Published:Updated:

மிஸ்டர் கழுகு: ரெய்டு அச்சம்! - வழக்கறிஞர் படையுடன் வலம்வரும் மாஜி!

முன்னாள் அமைச்சர்
பிரீமியம் ஸ்டோரி
முன்னாள் அமைச்சர்

இப்போதெல்லாம் அவர் எங்கு சென்றாலும், வழக்கறிஞர் அணி துணையில்லாமல் செல்வதில்லையாம்.

மிஸ்டர் கழுகு: ரெய்டு அச்சம்! - வழக்கறிஞர் படையுடன் வலம்வரும் மாஜி!

இப்போதெல்லாம் அவர் எங்கு சென்றாலும், வழக்கறிஞர் அணி துணையில்லாமல் செல்வதில்லையாம்.

Published:Updated:
முன்னாள் அமைச்சர்
பிரீமியம் ஸ்டோரி
முன்னாள் அமைச்சர்

‘‘கலெக்டர் ஒருவர் செய்திருக்கும் விஷயம் பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது!” என்று கூறிக்கொண்டே என்ட்ரி கொடுத்தார் கழுகார். ஜில் ஜில் ஜிகர்தண்டாவை நீட்டியபடியே ‘‘யார் அவர்?’’ என்றோம். ஜிகர்தண்டாவைப் பருகியபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் மோகன் ஐ.ஏ.எஸ். அந்த மாவட்டத்தில் சிறுபான்மையினராக வசிக்கும் பழங்குடியினர் சமூக மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களுக்கான சாதிச் சான்றிதழை வாங்குவதற்குப் பல ஆண்டுகளாகப் படாத பாடுபட்டு வந்தார்களாம். இதையறிந்த மோகன், துரிதமாகச் செயல்பட்டு 101 பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ்களைக் கொடுத்திருக்கிறார். இதுதான் அந்தச் சமூக மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.’’

‘‘நல்ல விஷயம்... சரி, மாஜி அமைச்சரின் பேச்சுக்கு அவரது கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களாமே?’’

மோகன்
மோகன்

மிஸ்டர் கழுகு: ரெய்டு அச்சம்! - வழக்கறிஞர் படையுடன் வலம்வரும் மாஜி! | mister-kazhugu-politics-and-current-affairs-august-4th-2021ஆளுங்கட்சி எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும். அதைச் சந்திக்கவும், சிறைக்குச் செல்லவும் நானும் சக எம்.எல்.ஏ-க்களும் தயாராகவே இருக்கிறோம்’ என்று பொங்கியிருக்கிறார். இதில் ஜெர்க் ஆன இரண்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், ‘ஆட்சியில் இருந்துகொண்டு சம்பாதித்தது வேலுமணி... அதனால் அவர் சிறை செல்லலாம். நாங்கள் ஏன் அவருடன் சிறைக்குச் செல்ல வேண்டும்?’ என்று கொந்தளித்திருக்கிறார்கள். அவர்களின் உரையாடல் வேலுமணியின் கவனத்துக்கும் செல்லவே... ‘என்னிடம் பணம் வாங்கித் தேர்தலில் ஜெயித்தவர்கள், என்னையே எதிர்க்கிறார்களா... பார்த்துக்கொள்கிறேன்’ என்று கண் சிவந்தாராம்.’’

‘‘வேலுமணி கைது நடவடிக்கையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார் என்கிறார்களே...’’

‘‘அப்படித்தான் தெரிகிறது. இப்போதெல்லாம் அவர் எங்கு சென்றாலும், வழக்கறிஞர் அணி துணையில்லாமல் செல்வதில்லையாம். சமீபத்தில் கோவை அ.தி.மு.க தலைமை அலுவலக வளாகத்தில், வழக்கறிஞர் அணிக்கென்று தனியாக ஓர் அலுவலகத்தைத் திறந்து கொடுத்தார். அங்கு அடிக்கடி வழக்கறிஞர் அணியினர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்கள். ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரைதான் இந்தப் பணிகளை ஒருங்கிணைக்கிறார். ‘ஸ்டாலின், வேலுமணிமீதுதான் கோபமாக இருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் ரெய்டு வரலாம். எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்’ என்று ரெய்டை எதிர்கொள்ள வேலுமணி தரப்பினர் தயாராக இருக்கிறார்களாம்.’’

மிஸ்டர் கழுகு: ரெய்டு அச்சம்! - வழக்கறிஞர் படையுடன் வலம்வரும் மாஜி!

‘ஓஹோ...’’

‘‘ஒருபுறம் வழக்கறிஞர் படை சூழ வலம் வந்தாலும், மறுபுறம் தனக்கு நெருக்கமானவர்களிடம் ‘மேலிடத்தில் பேசி முடித்துவிட்டேன். இனி பிரச்னையில்லை’ என்று சொல்லியிருக்கிறார் வேலுமணி. இதையறிந்த ஆட்சி மேலிடம், ‘அவர்மீதான நடவடிக்கையைத் தள்ளிப்போட்டால் நம்மையே சிக்கலுக்கு உள்ளாக்கிவிடுவார்’ என்று அதிகாரிகளிடம் ரெய்டு நடவடிக்கைக்கான வேலைகளை வேகப்படுத்தச் சொல்லியிருக்கிறதாம்.’’

‘‘சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் பேசியதன் பின்னணி என்னவோ?”

மிஸ்டர் கழுகு: ரெய்டு அச்சம்! - வழக்கறிஞர் படையுடன் வலம்வரும் மாஜி!

‘‘தமிழக பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க டீம் டெல்லிக்குச் செல்வதற்கு முன்பாக டெல்லிக்குச் சென்று, அமித் ஷாவை தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது பேச்சுவாக்கில், ‘சசிகலாவை அ.தி.மு.க-வுடன் இணைத்தால் நல்லதுதான் என்றாலும், அதனால் பா.ஜ.க-வுக்கு என்ன லாபம்? ஒருவேளை அவர்கள் இணைந்துவிட்டால், அது நமது கட்சிக்குத்தான் பாதிப்பு. இப்படியே அ.தி.மு.க-வை விட்டுவிட்டால், தி.மு.க-வே அவர்களின் வீழ்ச்சியைப் பார்த்துக்கொள்ளும்’ என்று கூறினாராம். அது பற்றிய யோசனையில் அமித் ஷா இருந்தபோதுதான், ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் அவரைச் சந்தித்துள்ளனர். சி.பி.ஆர் சொன்னது சரிதான் என்பதை உணர்ந்ததால், எடப்பாடி மற்றும் பன்னீரிடம் சசிகலா பற்றி அமித் ஷா பேசவில்லை என்கிறார்கள். அமித் ஷாவின் இந்த மன ஓட்டத்தைத் தெரிந்துகொண்டுதான், சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் போல்டாகப் பேசிவிட்டார் என்கிறார்கள்.’’

‘‘அமைச்சர்கள் இருவர் சரிசமமாகப் பங்கு பிரித்துக்கொண்டார்களாமே!’’

‘‘என் காதுக்கும் அந்தத் தகவல் வந்தது. மத்திய மண்டலத்தில் வணிக வரித்துறைக்குச் சொந்தமாக கட்டடம் கட்டப்பட்டுவருகிறது. அ.தி.மு.க ஆட்சியின்போது இந்தப் பணிகள் தொடங்கப்பட்டதால், அப்போதைய ஆட்சித் தலைமையிலிருந்த ஒருவரின் சம்பந்திதான் அந்தப் பணிகளைச் செய்துவந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ஆய்வுப் பணிக்கு திருச்சிக்குச் சென்ற அமைச்சர் தரப்பு, டீலிங் பேசியிருக்கிறது. அதற்கு சம்பந்தி தரப்பு, ஏற்கெனவே ‘கவனித்து’விட்டதாகக் கூறியிருக்கிறது. ஆனால், ‘அதெல்லாம் ஒத்துக்க மாட்டோம்... எப்படி பில் பாஸ் ஆகும்னு பார்க்கிறேன்’ என்று கூறிய அமைச்சர் தரப்பை கூல் செய்ய, மீண்டும் சில லட்டுகளை ஒப்பந்ததாரர் தரப்பு கொடுத்துள்ளதாம். கொடுக்கப்பட்ட லட்டுகளை இரண்டு அமைச்சர்கள் சமமாகப் பிரித்துக் கொண்டார்களாம்.”

‘‘தமிழகத்துக்கு ஜனாதிபதி வருகை தொடர்பாக ஏதேனும் தகவல் இருக்கிறதா?”

‘‘ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை சட்டமன்றத்தில் கருணாநிதியின் படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைக்கிறார். பிறகு ஊட்டிக்குச் சென்று ராஜ்பவனில் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார். இப்போதைக்கு இவ்வளவுதான் தகவல் வந்திருக்கிறது. மற்றபடி சட்டமன்றத்தில் வைக்கப்படும் கருணாநிதியின் படத்தை, ‘அரசு ஆர்ட்ஸ்’ தயார் செய்திருக்கிறது. முதல்வரிடமும் படத்தைக் காட்டி ஓகே வாங்கிவிட்டார்கள்.’’

‘‘தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா தொடர்பாக சர்ச்சை ஒன்று ஓடுகிறதே!’’

‘‘ஆமாம். மதராஸ் மாகாண சட்டமன்றம் 1920-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இப்போது நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை தி.மு.க அரசு நடத்துகிறது. அதேசமயம், மாநில சுயாட்சி அந்தஸ்துடன் 1937-ம் ஆண்டுதான் முழுமையாக இரண்டு அவைகளாக மதராஸ் சட்டமன்றம் செயல்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன்பாக மேலவை மட்டுமே செயல்பட்டது. தற்போது தமிழகத்தில் மேலவை என்பதே செயல்பாட்டில் இல்லாத நிலையில், மேலவை தொடங்கிய வருடத்தைக் கணக்கில்கொண்டு நூற்றாண்டு விழாவை நடத்துவது எந்த வகையில் பொருத்தமாக இருக்கும் என்ற பிரச்னையை அ.தி.மு.க கிளப்பியிருக்கிறது.’’

‘‘ராஜ்யசபா பதவியை வைத்து ரங்கசாமி ஆட்டம் காட்டுகிறாராமே?’’

‘‘புதுச்சேரியில் விரைவில் காலியாகவிருக்கும் ராஜ்யசபா எம்.பி பதவியைப் பிடிக்க காய்நகர்த்திவருகிறது பா.ஜ.க. சென்னையைச் சேர்ந்த ஜுடிஷியல் கிருஷ்ணமூர்த்தியை அந்தப் பதவியில் அமரவைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், ரங்கசாமிக்கு இதில் விருப்பம் இல்லையாம். அதனால், ராஜ்யசபா எம்.பி பதவிக்காகத் தன்னையே சுற்றிவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரான மல்லாடி கிருஷ்ணா ராவை அந்தப் பதவியில் அமரவைக்கத் திட்டமிட்டுள்ளார் ரங்கசாமி.

மல்லாடி கிருஷ்ணா ராவ்
மல்லாடி கிருஷ்ணா ராவ்

இப்படித்தான் கடந்த 2015-ம் ஆண்டு தன் நண்பரான கோகுலகிருஷ்ணனை ராஜ்யசபா எம்.பி-யாக்க முடிவெடுத்தார் அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமி. ஆனால், இதற்கு அவரது சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களே எதிர்ப்பு தெரிவித்ததால், ராஜ்யசபா பதவியை அ.தி.மு.க-வுக்கு விட்டுக்கொடுக்க முடிவுசெய்து, கோகுலகிருஷ்ணனை அ.தி.மு.க வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற வைத்தார். தற்போது அதே பாணியில் ராஜ்யசபா பதவியை பா.ஜ.க-வுக்கு விட்டுத்தரச் சம்மதம் தெரிவித்திருப்பவர், மல்லாடி கிருஷ்ணா ராவை அவர்களின் எம்.பி வேட்பாளராக முன்னிறுத்த முடிவெடுத்திருக்கிறாராம்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

அமைச்சரைப் புறக்கணித்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட கள்ளப்பெரம்பூர் கிராமத்தில் ஜூலை 29-ம் தேதி குறுங்காடு அமைக்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். ஆனால், தொகுதி எம்.எல்.ஏ என்கிற முறையில் இந்த நிகழ்ச்சியில் துரை.சந்திரசேகரன் தலைகாட்டவில்லை. மேலும், தன் ஆதரவாளர்களையும் விழாவுக்குச் செல்லவிடாமல் தடுத்துவிட்டாராம். நேருவுக்கும் அன்பில் மகேஷுக்கும் நிலவும் பனிப்போர்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். துரை.சந்திரசேகரன், நேருவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

 கொங்கு மண்டல வணிக வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிவரும் சிவனின் பெயரைக்கொண்ட ஒருவர்தான், அந்தத் துறையின் அமைச்சருக்கு ஆல் இன் ஆலாக வலம்வருகிறாராம். கொங்கு மண்டலத்தில் இரண்டு அதிகாரிகள் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் ஒரு பணியிடத்தை நிரப்பவிடாமல் காலியாக வைத்திருக்கும் அந்த அதிகாரி, அதன் மூலம் மொத்த வசூலையும் தன் பாக்கெட்டில் நிரப்பிவருகிறார். கடந்த ஆட்சியிலும் ஆட்சியாளர்களுடன் நெருக்கத்திலிருந்த அவர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இங்கேயும் பசைபோல ஒட்டிக்கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்!

 சென்னையில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றங்களில், கடவுள் பெயர்கொண்ட சென்னை மாநகர காவல்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் புகுந்து விளையாடியதுதான், ஐ.பி.எஸ் வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக உள்ளது. ஒரு பணியிட மாற்றத்துக்கு பத்து லட்டுகள் வீதம், சுமார் 40 பேரிடம் ஸ்வீட் பாக்ஸ் வாங்கியிருக்கிறாராம் அந்த அதிகாரி. விவகாரம் தற்போது முதல்வர் அலுவலகத்தை எட்டியிருக்கிறது.