‘‘என்ன... பொங்கலுக்கு சொந்த ஊருக்குப் போக டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டீரா?’’ என்றபடி அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார். ‘‘உமக்குத்தான் பிரச்னை இல்லை. எந்த ஊருக்கும் வான்வழியாகவே பறந்துபோய்விடுகிறீர்!’’ என்று கழுகாரை செல்லமாகச் சீண்டிய நாம், ‘‘இந்தக் கூட்டத்தொடரில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சியினர்மீது இவ்வளவு காட்டமாகிவிட்டாரே... என்ன காரணம்?’’ என்ற கேள்வியை வீசினோம்.

‘‘கடந்த சில மாதங்களாக எடப்பாடியின் பேச்சும் தொனியும் நிறையவே மாறிவிட்டன. தன் கட்சியினரைக் கண்டிப்பது முதல் எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுப்பது வரை ஜெயலலிதா பாணிக்கு அவர் மாறிக்கொண்டிருப்பதாக சக அமைச்சர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.’’

‘‘எப்படிச் சொல்கிறீர்?’’

‘‘சட்டமன்றத்தில், ‘அம்மாவின் ஆசியுடன்’ என்று பேச்சைத் தொடங்கிய எடப்பாடி, நேரம் செல்லச் செல்ல ‘என் அரசு, நான் கொண்டுவந்த திட்டம்’ என்று பேச ஆரம்பித்துவிட்டார். அதேபோல், சி.ஏ.ஏ பிரச்னை குறித்து அமைச்சர் உதயகுமார் நீண்ட பதிலளித்துக் கொண்டிருந்தபோது, தி.மு.க பொருளாளர் துரைமுருகன் குறுக்கிட்டு, ‘பொதுக்கூட்டத்தில் சொல்வதுபோல் அமைச்சர் நீண்ட விளக்கம் அளிக்கிறார். சீக்கிரம் முடிக்கச் சொல்லுங்கள்’ என்று சொன்னபோதும், அதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி, ‘அமைச்சர்கள் இப்படித்தான் பேசவேண்டும் என்று யாரும் உத்தரவிட முடியாது’ என்று ஜெயலலிதா பாணியில் கடுமையாகப் பேச, அ.தி.மு.க-வினரே கொஞ்சம் ஆடிப்போய்விட்டனர்.’’

‘‘ஓஹோ!’’

‘‘மறுநாள் `நமது அம்மா’வில் உதயகுமாரைப் பாராட்டி ஒரு கட்டுரை வந்திருந்தது. எடப்பாடியின் அனுமதியின்றி அது வந்திருக்க முடியாது. ‘மதுரையில் கட்சியைத் தோற்க விட்டாலும், எடப்பாடி மனதை உதயகுமார் ஜெயித்துவிட்டார்’ என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.’’

‘‘ஜெ.அன்பழகனை சஸ்பெண்ட் செய்ததற்கு தி.மு.க தரப்பில் பெரிதாக எதிர்வினை இல்லையே?’’

‘‘உண்மைதான்... எதற்கு வம்பு என்று தி.மு.க-வினர் பலரும் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டார்கள். சி.ஏ.ஏ விவகாரத்தை தி.மு.க கிளப்பியபோது, ‘காங்கிரஸ் ஆட்சியில் இந்தச் சட்டத்தை நீங்களும் ஆதரித்தீர்களே’ என்ற உதயகுமார், ஸ்டாலினை ‘லாக்’ செய்தார். நீட் விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுக்கும் ஸ்டாலினால் பதில் சொல்ல முடியவில்லை. அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் நன்றாகவே தேறிவிட்டார்கள் என்பது தெரிகிறது.’’

‘‘காங்கிரஸ் கட்சியின் புதிய தமிழகத் தலைவர் கார்த்தி சிதம்பரம் என்று செய்திகள் வருகின்றனவே?’’

‘‘தென்சென்னை பகுதியில், ‘தை மாதம் தலைவராகப் பொறுப்பேற்கும் கார்த்தி சிதம்பரம்’ என அவரின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்தான் இந்த வதந்திக்குக் காரணமாம். ‘அவர்தானே இப்போது ஆக்ட்டிங் தலைவர்’ என்று நக்கலாகச் சொல்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள். கே.எஸ்.அழகிரியிடம் எந்தப் புகார், சிபாரிசு போனாலும், ‘இளையநிலாவைப் போய்ப் பாருங்கள்’ என்று கார்த்தியை நோக்கி கை நீட்டுகிறாராம்.’’

‘‘திருநாவுக்கரசர் கொளுத்திப்போட்டது அறிவாலயத்தில் வெடிக்கிறதாமே?’’

‘‘சில நாள்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. அதில் பேசிய திருநாவுக்கரசர், ‘இனியும் தி.மு.க சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தால் நம் கட்சி கரைந்துவிடும். நம்மைவிட வாக்கு வங்கியில் குறைந்த கட்சி பி.ஜே.பி. ஆனால், அவர்கள் நம்மைவிட கூடுதல் இடங்களில் வென்றிருக்கிறார்கள். நாம் தி.மு.க கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொண்டிருந் தால், தொண்டர்கள் சோர்வடைந்து விடுவார்கள்’ என்று கடுப்புடன் சொன்ன போது, ‘நீங்களே தொண்டர்களைத் தூண்டிவிடுவீர்கள் போலவே’ என்று அழகிரி திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு திருநாவுக்கரசர், ‘நான் நிதர்சனத்தைச் சொல்கிறேன். ஏன்... இங்கேயிருந்து இப்போதுகூட அண்ணா அறிவாலயத்துக்கு ‘லைவ் ரிலே’ போகலாம்’ என்று குறிப்பிட்டது அங்கு இருந்தவர்களை ஷாக்காகியிருக்கிறது.’’

‘‘மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவுக்கு எதிராக தி.மு.க-வினரே போர்க்கொடி தூக்கினார் களாமே?’’

‘‘ஆமாம். துர்காவின் சொந்த ஊர் திருவெண்காடு. இது, சீர்காழி ஒன்றியத்தில் வருகிறது. அந்த ஊராட்சி ஒன்றியத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த ரவி என்பவர் சேர்மன் பதவிக்காகக் கணிசமான அளவுக்குச் செலவுசெய்து மாவட்டத்திடம் ஓ.கே வாங்கியிருந்தார். ஆனால், முத்து தேவேந்திரன் என்பவரின் மனைவியை சேர்மன் ஆக்க துர்கா மூலம் மாவட்டத்துக்கு திடீர் தகவல் போயிருக்கிறது. இதனால் ரவி ஆதரவாளர்கள் டென்ஷனாகி திருவெண்காட்டில் உள்ள துர்கா வீட்டின் முன்பு மறியல் செய்திருக் கிறார்கள். துர்காவின் வீட்டைப் புதுப்பித்துக் கொடுத்த கான்ட்ராக்டர்தான் முத்து தேவேந்திரன் என்கிறார்கள்.’’

‘‘சரிதான்.’’’

‘‘இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள். துர்காவின் ஆதிக்கத்தைவிட அவருடைய தங்கை ஜெயந்தி மூலமாகவே இந்தப் பகுதி நிர்வாகிகள் மேலிடத்தில் தொடர்பு வைத்துக்கொள்கிறார் களாம். சத்தமில்லாமல் டெல்டாவின் பவர் சென்டராக ஜெயந்தி உருவாகியிருக்கிறார் என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.’’

‘‘மத்திய அரசுக்கு எதிரான வேலை நிறுத்தம் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லையே?’’

‘‘தி.மு.க-வின் தொழிற்சங்கமே முழுமையாக இதில் பங்கேற்கவில்லை. குறிப்பாக, போக்குவரத்துத் தொழிலாளர்கள் பெரியளவில் கலந்துகொள்ள வில்லையாம். ‘நோ வொர்க்... நோ பே’ என்று வேலைக்குச் செல்லாத நாள்களின் சம்பளத்தை அரசுத் தரப்பு பிடிமானம் செய்வதால், வேலைநிறுத்தம் செய்ய தொழிலாளர்கள் யோசிக்கிறார்களாம். வங்கி ஊழியர்கள் மட்டுமே இதில் அதிகம் பங்கேற்றுள்ளனர்.’’

‘‘அடுத்தகட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு எப்போதாம்?’’

‘‘அநேகமாக ஜனவரி 20-ம் தேதியன்று அறிவிப்பு வரும் என்கின்றனர். முதலில் தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களில் ஊரகத் தேர்தலை நடத்தி முடிப்பதுதான் எடப்பாடியின் திட்டமாம். அங்கே பா.ம.க பலத்தின் உதவியுடன் தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என, சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சர் களுக்கும் சொல்லியிருக்கிறாராம். ஒன்பது மாவட்டம் முடிந்த பிறகுதான், நகர்ப்புறங்களுக்கான தேர்தல் அறிவிப்பு வரும் என்கின்றனர். அதிலும் மாநகராட்சிகளுக்கு அதற்கு அடுத்த கட்டத்தில்தான் தேர்தல் இருக்குமாம்.’’

‘‘முக்கிய அமைச்சர்மீதான தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும், சிறப்பு விசாரணைக் குழுவின் (எஸ்.ஐ.டி) விசாரணை வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் நீதிமன்றத்தில் கேட்டிருக்கிறதே?’’

‘‘தி.மு.க-வும்தான் கேட்டிருக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியதில் வில்லங்க மான சில ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத் துறைக்குக் கிடைத்திருக்கின்றன. துறையின் இயக்குநரிடம் அமைச்சர் தரப்பு பேசி, ‘அதை மூடிவிடுங்கள்’ என்று சொல்லியும் அவர் மசியவில்லையாம். அதனால், அவரை வேறு ஒரு துறைக்கு மாற்றிவிட்டு, தனக்கு வேண்டிய ஓர் அதிகாரியை அந்தத் துறைக்கு கொண்டுவரும் வேலையில் இறங்கியிருக்கிறாராம் முக்கிய அமைச்சர்.’’

‘‘தமிழ்நாட்டில் ஒரு எஸ்.எஸ்.ஐ-யை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக் கிறார்களே...’’

‘‘தமிழகத் தலைவர் ஒருவரைக் கொல்வதற்காக நான்கு தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக, மத்திய உளவுத்துறைக்கு சில நாள்களுக்கு முன்பு தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தடுக்கும் நோக்கில், என்.ஐ.ஏ-வும் தமிழக போலீஸின் க்யூ பிரிவும் கைகோத்துக்கொண்டு தீவிரவாதிகளைத் தேடிவந்தன. இந்த நிலையில்தான், கன்னியாகுமரி அருகே எஸ்.எஸ்.ஐ வில்சன் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார். குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தலைவரைக் குறிவைத்துவந்த தீவிர வாதிகள்தான் இவரைக் கொன்றிருக்கலாம் என இப்போது சந்தேகம் எழுந்திருக்கிறது.’’

‘‘கொலையாளிகளைக் கண்டுபிடித்து விட்டார்களா?’’

‘‘சுட்டுக்கொன்ற இருவரும் கேரளாவுக்குத் தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது. சந்தேகப் பட்டியலில் இருக்கும் சிலரின் புகைப்படங்களை தமிழகம் முழுவதும் போலீஸாருக்கு அனுப்பி வைத்துள்ள உளவுத்துறை, அதில்தான் அவர்கள் இருவரும் இருப்பதாகக் கருதுகிறது. மொத்த நெட்வொர்க்கும் பிடிபடும் வரை தென் தமிழகத்தில் உள்ள பல தலைவர்களுக்கு ஆபத்து இருக்கிறது என்கிறார்கள்’’ என்ற கழுகார் சிறகுகளை சட்டென விரித்தார்.

சமீபத்தில் அ.தி.மு.க-வில் இணைந்த பெங்களூரு புகழேந்தியை வைத்து தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்துமாறு கட்சித் தலைமை பணித்துள்ளது. எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் சிறப்புப் பேச்சாளராக புகழேந்தி பேசவுள்ளார். இதில், ‘டி.டி.வி.தினகரன் பற்றி வெளிவராத ரகசியங்கள் பேச வேண்டும்’ என்பதுதான் புகழேந்திக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டாம். ‘தினகரனுடன் நீண்டகாலம் இருந்த அவர் பேசினால், மக்கள் மத்தியில் எடுபடும்’ என நினைக்கிறதாம் எடப்பாடி டீம்.