வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விலையில்லா லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.

முதல்கட்டமாக, வேலூர் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 11 பள்ளிகளில் படிக்கும் 2,117 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 13 லட்சம் மதிப்பிலான லேப்டாப்களை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
இதில் அமைச்சர் வீரமணி பேசுகையில், ‘‘அம்மா விட்டுச்சென்ற அனைத்து திட்டங்களையும் நாங்கள் தொடர்ந்து செயல்படுத்திவருகிறோம். தமிழக அரசால் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
‘‘கலெக்டர் ராமன் எங்களை தட்டிக்கொடுத்து மக்களின் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுத்தார்.’’‘‘பிரியா விடைகொடுப்பதாக’’ பேசிய அமைச்சர் வீரமணி.
இதனைத் தெரிந்துகொள்வதற்கு வசதியாக லேப்டாப்கள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்தியாவிலேயே அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து தேவைகளையும் இலவசமாக வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான்.
நம்முடைய கலெக்டர் ராமன் சேலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பிரியா விடை கொடுக்கிறோம். ராமனின் சிறப்பான பணியைப் பார்த்து முதல்வரே தன்னுடைய மாவட்டத்துக்கு அழைத்துக்கொண்டார். இதுவும் பதவி உயர்வு மாதிரிதான்.

எங்கள் வாழ்க்கையில் இந்த கலெக்டரை மறக்க முடியாது. அவர் இன்னும் பல்வேறு உயர் பதவிகளுக்கு செல்லவேண்டும்’’ என்றார். கலெக்டர் மாற்றப்பட்ட விவகாரத்தில் அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.