Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆலோசனை சொன்ன குடும்ப உறவு... தள்ளிப்போன உதயநிதி பட்டாபிஷேகம்!

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

கோயில் கோயிலாகச் சுற்றிக்கொண்டிருந்தவர், இப்போது தொண்டர் இல்லத் திருமணம், பத்திரிகையாளர் சந்திப்பு என்று நகர்ந்திருக்கிறார்

மிஸ்டர் கழுகு: ஆலோசனை சொன்ன குடும்ப உறவு... தள்ளிப்போன உதயநிதி பட்டாபிஷேகம்!

கோயில் கோயிலாகச் சுற்றிக்கொண்டிருந்தவர், இப்போது தொண்டர் இல்லத் திருமணம், பத்திரிகையாளர் சந்திப்பு என்று நகர்ந்திருக்கிறார்

Published:Updated:
உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

“தி.மு.க அரசுமீது அண்ணாமலை ஊழல் புகார் சொல்ல... அதற்கு அமைச்சரும் அதிகாரிகளும் பதில் சொல்ல... தமிழக அரசியலில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது...” என்றபடியே என்ட்ரி கொடுத்த கழுகார், நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார்.

“கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் ஊட்டச்சத்து மாவு, ஆவின் நெய், இரும்புச்சத்து டானிக் உள்ளிட்ட எட்டுப் பொருள்கள் அடங்கிய ‘ஊட்டச்சத்து பெட்டகம்’ வழங்கப்பட்டுவருகிறது. இதற்கான டெண்டரில்தான் முறைகேடு நடந்திருப்ப தாகப் போட்டுடைத்தார் அண்ணாமலை. ‘ஆவின் நிறுவனத்துக்கு வழங்கத் திட்டமிட்டிருந்த ஊட்டச்சத்து மாவு ஆர்டரை, இப்போது தனியார் நிறுவனத்துக்குக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார் கள். தி.மு.க ஆடிட்டர் சண்முகராஜா, அண்ணாநகர் தி.மு.க எம்.எல்.ஏ மோகன் என்பவரின் மகன் கார்த்திக் ஆகியோரின் நிர்பந்தத்தால், 450 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஊட்டச்சத்து பெட்டக டெண்டரை ‘அனிதா டெக்ஸ்காட்’ என்கிற நிறுவனத்துக்குக் கொடுக்கப் போகிறார்கள். இதில், 100 கோடி ரூபாய் வரை பணம் கைமாறியிருக்கிறது’ என்பது அண்ணாமலையின் குற்றச்சாட்டு. முடியாத டெண்டருக்காக எதற்கு இவ்வளவு பாய்ச்சல் என்று அதிகாரிகளைக்கொண்டே பதில் சொல்லவைத்து பிரச்னையை சிம்பிளாக முடித்துவிட்டார் அமைச்சர் மா.சு!”

“அண்ணாமலைக்கு இந்தக் கோப்புகளை கொடுத்ததே ஒரு தொழிலதிபர்தானாமே?”

“உமக்கும் தகவல் வந்துவிட்டதா... முதலில் அண்ணாமலை வெளியிடத் திட்டமிட்டிருந்தது வேறு இரண்டு துறைகளைப் பற்றி. முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான, நிலவின்பெயர் கொண்ட பிரமுகர் ஒருவர், இந்த ‘ஊட்டச்சத்து பெட்டக’ டெண்டரை எடுக்க முயன்றாராம். கடந்த ஆட்சியில் அந்தத் துறையில் இருந்த நெருக்கத்தை வைத்து, இந்த டெண்டர் தனக்குக் கிடைக்காது என்பதைத் தெரிந்துகொண்ட அந்தப் பிரமுகர்தான் அண்ணாமலையிடம் கோப்புகளைக் கொடுத்து பேசவைத்தாராம்.”

“ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்தும் பேசியிருக்கிறாரே...”

“ஆமாம். ‘ஓர் இடத்தை வாங்கி, லேஅவுட் அமைத்து, பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து உரிய அனுமதி பெற 200 நாள்களாவது ஆகும். ஆனால், ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனத்துக்கு 20 நாள்களில் அனுமதி தரப்பட்டுள்ளது. சி.எம்.டி.ஏ அப்ரூவலுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் விண்ணப்பிக்கும்போது மட்டுமே, இந்த இணையதளத்தின் ‘ஆன்லைன் லிங்க்’ வேலை செய்கிறது. இதனால், பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பாதிப்படைந்துள் ளன’ என்று குற்றச்சாட்டை முன்வைத்திருக் கிறார் அண்ணாமலை. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தி.மு.க ஆட்சி மீது அழுத்த மான ஊழல் முத்திரையைப் பதிக்க வேண்டும் என்ற அசைன்மென்ட்டோடு, இன்னும் பல துறைகள் குறித்த தகவல்களை வெளியிடுவது அண்ணாமலையின் திட்டமாம்.”

“ஓஹோ...”

“கமலாலயம் பற்றிய இன்னொரு தகவலைச் சொல்கிறேன். சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அ.தி.மு.க மேடைகளில் அதிகம் தலைகாட்டாமல் இருக் கும் மாஃபா பாண்டியராஜனை அடிக்கடி கமலாலயம் பக்கம் பார்க்க முடிகிறதாம். சென்னைக்கு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஏற்கெனவே சந்தித்துப் பேசியவர், சமீபத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் ஆகியோரையும் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்புகள் குறித்து அ.தி.மு.க தரப்பிலிருந்து விசாரித்தவர்களிடம் ‘மரியாதை நிமித்தமான சந்திப்புதான்’ என்று சொல்லியிருக் கிறார் அவர். ஆனாலும், ‘அ.தி.மு.க-வில் பாண்டியராஜனுக்கு தற்போது எந்த முக்கியத்து வமும் இல்லை. விருதுநகர் மாவட்டத்துக்கே போய் பொறுப்பு வாங்கும் முயற்சியும் தோல்வியடைந்துவிட்டது. எனவே, பழையபடி பா.ஜ.க-வுக்குத் தாவி பெரிய பதவியைப் பிடிக்கத் திட்டமிடுகிறார்’ என முணுமுணுக்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தில்.”

மிஸ்டர் கழுகு: ஆலோசனை சொன்ன குடும்ப உறவு... தள்ளிப்போன உதயநிதி பட்டாபிஷேகம்!
மிஸ்டர் கழுகு: ஆலோசனை சொன்ன குடும்ப உறவு... தள்ளிப்போன உதயநிதி பட்டாபிஷேகம்!

“அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் சசிகலாவின் முயற்சி எந்த நிலையில் இருக்கிறது..?”

“நக்கலாகத்தானே கேட்கிறீர்... இருந்தாலும் சில தகவல்களைச் சொல்கிறேன். கோயில் கோயிலாகச் சுற்றிக்கொண்டிருந்தவர், இப்போது தொண்டர் இல்லத் திருமணம், பத்திரிகையாளர் சந்திப்பு என்று நகர்ந்திருக்கிறார். ஆனால் ஆதரவாளர்கள் ரொம்பவே சோர்ந்துவிட்டார் கள். ‘அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவோம்... என்ற புளித்துப்போன வசனத்தையே இன்னும் எத்தனை காலம்தான் பேசுவார்... எத்தனை நாளைக்குத்தான் எங்கள் கைக்காசைப் போட்டே செலவழிக்க முடியும்... கட்சியால் சம்பாதித்த பணத்தை, கட்சியை மீட்பதற்கே வெளியில் எடுக்கவில்லையென்றால் வேறு எதற்குத்தான் எடுக்கப்போகிறார்’ என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டார்களாம். அங்கே சுற்றி இங்கே சுற்றி கல்லாப்பெட்டிக்குத்தான் வருவார்கள் என்பதை முன்பே யூகித்துவிட்ட சசிகலா குடும்ப உறுப்பினர்களோ, முன்கூட்டியே அதற்கேற்ப காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டார் களாம். செலவு பிடிக்கிற கட்சி வேலைகள் எதிலும் சசிகலா இறங்கிவிடாதபடி தடுக்கும் அவர்கள், யாராவது அவரை அப்படித் தூண்டினால் அவர்களைக் கட்டம்கட்டி, அவமரியாதை செய்து விரட்டிவிடுகிறார்களாம்.”

“ம்...”

“இன்னொரு பக்கம், டி.டி.வி.தினகரன் குன்னூரிலுள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் அ.ம.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தியி ருக்கிறார். ஜெயலலிதாவுக்கு ராசியான இடம் என்ற சென்ட்டிமென்ட்டால், அந்த ஹோட்டலில் 5-ம் தேதி கூட்டம் போட்டார். குன்னூரில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பைக் கண்டு மலர்ந்த அவரது முகம், கூட்டத்துக்கு ஆள் சேரவில்லை என்றதும் வாடிப்போனது. கட்சி நிர்வாகிகளில் பலரே கூட்டத்துக்கு வராமல் புறக்கணித்ததால், வேறு வழியின்றி பக்கத்து கிராமங்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். அப்செட் ஆன தினகரன் கூட்டத்தைச் சீக்கிரமே முடித்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார்.”

“அதுசரி, உதயநிதி மீண்டும் ஷூட்டிங் கிளம்பத் திட்டமிட்டிருக்கிறாராமே... அமைச் சரவையில் இணைகிறாரா, இல்லையா?”

மிஸ்டர் கழுகு: ஆலோசனை சொன்ன குடும்ப உறவு... தள்ளிப்போன உதயநிதி பட்டாபிஷேகம்!

“இப்போதைக்கு வேண்டாம் என முதல்வர் முடிவெடுத்துவிட்டாராம். முதல்வருக்கு நெருக்கமான உறவுதான் இந்த ஆலோசனையைச் சொன்னாராம். ‘மாமா இருந்தபோது இருந்த சூழல் வேறு... இன்றைய சூழல் வேறு. உங்களைச் சுற்றி நிறைய கண்கள் உறுத்தலோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் அளவுக்கு வலுவாகத்தான் இருக்கிறீர்கள். மத்தியில் உள்ளவர்களும் சிம்ம சொப்பனமாக உங்களைப் பார்க்கிறார்கள். இந்தச் சூழலில், தம்பியை அமைச்சரவைக்குள் கொண்டு வருவது சரிவராது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடியட்டும், பிறகு அவரை அமைச்ச ராக்கலாம். உங்கள் நிர்வாகத்தில் நாங்கள் யாரும் தலையிடுவதில்லை. அதேநிலை எல்லா மட்டங் களிலும் இருக்க வேண்டுமென்று சீனியர்கள் விரும்புகிறார்கள்’ என்றிருக்கிறார்.”

“குடும்ப ஆதிக்கத்தைப் பூடகமாகப் போட்டு உடைத்துவிட்டார்போல.”

“ஆமாம். அதிகம் பேசாத அவரே, இப்படி யொரு கருத்தைச் சொன்னது முதல்வரை யோசிக்கவைத்திருக்கிறது. சீனியர் அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட தன் நலவிரும்பிகள் சிலரிட மும் முதல்வர் கருத்து கேட்டிருக்கிறார். எல்லோ ரும் அதையே சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகுதான், உதயநிதியை இப்போதைக்கு அமைச் சரவையில் இணைக்க வேண்டாம் என முடிவெடுத்தாராம். அதற்கு பதிலாக, இளைஞரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள, ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’யை வலுப்படுத்த உதயநிதியைப் பணித்திருக்கிறாராம் முதல்வர். ‘நல்ல கதை வந்தால் தொடர்ந்து நடிப்பேன்’ என ‘நெஞ்சுக்கு நீதி’ வெற்றிவிழாவில் உதயநிதி பேசியது இதன் வெளிப்பாடுதான் என்கிறார்கள். உதயநிதி பட்டாபிஷேகம் தள்ளிப்போவதில் திருமதி முதல்வருக்கு வருத்தமாம்” என்ற கழுகாருக்கு வெயிலுக்கு இதமாக கிர்ணிப் பழ ஜூஸ் கொடுத்தோம். ரசித்துப் பருகியபடியே அடுத்த விஷயத்துக்குத் தாவினார் கழுகார்.

“தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் இல்லையென்றாலும், ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ தொடர்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய நிகழ்ச்சிகள், விழாக்களில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்கத் தொடங்கியிருப்பது, மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பைச் சங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவரது வருகையால் அமைச்சருக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்று புலம்புகிறார்கள் மனோ தங்கராஜ் ஆதரவாளர்கள். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனோ, அமைச்சர் கீதா ஜீவன் பொறுப்பில் இருக்கும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட எல்லைக்குள் ஆதிக்கம் செலுத்துகிறாராம். கூடவே, தன் கட்டுப்பாட்டில் இருக்கும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் தன் மூன்றாவது மகன் ஆனந்த மகேஸ்வரனை முன்னிறுத்துகிறாராம். ‘இளைய தெற்கு மாவட்டமே, இளைய அண்ணாச்சியே” என்றெல்லாம் பத்திரிகை விளம்பரம், வரவேற்பு பேனர்கள் என்று ஏகத்துக்கும் பில்டப் கொடுக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்” என்றபடியே சிறகுகளை விரித்துப் பறந்தார் கழுகார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism