கு இருக்கிற தனித்திறமைகள் முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. அதேபோல, இவருக்கு இருக்கிற தனித்திறமைகள் அவருக்கு இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அப்படிப் பார்த்தால், தனித்திறமை என்பதே இல்லாமல் போய்விடும். முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரையில், எல்லா துறைகளிலும் இவருக்கு ஒரு புரிதலும் ஆற்றலும் இருக்கிறது. நல்ல தலைமைப்பண்பு இருந்தால், அனைத்து ஆற்றலும் வந்துவிடும்.

`காவிரி அரசியல்'-1991-ல் கர்நாடகாவில் வெடித்த கலவரம் முதல் இறுதித் தீர்ப்பு வரை நடந்தது என்ன? பாகம்2

முதல்வர் ஸ்டாலின் சிறந்த தலைமைப் பண்பும் கடின உழைப்பும் கொண்டவர். மிகப்பெரிய ஆளுமையாக அவர் உருவெடுத்திருக்கிறார் என்பதை தமிழக மக்கள் பார்த்துவருகிறார்கள். தமிழ்நாட்டை முன்மாதிரியான ஒரு மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு இருக்கிறது”.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்க வேண்டுமென்பதில் நீங்கள் உறுதியாக இருப்பதன் நோக்கம் என்ன?

• தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு பற்றி தொழில்துறை அமைச்சர் என்ற முறையில் உங்கள் கனவு என்ன?

• எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றார். அவரது ஆட்சிக் காலத்தில் ஏராளமான தொழில் முதலீடுகள் கொண்டுவந்ததாக சொல்லப்பட்டது? அவர்கள் சொன்ன அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளனவா?

இன்னும் பல கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்திருக்கிறார். வீடியோ நேர்காணலை காண...

அடுத்த கட்டுரைக்கு