Published:Updated:

மிஸ்டர் கழுகு: மதுரையில் முருகன்... சென்னையில் மோடி... ஆளுநரின் அடுத்தடுத்த அட்டாக்!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

சிண்டிகேட் உறுப்பினரான உதயநிதியை மேடை ஏற்றுவதற்கு ஆளுநர் மாளிகை விரும்பாததால்தான், அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

மிஸ்டர் கழுகு: மதுரையில் முருகன்... சென்னையில் மோடி... ஆளுநரின் அடுத்தடுத்த அட்டாக்!

சிண்டிகேட் உறுப்பினரான உதயநிதியை மேடை ஏற்றுவதற்கு ஆளுநர் மாளிகை விரும்பாததால்தான், அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

“எதிர்பார்த்ததுபோலவே, திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராகிவிட்டார்” என்றபடியே என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு வெயிலுக்கு இதமாக சர்பத் கொடுத்தோம். சர்பத்தை உறிஞ்சியபடியே உரையாடலைத் தொடங்கினார்...

“எடப்பாடி தரப்புக்குத் தொட்டதெல்லாம் வெற்றியாக அமைய, பன்னீர் தரப்போ சசிகலா ஃபார்முலாவைக் கையில் எடுத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆதரவாளர்கள் என்கிற பெயரில், அ.தி.மு.க தொண்டர்கள் பலரிடமும் சசிகலா போனில் பேசினார் அல்லவா... அதே பாணியில் பன்னீர் தரப்பிலிருந்து வைத்திலிங்கம், ஒவ்வொருவரையும் தொடர்புகொண்டு ஆதரவு திரட்டிவருகிறாராம். சசிகலாவும் வைத்திலிங்கமும் கூட போனில் பேசிக்கொண்டார்களாம். அப்போது சசிகலா சொன்ன யோசனைப்படியே, இப்படி நிர்வாகிகளிடம் வைத்திலிங்கம் பேசிவருவதாகவும் சொல்கிறார்கள் டெல்டா ர.ர-க்கள்.”

“நல்ல ஃபார்முலா... அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் வருகிறாராமே?”

மிஸ்டர் கழுகு: மதுரையில் முருகன்... சென்னையில் மோடி... ஆளுநரின் அடுத்தடுத்த அட்டாக்!

“ஆம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் ஆலோசிக்காமலேயே, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்து, பட்டமளிப்பு விழாவை நடத்தி முடித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அரசைப் புறக்கணித்து விழாவை நடத்தினால் எப்படியான ரியாக்‌ஷன் கிடைக்கிறது என்பதையறிய மதுரை காமராஜர் பல்கலை விழாவை நடத்தி ‘ட்ரெய்லர்’ பார்த்தாராம் ஆளுநர் ரவி. எதிர்பார்த்தபடி, பெரிய பிரச்னை எதுவும் கிளம்பாததால், அடுத்த அட்டாக்குக்குத் தயாராகிவிட்டார். `இனிமேல்தான் மெயின் பிக்சரே இருக்கிறது’ என்கிறார்கள் பா.ஜ.க-வினர்.”

“ஓஹோ...”

மிஸ்டர் கழுகு: மதுரையில் முருகன்... சென்னையில் மோடி... ஆளுநரின் அடுத்தடுத்த அட்டாக்!
மிஸ்டர் கழுகு: மதுரையில் முருகன்... சென்னையில் மோடி... ஆளுநரின் அடுத்தடுத்த அட்டாக்!

“ஏற்கெனவே, சிண்டிகேட் உறுப்பினரான உதயநிதியை மேடை ஏற்றுவதற்கு ஆளுநர் மாளிகை விரும்பாததால்தான், அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்தச் சூழலில், ஜூலை 28-ம் தேதி ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கிவைக்க சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை, ஜூலை 29-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வைக்க ஒப்புதல் பெற்றுவிட்டார் ரவி. இதற்கு முன்பாக நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மட்டும்தான் அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றிருக்கிறார். அதன் பிறகு எந்தப் பிரதமரும் கலந்துகொண்டதில்லை. இப்படியிருக்க, ‘வேண்டுமென்றே மோடியை அழைத்திருக்கிறார் ஆளுநர்’ என்று கொதிக்கிறது தி.மு.க வட்டாரம். தேசிய கல்விக்கொள்கை, மாணவர்களுக்கான அறிவுரை என மோடி பேசவேண்டிய ‘ஸ்பீச் காப்பி’கூட இங்கிருந்துதான் டெல்லிக்குச் சென்றிருக்கிறதாம். கண்டிப்பாக தி.மு.க அரசைச் சீண்டும் வாக்கியங்கள் பிரதமரின் பட்டமளிப்பு உரையில் இடம்பெறும் என்கிறார்கள். மேலும், மோடியின் அண்ணா பல்கலைக்கழக வருகை பற்றி தமிழ்நாடு அரசுக்குத் தகவல் மட்டுமே சொல்லப்பட்டதே தவிர, அரசுடன் எந்த ஆலோசனையும் செய்யவில்லையாம் ஆளுநர் மாளிகை. ‘பிரதமர் பாதுகாப்பு நடைமுறை’ என்று சொல்லி, சிண்டிகேட் உறுப்பினர் உதயநிதியையும் மேடையேறவிடப்போவதில்லையாம். தி.மு.க அரசை அடுத்தடுத்து ஆளுநர் ‘அட்டாக்’ செய்வதால் விழிபிதுங்கியிருக்கிறது ஆளும் தரப்பு. பிரதமரைத் தமிழ்நாட்டுக்கு அழைத்ததே முதல்வர்தான் என்பதால், மோடி வருகையை எதிர்க்க முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறது தி.மு.க.”

“ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார் ஆளுநர் என்று சொல்லும். துரைமுருகனுக்கு ஏதோ கடிதம் எழுதப்பட்டிருக்கிறதாமே?”

மிஸ்டர் கழுகு: மதுரையில் முருகன்... சென்னையில் மோடி... ஆளுநரின் அடுத்தடுத்த அட்டாக்!

“துரைமுருகனுக்கு மட்டுமல்ல, ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார் காட்பாடி தொகுதியைச் சேர்ந்த தி.மு.க தொண்டர். துரைமுருகனுக்கு எழுதிய கடிதத்தில், ‘உங்கள் செருப்புக்குக் கொடுக்கின்ற மரியாதையைக்கூட தொண்டர்களாகிய எங்களுக்கு நீங்கள் கொடுப்பதில்லை. உங்களைச் சூழ்ந்திருக்கும் நபர்களால், 100 ஆண்டுகளில் தேயவேண்டிய நம் இயக்கம், ஓராண்டிலேயே தேய்ந்துபோய்விட்டது’ என்று தனது மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறார் அந்தத் தொண்டர். ‘காலி காட்பாடி தொகுதி தி.மு.க’ என்ற தலைப்பில் ஸ்டாலினுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ‘தி.மு.க தலைவரே உங்கள் பார்வையைக் கொஞ்சம் காட்பாடி தொகுதிப் பக்கம் திருப்புங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் அவர். இதை பிட் நோட்டீஸாகவும் அடித்து தொகுதி முழுக்க விநியோகித்திருக்கிறார் அவர். அவை பிரின்ட் செய்யப்பட்ட அச்சகத்தில் விசாரித்து, கடிதத்தை எழுதிய நபர் காட்பாடி அருகேயுள்ள வள்ளிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடித்த துரைமுருகனின் ஆதரவாளர்கள், அவரை நையப்புடைத்துவிட்டார்களாம்” என்று சொல்லி கிளம்பும் மூடுக்கு வந்த கழுகார்,

“பதிவுத்துறை அலுவலகங்களில் வில்லங்கச் சொத்துகளைப் பதிவுசெய்வதற்காகவே, உயரதிகாரிகள் தரப்பிலிருந்து தங்களுக்கு வேண்டிய உதவியாளர்களை நியமிக்கும் நடைமுறை இருக்கிறதாம். அப்படித்தான், சென்னை அருகிலுள்ள சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில், ஐ.ஏ.எஸ் அதிகாரி, பதிவுத்துறை உயரதிகாரி ஆகிய இருவரின் சிபாரிசின் பேரில் ‘மணி’யான உதவியாளர் ஒருவர் பணியமர்த்தப்பட்டார். அவர் இருந்தவரை அந்த அலுவலகத்தில் பல வில்லங்கப் பதிவுகள் நடந்திருக்கின்றனவாம். அதன் மூலம் ஏகப்பட்ட ‘ஸ்வீட் பாக்ஸ்களும்’ கைமாறியிருக்கின்றன. இந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் போயிருக்கிறது. பணத்தை எண்ணிய ‘மணி’யானவரின் கைகள் விரைவில் கம்பி எண்ணக்கூடும் என்கிறார்கள்” என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.

கழுகார் எக்ஸ்க்ளுசிவ்:

* ‘இனிப்பு’ அமைச்சர் சமீபத்தில் தென் மாவட்டம் ஒன்றுக்கு ஆய்வுக்காகச் சென்றிருந்தார். அப்போது, மாவட்ட பெண் உயரதிகாரி மீது ‘கை’ வைத்துவிட்டாராம். டென்ஷனான பெண் அதிகாரி, இது பற்றி ‘கோட்டை’ தலைமை அதிகாரியிடம் முறையிட, நேரடியாகவே அமைச்சரைக் கண்டித்துவிட்டாராம் கோட்டை அதிகாரி!

* ‘மணி’யான மாஜி அமைச்சர் அ.தி.மு.க-வில் தலைமைப் பொறுப்புக்குச் சென்றுவிட்டதால், அவரது மா.செ பதவியைப் பிடிக்க அவரின் நிழலாக வலம்வரும் ‘நிலவு’ பிரமுகர் காய்நகர்த்தியிருக்கிறார். ரெய்டு வளையத்தில் சிக்கியிருப்பதால் தனது பாதுகாப்புக்காக, கட்சிப் பதவியை எதிர்பார்த்திருக்கிறார் அவர். ஆனால், மாஜி தரப்போ ‘நோ’ சொல்லிவிட்டதாம்.