Published:Updated:

`சாதி மறுப்புத் திருமண உதவித் தொகை!' - சு.வெங்கடேசன் எம்.பி-யின் கேள்வியும் அமைச்சரின் பதிலும்

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

வருடத்துக்கு இலக்கு 500 என்பது அடையாளத்துக்கு மட்டுமே. அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயமில்லை. ஊக்கத் தொகையை அதிகரிக்கும் திட்டமும் இப்போது இல்லை.

சாதி மறுப்புத் திருமணத் தம்பதியினருக்கு மத்திய அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறித்த கேள்விக்கு மத்திய அரசு அளித்திருக்கும் பதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

'சமூக ஒற்றுமைக்கான டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின்' மூலம் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை எவ்வளவு. 2015-16 முதல் 2018-19 நிதியாண்டுகளில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளில் எத்தனை பேர் ஊக்கத் தொகை கேட்டு விண்ணப்பித்தனர். இந்த காலகட்டத்தில் எத்தனை தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது?

'ஒரு நிதியாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 500 சாதி மறுப்பு தம்பதிகளுக்கு வழங்கும் அளவுக்கு ஊக்கத்தொகை கிடைத்ததா? இத்திட்டத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகையையும் பயனாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் திட்டம் உள்ளதா என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எழுத்து மூலமாக மக்களவையில் கேள்விகள் எழுப்பியிருந்தார்

சமூக நலத்துறை இணையமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா
சமூக நலத்துறை இணையமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா

சமூக நலத்துறை இணையமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா இதற்குப் பதில் அளிக்கும்போது, ``சமூக ஒருமைப்பாட்டுகான டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின் மூலம் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு மணமக்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ. 2.5 லட்சம்.

``கீழடி, அகரம், மணலூரை சங்ககால வாழ்விடமாக அறிவிக்க வேண்டும்" - எழுத்தாளர் சு.வெங்கடேசன்

2015-16-ம் ஆண்டில் 544 சாதி மறுப்புத் தம்பதியினர் விண்ணபித்து இருந்தனர். இதில் 54 பேருக்கு மட்டும் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. இதே போல் 2016-17-ல் வந்த 711 விண்ணப்பங்களில் 67 தம்பதியினருக்கும், 2017-18-ல் 582 விண்ணப்பங்களில் 136 தம்பதியினருக்கும் 2018-19-ல் 493 விண்ணப்பங்களில் 120 தம்பதியினருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

ஆண்டுக்கு 500 இலக்கு என்பது 2013 -14, 2014 -15 ஆகிய இரு ஆண்டுகளுக்கு பரிசோதனை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. `2015-ம் ஆண்டைத் தாண்டியும் இத்திட்டத்தைத் தொடர வேண்டும்' என டாக்டர் அம்பேத்கர் மையம் முடிவெடுத்தது. வருடத்துக்கு 500 எனும் இலக்கு என்பது அடையாளத்துக்கு மட்டுமே. அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயமில்லை. ஊக்கத் தொகையை அதிகரிக்கும் திட்டமும் இப்போது இல்லை'' என்று அமைச்சர் பதில் அளித்திருப்பதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சரின் இந்தப் பதில் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு