Published:Updated:

``நான் உங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளை" - கோவை விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

``கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன், அமைச்சர் என்ற பெருமையைவிட, நான் உங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளையாகவே இருக்க விரும்புகிறேன்.” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் நேற்று (25-12-2022) கோவை மாவட்டத்துக்கு வருகை புரிந்தார். நேற்று காலை கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

``நான் உங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளை" - கோவை விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பின்னர், கொடிசியாவில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "சென்னைக்கு அடுத்த நிலையில் உழைப்பால் பிரசித்திபெற்ற மாவட்டமாக கோவை இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 575 மனுகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. கோவையை தி.மு.க அரசு புறக்கணித்துவிடும் என்று பத்திரிகையாளர்கள் பேசினார்கள். அவை பொய் என்று செந்தில் பாலாஜி நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இந்த விழாவில் 368 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவிருக்கின்றன. தமிழ்நாட்டிலேயே அதிக நலத்திட்ட உதவிகள் பெற்ற மாவட்டமாக கோவை திகழ்கிறது.

அ.தி.மு.க-வாக இருந்தாலும், பா.ஜ.க-வாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன், அமைச்சர் என்ற பெருமையைவிட, நான் உங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளையாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார்.

``நான் உங்கள் வீட்டுச் செல்லப்பிள்ளை" - கோவை விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்த விழாவில் பேசிய கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கோவை பெற்ற வளர்ச்சியைவிட, தற்போது நடைபெறும் தி.மு.க ஆட்சியில் அதிக வளர்ச்சி பெறும். அன்னூரில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு விவசாய நிலங்களை அரசு கட்டாயப்படுத்தி எடுப்பதாகப் பொய்ச் செய்தி பரப்பினார்கள். விவசாயிகள் விருப்பமிருந்தால் நிலங்களைத் தரலாம். அரசு கட்டாயப்படுத்தி எடுக்காது" என்றார்.