Published:Updated:

``எட்டு வழிச்சாலை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை!" - அமைச்சர் எ.வ.வேலு

எ.வ.வேலு

``சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசு இதுவரை அது குறித்துக் கடிதம் எதுவும் மாநில அரசுக்கு எழுதவில்லை" என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

``எட்டு வழிச்சாலை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை!" - அமைச்சர் எ.வ.வேலு

``சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசு இதுவரை அது குறித்துக் கடிதம் எதுவும் மாநில அரசுக்கு எழுதவில்லை" என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Published:Updated:
எ.வ.வேலு

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்றுவரும் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ``சென்னையில் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள 258 கி.மீ நீளமுள்ள சாலைகளைச் சீரமைக்க ரூ.263 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்றுவருகின்றன. அனைத்து சாலைகளையும் மில்லிங் செய்து மறுசீரமைக்க ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தியிருக்கிறோம்.

4,600 மீட்டர் நீர்வழிப் பாதையில், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த பணிகள் ஆறு மாதங்களில் நிறைவடையும். சென்னையில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. இனி வரும் நாள்களில் அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் பணிகள் நடைபெறும்.

சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்டம்
சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்டம்

சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை, அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசு இதுவரை அது குறித்துக் கடிதம் எதுவும் மாநில அரசுக்கு எழுதவில்லை. மத்திய அரசு கடிதம் அனுப்பும் பட்சத்தில் இது குறித்தான முதல்வரின் கொள்கை முடிவுப்படி செயல்படுவோம்” என்றார்.

சேலம் - சென்னை இடையேயான, 277 கி.மீ தூரச் சாலையை, சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், எட்டுவழிச் சாலையாக மாற்றும் திட்டத்தை ( 8 Lane Green Road ) மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்கு, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரின் இந்தத் தகவல் கவனம் பெறுகிறது

இந்தத் திட்டத்தைக் கைவிடுவது குறித்து, மாநில அரசிடமிருந்து இதுவரை எழுத்துபூர்வமாக தகவல் எதுவும் வரவில்லை எனத் தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism