Published:Updated:

`85 அடியில் நான் கேட்ட மூச்சு சத்தம்...!' - சுர்ஜித் நினைவால் கலங்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித் பற்றி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

`85 அடியில் நான் கேட்ட மூச்சு சத்தம்...!' - சுர்ஜித் நினைவால் கலங்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித் பற்றி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

Published:Updated:
விஜயபாஸ்கர்

திருச்சி மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ - கலா மேரி தம்பதியின் இரண்டு வயது மகன் சுர்ஜித். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:40 மணியளவில் தன் வீட்டுக்கு அருகில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான்.

சுர்ஜித்
சுர்ஜித்

குழந்தையை மீட்கக் கடந்த நான்கு நாள்களுக்கு மேலாக இரவு பகலாக மீட்புப் பணி நடைபெற்றுவந்த நிலையில், நேற்று இரவு குழந்தை விழுந்த குழியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் சிறுவன் சுர்ஜித் இறந்துவிட்டதாகவும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன் பின்னர் குழந்தையின் உடல் இன்று அதிகாலை 4:30 மணிக்குக் குழியிலிருந்து எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த பிறகு அவனை எப்படியாவது மீட்க வேண்டும் என மொத்த தமிழகமும் தொடர் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தது. 10-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட மற்றும் அரசு குழுக்கள் இணைந்து செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. மீட்புப் பணி தொடங்கிய முதல்நாள் முதலே சம்பவ இடத்திலிருந்து பணிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

கடந்த வெள்ளிக்கிழமை குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த அன்றைய தினம் மாலை சம்பவ இடத்துக்குச் சென்ற அமைச்சர், தொடர்ந்து 4 நாள்களுக்கு மேலாக அதே இடத்தில் முகாமிட்டிருந்தார். பல்வேறு அதிகாரிகள், முதல்வர், அமைச்சர்கள் என அனைவரிடமும் தொடர்பிலிருந்து குழந்தையை மீட்க பெரும் பங்காற்றினார். அமைச்சரின் செயலுக்கு சமூகவலைதளங்களில் அனைவரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் மீட்புப் பணியில் தான் இருந்த நான்கு நாள் நிகழ்வுகளையும் சிறுவன் சுர்ஜித் பற்றியும் கருத்து பதிவிட்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். ``நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுர்ஜித்தின் அழுகுரல் இன்னும் என்னுள் ஒலிக்கிறது. என் மனம் வலிக்கிறது. எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான் உணவு இன்றி, உறக்கமின்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை.

கருவறை இருட்டுபோல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். ஆனால், அது கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை. மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்துக் காத்திருந்தேன். இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனக்கிறது.

85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச் சத்தம்தான் என்னை மீட்புப் பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாசப் பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது. மனதைத் தேற்றிக்கொள்கிறேன். ஏனென்றால் இனி நீ கடவுளின் குழந்தை....!” என மிகவும் உருக்கமாக தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism