Published:Updated:

மிஸ்டர் கழுகு: அய்யப்பனுக்கு வெல்கம்... உதயநிதிக்கு வெயிட்டிங்... தி.மு.க-வில் ஷிண்டே ஜுரம்!

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

யாரைப் பற்றிக் கேட்கிறீர் என்பது புரிகிறது... கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பன் தி.மு.க-விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், பா.ஜ.க-வுக்குத் தாவப்போவதாகத் தகவல் கசிந்தது.

மிஸ்டர் கழுகு: அய்யப்பனுக்கு வெல்கம்... உதயநிதிக்கு வெயிட்டிங்... தி.மு.க-வில் ஷிண்டே ஜுரம்!

யாரைப் பற்றிக் கேட்கிறீர் என்பது புரிகிறது... கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பன் தி.மு.க-விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், பா.ஜ.க-வுக்குத் தாவப்போவதாகத் தகவல் கசிந்தது.

Published:Updated:
உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாரிடம், “நீர் சொன்னதுபோலவே அ.தி.மு.க அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டார்களே...” என்றபடியே மழைக்கு இதமாக சுக்கு காபியை நீட்டினோம். ருசித்துக் குடித்தவர், உரையாடலைத் தொடங்கினார்...

“அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் தன் ஆதரவாளர்களுடன் நுழைந்து, ஆவணங்களை அள்ளிச் சென்ற சமயம் அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் இருந்திருக்கிறார் முதல்வர். அப்போது, மீண்டும் மீண்டும் பன்னீர் தரப்பிலிருந்து அரசின் உதவி கேட்டு வந்த கோரிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகே அ.தி.மு.க அலுவலகத்துக்கு சீல் வைக்க ஓ.கே சொன்னாராம் ஸ்டாலின்.”

“ஒரு பக்கம் அ.தி.மு.க பிளவுபட்டாலும், இன்னொரு பக்கம் ஓர் இணைப்பு நடந்திருக்கிறதே?!”

“சிரிப்பு காட்டாதீர்... கட்சியும் இல்லை... நிர்வாகிகளும் இல்லை... ஆனால், ‘நான்தான் அ.தி.மு.க பொதுச்செயலாளர்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் சசிகலா. அலுவலகம்கூடப் போடாமல், தி.நகர் கிருஷ்ணபிரியா இல்ல முகவரியையே, ‘முகாம் அலுவலகம்’ என்று குறிப்பிட்டு லெட்டர் பேடில் மட்டும்தான் சசிகலா அணியே செயல்படுகிறது. இந்நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனியாக நடத்திக்கொண்டிருந்த, ‘அண்ணா திராவிடர் கழகம்’ என்கிற கட்சியை, சசிகலா அணியுடன் இணைக்கும் நிகழ்வு ஜூலை 12-ம் தேதி தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடந்திருக்கிறது. சசிகலாவுக்கும் திவாகரனுக்கும் சில வருடங்களாகப் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. குடும்பத்தில் உள்ளவர்கள் கூடிப் பேசி, ‘நம்மை இனி அ.தி.மு.க-வுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். குறைந்தபட்சம் நமக்குள்ளாவது ஒற்றுமை இருக்க வேண்டும்’ என்று முடிவெடுத்து, இருவரையும் சம்மதிக்கவைத்திருக்கிறார்கள். எப்படியோ.... இல்லாத கட்சிகள் இணைந்திருக்கின்றன!”

மிஸ்டர் கழுகு: அய்யப்பனுக்கு வெல்கம்... உதயநிதிக்கு வெயிட்டிங்... தி.மு.க-வில் ஷிண்டே ஜுரம்!

“சரி... தி.மு.க பக்கம் வாரும்!”

“ம்... அமைச்சர் பதவி வழங்கப்பட இருந்ததாலேயே, `மாமன்னன்தான் எனது கடைசிப் படம்’ எனப் பேசிவந்தார் உதயநிதி. சினிமாவில் நடித்துக்கொண்டு அமைச்சராகவும் இருக்க முடியாது. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்ததற்குக் காரணமே கருணாநிதி போட்ட அந்த கண்டிஷன்தான். அதே பிரச்னை உதயநிதிக்கும் வரக் கூடாது என்பதாலேயே, அப்படிப் பேசும்படி சொல்லிக்கொடுத்திருந்தார்கள். ஆனால், தற்போதைக்கு உதயநிதியை அமைச்சராக்கும் திட்டமில்லை என்ற முடிவில் தலைமை உறுதியாக இருக்கிறதாம். `நெஞ்சுக்கு நீதி’ படம் உதய்க்கு சமூகநீதி பிம்பத்தைக் கொடுத்திருக்கிறது. அதே போன்று இன்னும் சில படங்களில் நடித்து இமேஜை மேலும் வளர்க்கட்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அமைச்சராக்கலாம்’ என்ற திட்டத்தில் இருக்கிறதாம் தலைமை.”

“அவருக்கென்ன, எப்போது வந்தாலும் இடம் கிடைக்கும். கமலாலயம் செல்லவிருந்தவர், மீண்டும் அறிவாலயம் வந்த கதை என்னவாம்?”

“யாரைப் பற்றிக் கேட்கிறீர் என்பது புரிகிறது... கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பன் தி.மு.க-விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், பா.ஜ.க-வுக்குத் தாவப்போவதாகத் தகவல் கசிந்தது. உஷாரான அறிவாலயம், உடனடியாக அய்யப்பனிடம் பேசியிருக்கிறது. பா.ஜ.க-வில் சேரும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டு, ஜூலை 11-ம் தேதி அறிவாலயத்துக்கு வரவழைத்து கட்சியில் அவரை மீண்டும் இணைத்துக்கொண்டனர். ஸ்டாலினைச் சந்தித்து நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார் அய்யப்பன். உதயநிதி உடனடியாக அமைச்சர் ஆகாததற்கும், கடலூர் அய்யப்பனை அவசரமாகக் கட்சியில் சேர்த்துக்கொண்டதற்கும் அண்ணாமலை சொன்ன ‘ஏக்நாத் ஷிண்டே’ விவகாரம்தான் காரணம் என்கிறார்கள்.”

அய்யப்பன்
அய்யப்பன்

“தி.மு.க-வில் ஷிண்டே ஜுரம் என்று சொல்லும்! திருப்பூர் சர்ச்சையின் பின்னணியை விசாரித்தீரா?”

“விசாரித்தேன். திருப்பூரில் சிக்கலுக்குரிய இடத்திலிருந்த மசூதிக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மசூதிக்கு வேறு இடத்தை ஒதுக்குவதாக திருப்பூர் மாநகராட்சி மேயர் உறுதிகொடுத்து, பிரச்னையையே முடித்துவிட்டார். ஆனால், இதில் தனக்கான கிரெடிட் எடுக்க நினைத்த திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் செல்வராஜ், ‘மசூதிக்கு சீல் வைத்தால் பதற்றமான சூழல் உருவாகும்’ என்று முதல்வருக்குக் கடிதம் எழுதியதுடன், அதைத் தன் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுவிட்டார். அவர் ஆதாயம் தேட நினைத்து எழுதிய கடிதம், இந்து முன்னணியினருக்கு ஆதாயம் கொடுத்துவிட்டது. சாலைமறியல் தொடங்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர் இந்து முன்னணியினர். ஒருகட்டத்தில் காவல்துறை அதிகாரி மீதே பெட்ரோல் ஊற்றி எரிக்கும் அளவுக்குப் போயிருக்கிறார்கள். முடிந்துபோன பிரச்னையைத் தேவையில்லாமல் கிளறி, பதற்றத்தை உண்டாக்கியதால் செல்வராஜ் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது தலைமை. விரைவில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்” என்ற கழுகார், டேபிளில் இருந்த கோவில்பட்டி கடலை மிட்டாயைப் பதம் பார்த்தார். அதை மென்றபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

மிஸ்டர் கழுகு: அய்யப்பனுக்கு வெல்கம்... உதயநிதிக்கு வெயிட்டிங்... தி.மு.க-வில் ஷிண்டே ஜுரம்!

“நிதி நெருக்கடியைச் சமாளிக்க தமிழ்நாடு அரசுக்குப் புதிய யோசனை ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. கண்டிப்பாகத் தேவை என்ற நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே, அரசின் நலத்திட்டங்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் சில மாற்றங்களைச் செய்யலாம் என்பதே அந்த யோசனை. உதாரணமாக, முதல் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் பணக்காரர்களும்கூடப் பயனடைந்து வருகிறார்கள். அப்படியில்லாமல், இனி தேவையானவர்களை மட்டும் கண்டறிந்து, அவர்களுக்கு மட்டும் மானியம் கொடுத்தால் வருடத்துக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகுமாம். இப்படி, ஒவ்வொரு துறையிலும் கணக்கெடுத்து, திட்டங்களுக்கான பயனாளிகளைச் சரியாக அடையாளம் கண்டாலே தமிழ்நாடு சீக்கிரம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் என்று அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுவருகிறதாம்.”

“நல்ல யோசனைதான்... தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் பற்றித் தொடர்ந்து புகார் வருகிறதே?”

“ஆமாம்... தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் உதவி கமிஷனர் ஒருவர் வசூல் வேட்டைக்கென்றே ‘லிஸ்ட்’ ஒன்றைத் தயார் செய்துவைத்திருக்கிறாராம். அதில் எந்தெந்த அதிகாரிக்கு எவ்வளவு என்ற டீடெயில் இருக்கிறதாம். சில தினங்களுக்கு முன்பு புகார் கொடுக்கச் சென்ற பெண்ணிடம், ‘எனக்கு மட்டுமில்லை... லிஸ்ட்படி எல்லாருக்கும் கொடுக்கணும்...’ என்று ‘டீல்’ பேசியிருக்கிறார் அந்த உதவி கமிஷனர். ‘ஐயா உங்க பேரைச் சொல்லியும் பணம் கேட்கிறாங்க’ என்று அந்தப் பெண் மேலிடத்தில் முறையிட, இப்போது உதவி கமிஷனரிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது” என்ற கழுகார்...

“பிரபல டி.வி நிகழ்ச்சிக்கு காஸ்ட்யூம் சப்ளை செய்யும் சென்னை தொழிலதிபருக்கும், ஒரு சினிமா பிரபலத்தின் மனைவிக்கும் உறவு இருந்திருக்கிறது. இருவரும் சேர்ந்திருப்பதை அந்தத் தொழிலதிபர் வீடியோவாக எடுத்துவைத்திருந்தாராம். அந்த வீடியோ தொழிலதிபரின் நண்பர் கையில் கிடைக்க, அதைக் காட்டி சினிமா பிரபலத்தின் மனைவியை மிரட்டியிருக்கிறார் அந்த நபர். சினிமா பிரபலத்தின் மனைவி சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாரளிக்கப் போனபோது, தொழிலதிபரும் உடன் சென்றிருக்கிறார். ‘வீடியோவைக் காட்டி மிரட்டியது ஒரு குற்றம் என்றால், வீடியோ எடுத்ததும் குற்றம்தான்’ என்று தொழிலதிபர்மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் குற்றப்பிரிவு போலீஸார். அவரை வழக்கிலிருந்து விடுவிக்க ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் டீல் பேசிக்கொண்டிருக்கிறாராம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* கான்ட்ராக்டர் செய்யாதுரை வீட்டில் நடந்த ரெய்டைத் தொடர்ந்து, தி.மு.க-வின் இரு மூத்த அமைச்சர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். தங்களது துறை சார்ந்த பெரிய ஒப்பந்தங்களை செய்யாதுரைக்கும், சிறிய ஒப்பந்தங்களை அவர் கைகாட்டுபவர்களுக்குமே கொடுத்து பலன் பெற்றிருக்கிறார்கள் இந்த அமைச்சர்கள். அது தொடர்பான ஆவணங்களும் வருமான வரித்துறை கையில் சிக்கியிருப்பதுதான் அச்சத்துக்குக் காரணம்.

* தஞ்சை வடவாற்றங்கரையில் புதிதாகக் கட்டப்பட்ட பாலத்துக்காக அந்தப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. ஆனால், பாலத்துக்கு அருகிலேயே இருக்கும் ஒரு கட்டடம் மட்டும் ‘மார்க்’ செய்யப்பட்டும் இடிக்கப்படவில்லை. மாறாக, பாலத்தின் அளவையே சுருக்கிவிட்டார்கள். விசாரித்தால், அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் ‘பெரிய’ குடும்பத்துப் பெண்ணுக்கு உறவினராம்.