Published:Updated:

மிஸ்டர் கழுகு: திணறும் நிர்மலா... திகைத்த ஸ்டாலின்... திரும்பிவந்த விஜயபாஸ்கர்!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

‘ஊரடங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண்டிப்பாக நிதியுதவி செய்ய வேண்டும்’ என்பதில் பிரதமர் உறுதியாக இருக்கிறாராம்.

மிஸ்டர் கழுகு: திணறும் நிர்மலா... திகைத்த ஸ்டாலின்... திரும்பிவந்த விஜயபாஸ்கர்!

‘ஊரடங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண்டிப்பாக நிதியுதவி செய்ய வேண்டும்’ என்பதில் பிரதமர் உறுதியாக இருக்கிறாராம்.

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு
கழுகார் வீடியோ காலில் வந்ததும், ‘‘ஏப்ரல் 15-ம் தேதியன்று மத்திய அமைச்சரவை கூடி ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். அது ஏன் நடக்கவில்லை?’’ என்று கேள்வியை வீசினோம். பதில் சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.

‘‘அதில்தான் பலருக்கும் குழப்பம். ஏப்ரல் 15-ம் தேதி மாலையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்களில் பேசப்பட்டது. மூத்த அமைச்சர்கள், பிரதமர் அலுவலகத்துக்கோ அவரின் வீட்டுக்கோ விஜயம் செய்வார்கள் என்று செய்தியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இரவு 8 மணியைக் கடந்தும் கூட்டம் நடத்துவதற்கான எந்த முன்னேற்பாடுகளும் நடக்கவில்லை.’’

‘‘என்ன காரணமாம்?’’

‘‘நிதித்துறை அமைச்சகம் அன்றைய தினம் காலை முதலே ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்துள்ளது. மற்றொரு புறம், ‘தொழிற்சாலைகளை நிறுத்தியதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வங்கிகள் மூலம் நிதி உதவியைச் செய்துகொடுங்கள்’ என்று நிதித்துறை அமைச்சகத்துக்கு தொழில்துறையினர் அழுத்தம் கொடுத்துவந்தார்கள். ‘ஏற்கெனவே நிதி நெருக்கடியுள்ள நிலையில் இதற்கான பணத்தை எங்கே எடுப்பது, மக்களுக்கு எப்படி நலத்திட்ட உதவிகளைச் செய்வது?’ என்று நிதித்துறை அமைச்சகம் பெரிதும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது!’’

‘‘அப்புறம்?’’

‘‘ஒரு முடிவை எடுத்துவிட்டே அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று பிரதமர் ஒருபுறம் சொல்லிவிட்டதால், நிதி நெருக்கடி சிக்கலுக்கு தீர்வுகாணாமல் எந்த முடிவையும் அறிவிக்க முடியாது என்று அன்றைய தினம் நடக்க இருந்த கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டார்கள்.’’

‘‘ஓஹோ!’’

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘ஆனால், மறுநாள் 16-ம் தேதியன்று பிரதமரை அவருடைய வீட்டில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசியிருக்கிறார். அந்தச் சந்திப்பின்போதும் நிதி ஒதுக்கீடு குறித்து சில ஆலோசனைகளை நிர்மலா சொல்லியிருக்கிறார். ஆனாலும், எதிலும் பிரதமருக்கு திருப்தியில்லை என்கிறார்கள். அதனால், ‘சந்திப்பு முடிந்து செய்தியாளர்களை நிதியமைச்சர் சந்திப்பார்’ என்று பரவிய தகவலும் பொய்யாகி விட்டது. ‘ஊரடங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண்டிப்பாக நிதியுதவி செய்ய வேண்டும்’ என்பதில் பிரதமர் உறுதியாக இருக்கிறாராம். மாநில அரசுகளும், நிதி வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துவருவதால் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘தி.மு.க நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் எப்படிப் போனதாம்?’’

‘‘முதலில் அறிவாலயத்தில் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தது தி.மு.க தலைமை. ‘கொரோனா நேரத்தில் கூட்டம் நடத்த அனுமதி கிடையாது’ என்று சென்னை மாநகர காவல்துறை நோட்டீஸ் அனுப்பிய பிறகு, ஏப்ரல் 15-ம் தேதி நடக்கவிருந்த கூட்டத்தை 16-ம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்தியுள்ளார் ஸ்டாலின்.’’

‘‘வீடியோ கான்ஃபரன்ஸில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடப்பது இதுதான் முதல் முறையோ?’’

‘‘ஆமாம்... ‘ஜூம்’ செயலி மூலம் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசியிருக்கிறார் ஸ்டாலின். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை வழக்கம்போல் முன்கூட்டியே தயார்செய்துவிட்டது தி.மு.க தலைமை. ஸ்டாலின் அவருடைய வீட்டிலிருந்து வீடியோ வழியாகக் கூட்டத்தை ஆரம்பித்துள்ளார். அப்போது அவருடன் டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் இருந்திருக்கிறார்கள்.’’

‘‘மாஸ்க் போட்டிருந்தார்களா?’’

‘‘அதிலென்ன சந்தேகம்? கூட்டத்தில் ஒவ்வொரு கட்சித் தலைவரும் தனித்தனியாக தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். அதன் பிறகு அனைத்து தலைவர்களுக்கும் தீர்மானம் அனுப்பிவைக்கப் பட்டது. அதற்குப் பிறகுதான் சிக்கல் எழுந்திருக்கிறது.’’

‘‘என்ன சிக்கலாம்?’’

‘‘வீரமணி மற்றும் வைகோ ஆகியோர் தீர்மானங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக் கின்றனர். அப்போதே ஸ்டாலின் முகம் கொஞ்சம் மாறியிருக்கிறது.

இருவரும் தீர்மானங்களில் பல்வேறு திருத்தங்களைச் சொல்லிக்கொண்டே வந்துள்ளனர். அதை ஸ்டாலின் தரப்பு குறித்துக்கொண்டே வந்துள்ளது. அதற்குள் 11.30 மணிக்கு தீர்மானம் நிறைவேறிவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால், தீர்மானங்களைத் திருத்தி அனைத்து தலைவர்களிடமும் ஒப்புதல் பெற்றபோது மணி 1.30 ஆகிவிட்டதாம்.’’

‘‘அப்படியா?’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘இத்தனை திருத்தங்கள், இதுவரை தி.மு.க நடத்திய எந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் நடக்காத ஒன்று என்கிறார்கள். இதுதான் ஸ்டாலின் அப்செட்டுக்குக் காரணமாம். ‘இதை போனில் பேசி சொல்லியிருக்கலாம். அனைவரையும் வைத்துக்கொண்டு இத்தனை திருத்தங்களை எதற்கு ஓப்பனாகச் சொல்ல வேண்டும்” என்று ஸ்டாலின் தரப்புக்கு வருத்தமாம்.’’

‘‘ம்!’’

ஸ்டாலின்
ஸ்டாலின்

‘‘கூட்டணிக் கட்சிகள் தரப்பில் இதே விவகாரத்தை வேறுவிதமாகச் சொல்கிறார்கள். ‘தீர்மானத்தை முன்பே தயார்செய்தவர்கள், அதை எங்களுக்கு அனுப்பி ஆரம்பத்திலேயே ஒப்புதல் வாங்கி யிருக்கலாம். அதைச் செய்யாமல் அவர்கள் எழுதிவைத்ததற்கு நாங்கள் அப்படியே ஒப்புதல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?’ என்று வைகோவிடம் சிலர் வருத்தப்பட்டார்களாம்.’’

‘‘பிறகு என்ன நடந்ததாம்?’’

“கொரோனாவால் இறந்த குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைப் பணியின்போது ஊழியர்கள் இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கும் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட சில தீர்மானங்கள் இறுதியாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இது முடிந்ததும் ஸ்டாலின் வீட்டில் வீடியோ கான்ஃபரன்ஸ் குறித்த விவாதம் நடந்துள்ளது. அப்போது, ‘ஏற்கெனவே நாம் தன்னார்வலர் களுக்குத் தடை விதித்த விவகாரத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். ஆனால், மறுதினமே வைகோவும் வழக்கு தாக்கல் செய்தார். இப்போது தீர்மானத்திலும் நெருக்கடி கொடுக்கிறார்’ என்று வைகோவைப் பற்றி பல விவகாரங்கள் பேசப்பட்டனவாம்.’’

‘‘ஆளுங்கட்சித் தரப்பில் என்ன சேதி?’’

‘‘இரண்டாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த பிறகு, நிதியுதவியையும் சேர்த்தே அறிவித்தார் முதல்வர். ஆனால், உண்மையில் தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருக்கிறதாம். ‘மத்திய அரசும் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. எனவே, அரசு அறிவித்த நிதியுதவியை எப்படித் தயார்செய்வது’ என்று கோட்டையில் அதிகாரிகள் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.’’

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

‘‘விஜயபாஸ்கர் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளாரே?’’

‘‘அவரை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த சொன்னதே முதல்வர் அலுவலகம்தானாம். கடந்த சில நாள்களாக கொரோனா விவகாரத்தை வைத்து அரசுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றிவந்தார் ஸ்டாலின். அரசுத் தரப்பும் இந்த விவகாரத்தில் கொஞ்சம் ஆட்டம்கண்டுதான் போயிருந்தது. இதைச் சமாளிக்கவே ஏப்ரல் 15-ம் தேதி அன்று காலையே முதல்வர் அலுவலகத்திலிருந்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த அறிவுறுத்தல் வந்துள்ளது. விஜயபாஸ்கரும் உற்சாகத்துடன் களத்தில் இறங்கி பல புள்ளிவிவரங்களைத் தயார்செய்து கொண்டு அரைமணி நேரச் சந்திப்பை நடத்தினார். ஸ்டாலின் தரப்பு எந்தெந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்பியதோ அதற்கு டெக்னிக்கலாக பதிலும் சொல்லிவிட்டார்.’’

‘‘ஆனாலும், உள்ளுக்குள் புகைச்சல் ஓயவில்லை என்கிறார்களே?’’

‘‘உண்மைதான். ‘இனி செய்தியாளர்கள் சந்திப்பை முதல்வரிடம் கேட்டுவிட்டு நடத்துங்கள்’ என்றும் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதைவிட முக்கியமான விஷயம், கோவையில் உணவு, மருந்து கிடைக்காமல் அரசு பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்திய விவகாரத்தில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த அசோகனை மாற்றிவிட்டார்கள். அவர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகவும் வேண்டப்பட்டவராம். அதைச் சுட்டிக்காட்டும் சில அமைச்சர்கள், ‘விஜயபாஸ்கருக்கும் முதல்வருக்குமான விரிசல் மிண்டும் சரியாகாது’ என்கிறார்களாம்.’’

‘‘சசிகலா விடுதலை விவகாரம் அப்படியே அமுங்கிப்போய்விட்டதே?’’

நடராஜன் நினைவுதின அனுசரிப்பில் டி.டி.வி.தினகரன்
நடராஜன் நினைவுதின அனுசரிப்பில் டி.டி.வி.தினகரன்

‘‘கொரோனா விவகாரத்தால் அவரின் விடுதலை குறித்த நடவடிக்கைகளும் தள்ளிப் போய்விட்டன. அதில் அவரும் அவருடைய குடும்பத்தினரும் பெரும் அப்செட்டில் இருக்கின்றனர். இந்த நிலையில் தினகரனுக்கும் சசிகலாவின் மற்ற உறவுகளுக்கும் இடையிலான மோதல் வலுத்துக்கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு நடராஜன் நினைவு தினம் அவரின் சொந்த ஊரில் அனுசரிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில் கலந்துகொள்ள வந்த தினகரன், அங்கு வந்த உறவினர்கள் யாருடனும் பேசவில்லையாம். மாலையிட்டு மரியாதை செய்துவிட்டு காரில் ஏறிக் கிளம்பிவிட்டாராம். இதைப் பார்த்த உறவுகள் ஏகக்கடுப்பில் இருக்கிறார்கள். சசிகலா வெளியே வந்த பிறகு தினகரன் குறித்து பல குற்றச்சாட்டுகளை அள்ளிக்கொட்டக் காத்திருக்கிறார்கள் அவர்கள்.’’

‘‘சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி செய்தாராமே?’’

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

‘‘ஆமாம். சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார். அதையடுத்து, ‘உதயநிதியின் உதவாத நிதி’ என்று பல தரப்பிலும் கடும் விமர்சனம் கிளம்பியிருக்கிறது. ‘ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதற்குப் பதிலாக எதுவுமே கொடுக்காமல் அமைதியாக இருந்திருந்தாலே இத்தனை விமர்சனங்கள் வந்திருக்காது’ என்று வருத்தப்படுகிறார்கள் உதயநிதிக்கு நெருக்கமானவர்கள்’’ என்ற கழுகார், ‘குட் பை’ சொல்லி மீட்டிங்கிலிருந்து லீவ் ஆனார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism