Published:Updated:

``தமிழாராய்ச்சி நிறுவனத்திலேயே இந்தி மொழியை அறிவித்த அதிமுக பேசலாமா?" - அமைச்சர் தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

தமிழ் ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட உயர் அமைப்பான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலேயே இந்தி மொழி கற்றுத்தரப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டது அ.தி.மு.க அரசுதான் என அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியிருக்கிறார்.

``தமிழாராய்ச்சி நிறுவனத்திலேயே இந்தி மொழியை அறிவித்த அதிமுக பேசலாமா?" - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ் ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட உயர் அமைப்பான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலேயே இந்தி மொழி கற்றுத்தரப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டது அ.தி.மு.க அரசுதான் என அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியிருக்கிறார்.

Published:Updated:
தங்கம் தென்னரசு

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ``இந்தி மொழி விவகாரத்தில் தி.மு.க அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஒருபக்கம் தமிழை வளர்க்கிறோம் என்று போராடுகிறது. மற்றொரு பக்கம் தமிழகத்தின் அறிவிப்புகளை இந்தியில் வெளியிடுகிறது” என்ற குற்றம்சாட்டியிருந்தார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

அதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார். அதில், ``மொழிப் பிரச்னையில் வழக்கம்போல அ.தி.மு.க மேற்கொள்ளும் இரட்டைவேடம் இப்போது வெட்ட வெளிச்சமாக மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு விட்டது. அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தி.மு.க மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்.

இந்தி மொழிக்கு அ.தி.மு.க பட்டுக்கம்பலம் விரித்த வரலாறுகளை எல்லாம் மூடிமறைக்க முயன்றிருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் தமிழகத்தில் 117 கோயில்களுக்குக் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன. ஏறத்தாழ ரூபாய் 664 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கோயில்களுக்குத் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற ஆணைகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 குடமுழுக்கு!
குடமுழுக்கு!

இந்து சமய அறநிலையத் துறையின் உறுதியான நடவடிக்கைகளால் ஏறத்தாழ ரூ.1,600 கோடி மதிப்பிலான திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. இந்த நற்செயல்களை எல்லாம் நல்லுணர்வு கொண்ட நல்ல உள்ளங்கள் அனுதினமும் பாராட்டி வருகின்றன. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் திருக்கோயில்களை தி.மு.க அரசியல் செய்கிறது என்று பச்சைப் பொய்யைப் பரப்பி வருகிறார்.

இது அவரது விரக்தியின் வெளிப்பாடு. தமிழ் வளர்ச்சித் துறை எனும் தனித்துவமான துறையை உருவாக்கி அதில் தனி அமைச்சகம் ஒன்றையும் தோற்றுவித்ததோடு மட்டுமல்லாமல் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் தமிழின் பெருமைக்கு தி.மு.க ஆற்றி வரும் பணிகள் எண்ணிலடங்காதவை. கலைஞரும், முதல்வரும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்பது சாதனை சரித்திரத்தின் ஒருப் பகுதி என்பதை ஓ.பன்னீர்செல்வம் நினைவு கூறவேண்டும்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

சங்கம் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் செலவில் தமிழன்னைக்குச் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துவிட்டு அதற்காக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் அந்த திட்டத்தைக் கைவிட்டு தமிழன்னையை அவமதித்தது அ.தி.மு.க அரசு என்பதையும், அந்த அரசில்தான் 10 ஆண்டுகாலமாக நிதிநிலை அறிக்கை ஓ.பன்னீர்செல்வம் வாசித்து வந்தார் என்பதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பேரறிஞர் அண்ணாவால் அறிவிக்கப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்டு தமிழ் ஆராய்ச்சிக்கென அமைக்கப்பட்ட உயர் அமைப்பான தமிழ் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி கற்றுத் தரப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்ட அ.தி.மு.க அரசில்தான் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சராக இடம் பெற்றிருந்தார் என்பதை மறுக்க முடியுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

பரிதிமார்கலைஞர் கண்ட கனவை நனவாக்கி கலைஞரின் தளராத முயற்சியால் தமிழன்னையின் மகுடத்தில் ஒளிவீசும் மாணிக்கமான செம்மொழி என்ற தகைமையை அந்த சொல்லைக் கூட பத்தாண்டுக் கால தமிழ் வளர்ச்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்புகளில் இடம்பெறாது பார்த்துக்கொண்ட அ.தி.மு.க ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கான சாதனைகள் எனப் பட்டியல் போட முனைந்திருப்பதுதான் வேடிக்கையானது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism