பெசன்ட் நகர் பீச்சில் நமக்காகக் காத்திருந்தார் கழுகார். குளிர்க்காற்றுக்கு இதமாக சுக்குமல்லிக் காபியை நமக்கும் வாங்கிக் கொடுத்த கழுகார் அதை ருசித்துக்கொண்டே, ‘‘உள்ளாட்சிப் பதவிகளைப் பிடிப்பதற்கு மாநிலம் முழுக்க வியாபாரம் கனஜோராக நடக்கிறது தெரியுமா?’’ என்று நம்மிடம் கேட்டார்.

‘‘மாநிலம் முழுவதிலுமிருந்தும் அந்தச் செய்திகள்தான் வந்துகொண்டிருக்கின்றன’’ என்றோம். கழுகார் தொடர்ந்தார்...

‘‘உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஜனவரி 2-ம் தேதி வெளியானவுடனே தலைவர், துணைத் தலைவர் பதவிகளைக் குறிவைத்து காய் நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. ஜனவரி 11-ம் தேதி இந்தப் பதவிகளுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. கவுன்சிலர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அரியலூர், தூத்துக்குடி, தேனி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகள் அ.தி.மு.க-வுக்கு உறுதியாகக் கிடைக்கும். அதேபோல் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தி.மு.க-வுக்குக் கிடைக்கும். இழுபறியாக உள்ள கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் தலைவர் பொறுப்புக்கு குதிரைபேரம் கொடிகட்டிப் பறக்கிறது. வெற்றி உறுதி எனத் தெரிந்த மாவட்டத் தலைவர் பதவிகளைத் தட்டிப்பறிக்கவும் முயற்சி நடக்கிறது. அணி மாறி வாக்களிக்கும் ஒரு மாவட்ட கவுன்சிலருக்கு 50 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது.’’

‘‘அடேங்கப்பா!’’

‘‘ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளைப் பிடிக்க, ஓர் ஒன்றிய கவுன்சிலருக்கு 15 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது. மதுரையில் ஒன்பது மாவட்ட கவுன்சிலர் களை மட்டுமே கைவசம் வைத்திருந்தாலும், தலைவர் பதவியைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற வெறியுடன் அ.தி.மு.க களமிறங்கியிருக்கிறது. ஏற்கெனவே வெற்றி பெற்ற சுயேச்சை ஒருவரை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டவர்கள், தி.மு.க-வின் 13 மாவட்ட கவுன்சிலர்களி லிருந்து இரண்டு பேரை வளைக்க தலா ஒரு கோடி ரூபாய் வரையில் பேரம் பேசியிருக்கிறார்களாம்.’’

‘‘தலைசுற்றுகிறது!’’

‘‘முழுதாய்க் கேளும்... கடலூரில் மொத்தம் உள்ள 29 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிகள் தலா 13 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. மீதம் உள்ள மூன்று சுயேச்சைகளை வளைப்பதற்கு ஆளும் தரப்பில் பெரும்தொகை பேசப்பட்டிருக்கிறது. சிவகங்கையிலும் இதே நிலைமைதான். அங்கே இரண்டும் எட்டுக்கு எட்டு எனச் சமமாக உள்ளன. தி.மு.க ஆதரவில் வெற்றி பெற்ற ஐ.ஜே.கே வேட்பாளரான காளையார் கோவில் செ.ஸ்டெல்லாவை விலைக்கு வாங்கிவிடத் தூண்டில் போடுகிறது. இதுபோக, மாவட்ட வார்டு 6, 15-ல் வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் காய் நகர்த்துகின்றனர். 50 லட்சம் ரூபாய் வரை தருவதற்கு ஆளும் தரப்புத் தயாராக இருந்தாலும், தி.மு.க மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் விழிப்புடன் இருப்பதால் அ.தி.மு.க-வின் பாச்சா இதுவரை பலிக்கவில்லை. தி.மு.க கவுன்சிலர்களை ஆளும் தரப்பு தூக்கிவிடக் கூடாது என்பதற்காக, மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் பல லட்சங்களைச் செலவு செய்துவருகிறாராம். புதுக்கோட்டையில் மாவட்டத் தலைவர் பதவியைப் பெறுவதற்கு தி.மு.க கூட்டணி பூரணபலத்துடன் உள்ளது. மாவட்டப் பதவியைக் கைப்பற்றுவதை கெளரவப் பிரச்னையாகப் பார்க்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், காங்கிரஸ், தி.மு.க-விலிருந்து கவுன்சிலர்களை இழுத்து வர தன் ஆதரவாளர்களை ஏவியுள்ளாராம்.’’

‘‘எல்லாம் பணம் படுத்தும்பாடு... அதுசரி, ஒன்றியத் தலைவர் பதவிக்குப் போட்டி எப்படியிருக்கிறது?’’

‘‘அதில்தான் பெரும்தொகை விளையாடுகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, பெரியகுளம், கடமலை-மயிலை ஆகிய ஒன்றியங்களில் தி.மு.க - அ.தி.மு.க இடையே தலைவர் பதவிக்கு கடும்போட்டி நிலவுகிறது. பத்து லட்சம் ரூபாய், பதவி என ஆசைகளை அள்ளித் தெளித்து, அ.ம.மு.க மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களை கேரளாவில் அடைகாக்க ஆளுங்கட்சியினர் திட்ட மிட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் ஏரியூர், கடத்தூர், தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியங்களைக் கைப்பற்றியே ஆகவேண்டுமென அ.தி.மு.க-வினரை அமைச்சர் அன்பழகன் விரட்டிக் கொண்டிருக்கிறார்.’’
.“பா.ம.க-வின் தயவும்... அ.தி.மு.க வெற்றியும்!” - உள்ளாட்சி உற்சாகத்தில் பா.ம.க..
‘‘ஓஹோ!’’

“சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் சேலம், பனமரத்துப் பட்டி, ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, ஆத்தூர், கெங்கவள்ளி உள்ளிட்ட 12 ஒன்றியங்களில் அ.தி.மு.க - தி.மு.க சமநிலையில் வந்திருப்பதால், சுயேச்சைகளையும் பா.ம.க கவுன்சிலர் களையும் வளைக்க குதிரைபேரம் கொடிகட்டிப்பறக்கிறது. ஒரு சுயேச்சைக்கு தி.மு.க தரப்பில் 15 முதல் 20 லட்சம் ரூபாயும், அ.தி.மு.க தரப்பில் 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை ‘ஆஃபர்’ செய்திருப்ப தாக தகவல். தி.மு.க தரப்பில் மாவட்டச் செயலாளர்களும், அ.தி.மு.க தரப்பில் கட்சித் தலைமையின் நெருங்கிய உறவினர் ஒருவரும் இந்தப் பேரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். தி.மு.க-விடம் விலைபோகாமல் இருக்க அ.தி.மு.க கவுன்சிலர்களை தேவூரில் உள்ள பண்ணைவீடுகளில் தங்கவைத்திருப்பதாக தகவல்.’’

‘‘க்ரைம் சீரியல்களை விஞ்சிவிடும் போலிருக்கிறதே!’’

‘‘அப்படித்தான்! திருச்சி மாவட்டத்தில் துறையூர், லால்குடி ஒன்றியத் தலைவர் பதவிக்குப் போட்டி பலமாக இருக்கிறது. துறையூரில் ஒரு சீட் இருந்தால் தலைவர் பொறுப்பை தி.மு.க தட்டிவிடும். அந்தக் கட்சியில் சீட் மறுக்கப்பட்ட புவனேஸ்வரி சுயேச்சையாக வெற்றி பெற்றிருக்கிறார். ‘தலைவர் பொறுப்பைக் கொடுப்பதாயிருந் தால் ஆதரிக்கிறேன்’ என்று தி.மு.க. நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறார் புவனேஸ்வரி. அவரையும் மேலும் சிலரையும் துட்டால் அடித்து தலைவர் பொறுப்பைத் தட்டிப்பறிக்க அ.தி.மு.க பகீரதப் பிரயத்தனம் செய்வதால் துறையூர் பெரும் பரபரப்பாகியிருக் கிறது.’’

‘‘தேர்தலை எதிர்கொண்ட 314 ஊராட்சி ஒன்றியங்களில், சுமார் 200 ஒன்றியங்கள் இழுபறி நிலையில் இருக்கின்றன. அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு, ஓர் ஒன்றியத்துக்கு தலா இரண்டு கவுன்சிலர்களாவது இழுக்கப் படுகின்றனர். இந்தக் கணக்கின்படி பார்த்தால், ஒன்றியத் தலைவர் பதவியைப் பிடிக்க மட்டும் 80 கோடி ரூபாய்க்கு உள்ளாட்சி வியாபாரம் நடக்கிறது. இதுபோக, துணைத் தலைவர் பதவிக்கு நடைபெறும் குதிரைபேரம் தனி!’’

‘‘அது என்ன கணக்கு?’’

‘‘இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சில ஒன்றியங்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த வர்கள்தான் தலைவர் ஆக முடியும். ஆனால், துணைத் தலைவர் பதவிக்கு அந்தக் கட்டுப்பாடு இல்லை. கந்தர்வக்கோட்டை (தனி) ஒன்றியத் தலைவர் பதவிக்கு பேரம் நடைபெறுவது ஒருபுறமிருக்க, துணைத் தலைவர் பதவியை எட்டிப்பிடிக்க மட்டும் ஐந்து கோடி ரூபாய் வரை ஆளுங்கட்சி தரப்பில் பேரம் பேசுவதாய் அதிரவைக்கிறார்கள். `அவங்களை நம்பிப் போனா, ஒரு லட்சம் ரூபாய்கூட தர மாட்டாங்க’ எனக் கூறி, `சுயேச்சைகளையும் சொந்தக் கட்சி கவுன்சிலர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்பது தி.மு.க தலைமையின் உத்தரவு. ஆனால், அ.தி.மு.க-வினரின் அதிரடி ஆட்டங்கள் காரணமாக தலைமையின் உத்தரவை நிறவேற்றத் திணறிவருகிறார்கள் தி.மு.க-வினர்.’’

‘‘இந்தத் திணறலின் எதிரொலியாகத்தான், `கவுன்சிலர்கள் பதவியேற்கத் தடைவிதிக்க வேண்டும்’ என்று தி.மு.க நீதிமன்றம் சென்றதோ?”

‘‘ஆமாம். தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப் படுவதால், ரகசிய வாக்கெடுப்பில் யார் யாருக்கு வாக்களித்தனர் என்பது தெரியப்போவதில்லை. கட்சி மாறி வாக்களிக்கும் நபர்கள்மீது கட்சித்தாவல் தடைச் சட்டமெல்லாம் பாயாது. இதனால், உள்ளாட்சித் தலைவர் பதவிகளைப் பிடிப்பதற்கு ஆளுங்கட்சியினர் ‘மெகா கூவத்தூர்’ காட்சிகளை தமிழகம் முழுவதும் அரங்கேற்ற ஆரம்பித்து விட்டார்கள். இதைத் தடுக்க முடியாமல்தான், நீதிமன்றம் வாயிலாக கவுன்சிலர்கள் பதவியேற்பைத் தள்ளிப்போட தி.மு.க முயற்சி செய்தது. ஆனால், அது பலிக்கவில்லை.’’

‘‘இவ்வளவு பணம் கொடுத்து அந்தப் பதவிகளை வாங்கி இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?’’

‘‘என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்! உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்ததால்தான், 3,558 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி முடக்கிவைக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த நிதி வெளிவரும். ஊராட்சி ஒன்றியத் தலைவர் களாக இருக்கப்போகிறவர்கள்தான் அந்த நிதியை பெருமளவு கையாள்வார்கள். மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர், மாவட்ட ஆட்சித் தலைவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு குட்டி அமைச்சர்களாக வலம் வரலாம். சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் உத்திதான் இது.’’

‘‘இந்தத் தேர்தலில் உண்மையான வெற்றி யாருக்கு... இரண்டு கட்சிகளும் உற்சாகமாக அறிக்கை வெளியிடுகின்றனவே?’’

‘‘பணம், அதிகாரம், அதிகாரிகள் ஒத்துழைப்பு எனப் பல விஷயங்களைத் தாண்டி, அ.தி.மு.க-வைவிட அதிக இடங்களைப் பிடித்திருப்பதில் தி.மு.க தலைமைதான் உற்சாகத்தில் இருக்கிறது. நகர்ப்புறத்தில் தேர்தல் நடத்தினால் இதைவிட இரட்டிப்பு வெற்றி கிடைக்கும் என்று ஸ்டாலின் உற்சாகமாகியிருக் கிறாராம்.’’

‘‘சட்டமன்றக் கூட்டத்தில் என்ன விசேஷமாம்?’’

‘‘வழக்கம்போல் வெளிநடப்புதான். ஆளுநர் உரையின்போது ஸ்டாலின் எழுந்து பேச முயற்சி செய்தபோது, ‘நீங்க பெரிய பேச்சாளர்னு எனக்குத் தெரியும். ஆரோக்கியமான விவாதங்களை அப்புறம் நடத்தலாம். இப்போது வேண்டாம்!’ என்று ஆளுநர் சொன்னதற்கு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு, தன் அறைக்கு மு.க.ஸ்டாலின் சென்றபோது, எதிர்பாராத விஷயம் நடந்தது. டி.டி.வி. தினகரனும் வெளிநடப்பு செய்துவிட்டு வர, இருவரும் எதிரெதிரே சந்தித்துக்கொண்டனர். புன்முறுவலோடு கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்’’ என்ற கழுகார், சட்டென சிறகுகள் விரித்துப் பறந்தார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வலதுகரமாக இருக்கும் சிந்துபாத்தின் பாதிப் பெயர் கொண்டவரின் தலையீடு காரணமாக, ஆவின் ஊழியர்கள் முதல் ஒப்பந்தக்காரர்கள் வரை அலறுகின்றனர். துறையின் முக்கியப் பொறுப்பில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட இவர், ஆவின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் அறையில் அமர்ந்துகொள்கிறாராம். ‘அங்கு அமர்ந்துகொண்டு அனைத்து டெண்டர்களிலும் தலையிடுகிறார். இத்தனை சதவிகிதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக பேரம் பேசுகிறார். அமைச்சர் பெயரைச் சொல்லி ஆவின் நிர்வாகத்தையே விரல் அசைவில் செயல்படவைத்துக்கொண்டிருக்கிறார்’ என்றெல்லாம் புகார் வாசிக்கப்படுகிறது. ‘அதே அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையும் இருக்கிறது. ஆனாலும், அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை’ எனப் புலம்புகிறார்கள் ஒப்பந்ததாரர்கள்.

கருப்பசாமி பாண்டியன், தி.மு.க-விலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். இந்த நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஆனால், அமைச்சர் ராஜலெட்சுமி கலந்துகொள்ளவில்லை. ‘தென்காசி மாவட்டத்தை மட்டும் இனி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று எடப்பாடி தரப்பிலிருந்து வந்த ஓலையால், கருப்பசாமி பாண்டியன் இணைப்பு நிகழ்வில் அமைச்சர் கலந்துகொள்ளவில்லையாம். ‘கானா இணைப்பு விழாவிலேயே நீயா... நானா போட்டி தொடங்கிவிட்டதே’ எனும் அரசியல் ஆர்வலர்கள், அடுத்தடுத்து நடைபெறப்போகும் அரசியல் களேபரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சட்டமன்ற சபாநாயகரின் அதிகாரத்தை, தமிழகத்துக்குக் காட்டியவர் பி.ஹெச்.பாண்டியன். திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவியைச் சேர்ந்த பி.ஹெச்.பாண்டியன், எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிதீவிர அ.தி.மு.க விசுவாசி. அந்தக் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநிலத் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து சபாநாயகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

சபாநாயகருக்கு ‘வானளாவிய அதிகாரம்’ இருப்பதாகக் கூறிய அவர், ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்குக்காக ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ‘அது சட்டவிரோதம்’ என்று கூறிய நீதிமன்றம், ‘ஆயிரம் ரூபாய் அடையாள நஷ்டஈடு வழங்க’ உத்தரவிட்டது.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனப் பிரிந்தபோது, ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களைக் கூண்டோடு அவையிலிருந்து நீக்கினார். அதன் பிறகு ஜெயலலிதாவின் ஆதரவாளராகவும் மாறி, திருநெல்வேலி எம்.பி-யாக இருந்ததுடன், கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக அதிரடி அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்த பி.ஹெச்.பாண்டியன், 74 வயதில் கடந்த வாரம் சென்னையில் மறைந்தார்.