Published:Updated:

மிஸ்டர் கழுகு: எடப்பாடி மெகா ‘ட்ரீட்’! - திக்குமுக்காடிய எம்.எல்.ஏ-க்கள்...

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு

‘அ.தி.மு.க மீண்டும் அதிகாரத்தைப் பிடிப்பது கடினம். இதனால், மருத்துவர் பாதையை மாற்றத் தயாராகிவிட்டார்’ என்கிறது தைலாபுரம் வட்டாரம்.”

மிஸ்டர் கழுகு: எடப்பாடி மெகா ‘ட்ரீட்’! - திக்குமுக்காடிய எம்.எல்.ஏ-க்கள்...

‘அ.தி.மு.க மீண்டும் அதிகாரத்தைப் பிடிப்பது கடினம். இதனால், மருத்துவர் பாதையை மாற்றத் தயாராகிவிட்டார்’ என்கிறது தைலாபுரம் வட்டாரம்.”

Published:Updated:
மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு
ஜூனியர் விகடன் இதழின் புதுப்பொலிவு பக்கங்களைப் புரட்டிய கழுகார், “ஒவ்வொரு பக்கமும் அட்டகாசம். தெறிக்கவிடுகிறீர்களே!” என்று பாராட்டினார். பாராட்டை ஏற்றுக்கொண்ட நாம், கழுகாருக்கு வில்லிப்புத்தூர் பால்கோவாவை நீட்டிவிட்டு, “வாசகர்களின் ஆதரவுதான் நம்மை உந்தச் செய்கிறது. அவர்களுக்காகத்தான் இந்த தீபாவளி ட்ரீட்” என்றோம். “எடப்பாடியும் வெயிட்டாக தீபாவளி ட்ரீட் அளித்திருக்கிறார் தெரியுமோ?” என்று பால்கோவாவைச் சுவைத்தபடி செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் அவர்களே எதிர்பாராத வகையில் மெகா மெகா தீபாவளி போனஸ் கொடுத்து திக்குமுக்காடச் செய்திருக்கிறதாம் முதல்வர் பழனிசாமி தரப்பு. துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு ஐந்து ‘ஸ்வீட் பாக்ஸ்’, நடுநிலையாக இருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு மூன்று ‘ஸ்வீட் பாக்ஸ்’, எடப்பாடி பக்கம் நின்ற எம்.எல்.ஏ-க்களுக்கு இரண்டு ‘ஸ்வீட் பாக்ஸ்’ என்று மூன்று ரகமாகப் பிரித்து தீபாவளி போனஸ் கொடுக்கப் பட்டிருக்கிறதாம். முதல்வர் வேட்பாளர் பிரச்னை சுமுகமாக முடிந்ததற்குத் தரப்பட்ட ட்ரீட் இது என்கிறார்கள். ‘கடைசி வரை எடப்பாடியை ஆதரித்ததற்கு இரண்டு பாக்ஸ் மட்டும்தானா?’ என்று சிணுங்குகிறது எடப்பாடி ஆதரவு தரப்பு.”

மிஸ்டர் கழுகு: எடப்பாடி மெகா ‘ட்ரீட்’! - திக்குமுக்காடிய எம்.எல்.ஏ-க்கள்...

“சரிதான். அ.தி.மு.க-வுடன் கூட்டணிக் கட்சிகள் மோத ஆரம்பித்துவிட்டன போலிருக்கிறதே?”

“தேர்தல் நெருங்கிவிட்டது... மோதவில்லை என்றால்தானே ஆச்சர்யம். சமீபத்தில், ‘ஆளும்கட்சி சொன்னதைச் செய்யவில்லை’ என்று காட்டமாக விமர்சித்திருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், சென்னையில் குப்பை எரியூட்டு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ‘அ.தி.மு.க மீண்டும் அதிகாரத்தைப் பிடிப்பது கடினம். இதனால், மருத்துவர் பாதையை மாற்றத் தயாராகிவிட்டார்’ என்கிறது தைலாபுரம் வட்டாரம்.”

“தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்கூட ஏதோ கூறியிருக்கிறாரே,,?”

“மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், ‘நாங்கள் நினைத்தால் மூன்றாவது அணி அமைப்போம். எங்களுக்கு தனித்துப் போட்டியிட எந்த பயமும் இல்லை. அரசியலில் எதிரிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை’ என்று ‘சிரிக்காமல்’ சொன்னதைக் கேட்டு, அங்கிருந்த நிருபர்களே... ‘தம்பி... உங்க கட்சியோட நிலைமை தெரிஞ்சுதான் பேசுறீங்களா!” என்று ‘ஜெர்க்’ ஆகிப்போனார்களாம்” என்ற கழுகாரிடம், தி.மு.க தலைவர் ஸ்டாலினைக் கிண்டலடித்து கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களைக் காட்டினோம்.

மிஸ்டர் கழுகு: எடப்பாடி மெகா ‘ட்ரீட்’! - திக்குமுக்காடிய எம்.எல்.ஏ-க்கள்...

“எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியவுடன், ஸ்டாலினைக் கிண்டலடிக்கும் வகையில் சமீபத்தில் அ.தி.மு.க ஐ.டி டீமைச் சேர்ந்தவர்கள், ‘உழைப்பை நம்பலாமா, பிறப்பை நம்பலாமா?’ என்று ஸ்டாலினை இம்சை அரசன் புலிகேசி தோற்றத்தில் சித்திரித்து, கோவை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருக்கிறார்கள். இது ஸ்டாலினின் சமூகம் சார்ந்தவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் போஸ்டர் யுத்தம் பெரிதாகலாம்.”

“தி.மு.க-வில் ஏதேனும் சுவாரஸ்யச் செய்திகள்?”

“சட்டமன்றத் தேர்தலுக்காக, கட்சியின் அமைப்பை ஆறு அல்லது ஏழு மண்டலங்களாகப் பிரித்து, மண்டலத்துக்கு ஒரு நிர்வாகியை நியமிக்கவிருக்கிறது அறிவாலயம். ஒவ்வொரு மண்டலத்தின் கீழும் குறைந்தது பத்து மாவட்டங்கள் இடம்பெறுமாம். இதுவரை, மேற்கு மண்டலத்துக்கு ஆ.ராசா, வடக்கு மண்டலத்துக்கு எ.வ.வேலு, தென் மண்டலத்துக்கு கனிமொழி, மத்திய மண்டலத்துக்கு தொ.மு.ச செயலாளர் சண்முகம் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மண்டல நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணியை முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மேற்கொள்வார் என்கிறார்கள்.”

“கனிமொழிக்குப் பதவி என்கிறீர்கள்... ஆனால், அவர் கடும் மனவருத்தத்தில் இருக்கிறார் என்று தகவல் வருகிறதே..?”

“2ஜி வழக்குதான் காரணம் என்கிறார்கள். இது பற்றிப் பேசும் அவருக்கு நெருக்கமானவர்கள், ‘2ஜி வழக்கில் தன் குடும்பத்தின்மீது விழுந்திருக்கும் மொத்தப் பழியையும் கனிமொழிதான் சுமக்கிறார். டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கி இருபது நாள்களுக்கு மேலாகியும், கட்சித் தலைமையிலிருந்து இது பற்றித் தன்னிடம் எதுவுமே விசாரிக்கவில்லை; `நாங்கள் இருக்கிறோம்; கவலைப்பட வேண்டாம்’ என்றுகூடச் சொல்லவில்லை என்பதுதான் கனிமொழியின் மனவருத்தத்துக்குக் காரணம்’ என்கிறார்கள்.” “நடிகர் விஜய்க்கும், அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் மீண்டும் முட்டல் என்கிறார்களே..?”

மிஸ்டர் கழுகு: எடப்பாடி மெகா ‘ட்ரீட்’! - திக்குமுக்காடிய எம்.எல்.ஏ-க்கள்...

“ஆமாம். கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாகவே அப்பா-மகன் உறவு சுமுகமாக இல்லையாம். செல்லுமிடத்திலெல்லாம் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி எக்குத்தப்பாக வார்த்தைகளைவிட்டதால், தந்தைமீது வருத்தத்தில் இருந்திருக்கிறார் விஜய். தவிர, நிர்வாகிகள் சிலரும் எஸ்.ஏ.சி மீது புகார் வாசித்திருக்கிறார்கள். ‘மக்கள் இயக்கத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டிருந்த பாஸ்கர், செல்வகுமார் உள்ளிட்டோர் எஸ்.ஏ.சி-யுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள். அவர்கள்தான் தேவையில்லாத புரளிகளையெல்லாம் கிளப்புகிறார்கள்’ என்றெல்லாம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் சமீபத்தில் எஸ்.ஏ.சி-க்கு தூண்டில்போட்டிருக்கிறது பா.ஜ.க தரப்பு. இதில் ‘வருகிறேன் அல்லது வரவில்லை’ என்று சொல்வதை விட்டுவிட்டு, ‘வருவதால் என்ன பலன்?’ என்று கணக்கு போட்டதாம் எஸ்.ஏ.சி தரப்பு. இதைக் கேட்ட பா.ஜ.க தரப்பு, தனது பிடியை மேலும் இறுக்கத் தொடங்கியிருக்கிறது. ஒருகட்டத்தில் இந்த இறுக்கம் தாங்காமல்தான்... ‘எங்களுக்கே சொந்த கம்பெனி இருக்கிறது... நாங்க ஏன் வரணும்’ என்கிறரீதியில் ‘விஜய் மக்கள் இயக்கம், எப்போது வேண்டுமானாலும் அரசியல் இயக்கமாக மாறலாம்’ என்று சொல்லியிருக்கிறார் எஸ்.ஏ.சி.

“இந்தப் பிரச்னையை முன்வைத்துத்தான் சென்னை பனையூரில் தன் மக்கள் இயக்கத்தினரைச் சந்தித்தாரா நடிகர் விஜய்?”

“தன் அப்பா சொன்னது ஒருபுறம்... மற்றொரு புறம் ‘பா.ஜ.க-வுடன் விஜய் தொடர்பிலிருக்கிறார்’ என்கிற தகவல் காட்டுத்தீயாகப் பரவுவது ஆகிய சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகத்தான் இயக்கத்தின் நிர்வாகிகளைச் சந்தித்து சில விஷயங்களை மனம்விட்டுப் பேசியிருக்கிறார்’’ என்கிறார்கள் அவரின் இயக்கத்தினர்!”

சூடாக ஃபில்டர் காபியை கழுகாருக்கு அளித்துவிட்டு, “மதுரை கலெக்டரான டாக்டர் வினய் பணியிட மாற்றத்தின் பின்னணி, ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறதே?” என்றோம்.

மிஸ்டர் கழுகு: எடப்பாடி மெகா ‘ட்ரீட்’! - திக்குமுக்காடிய எம்.எல்.ஏ-க்கள்...

காபியைப் பருகியபடியே தொடர்ந்தார் கழுகார். “மூன்று வருடங்களுக்கு முன்னர் 547 சத்துணவுப் பணியாளர்களுக்கான நேர்காணல் நடந்து, நியமனம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த ஆட்சியர் வினய், அந்த நேர்காணலை ரத்துசெய்ததுடன், தகுதியின் அடிப்படையில் புதிதாக விண்ணப்பிக்கும்படி அதிரடியாக அறிவித்தார். இது ஆளும் தரப்பை அதிரவைத்துவிட்டதாம். வேலைக்காகக் கட்சி நிர்வாகிகளிடம் பணம் கொடுத்திருந்தவர்கள், பணத்தைத் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். மதுரை ஆட்சியரின் உத்தரவை மட்டும் ரத்து செய்ய முடியாது என்பதால், தமிழகம் முழுவதும் சத்துணவு காலி பணியிடங்களுக்கான நேர்காணலை ரத்து செய்ததாக சமீபத்தில் அரசு அறிவித்தது. இந்தக் கடுப்பில்தான், சேலம் பட்டுப்புழு வளர்ப்புத்துறை இயக்குநராக வினய்யை மாற்றினார்களாம்.”

“எப்படியிருக்கிறது பா.ஜ.க முகாம்?”

“உற்சாகமாக இருக்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன். தனது வேல் யாத்திரை, தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறாராம் அவர். வரும் நவம்பர் 6-ம் தேதி திருத்தணியிலிருந்து யாத்திரையைத் தொடங்கும் முருகன், கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் செல்ல ரூட் மேப் போட்டுவைத்திருக்கிறார். இடையே ஐம்பது ஊர்களில் சொற்பொழிவாற்றும் திட்டமும் இருக்கிறதாம். ஒவ்வோர் ஊரிலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்து எதிர்ப்பை திராவிடக் கட்சிகள் எப்படியெல்லாம் செயல்படுத்தி வருகின்றன என்று விளக்கப் போகிறாராம்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

* ஒருகாலத்தில் சசிகலாவுக்கு மிகவும் வேண்டப்பட்டவராக வலம்வந்த கொங்கு மண்டல அமைச்சர், பின்னர் எடப்பாடியை உடும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டுவிட்டார். அதிலிருந்தே அவரின் உதவியாளர் ஒருவரின் காட்டில் பன்னீர் மழைதானாம். ஏற்கெனவே அரசுப் பணியிலிருந்தபோது ‘அளந்து, அளந்து’ செல்வம் சேர்த்த அந்த உதவியாளர், அளக்க முடியாத அளவுக்கு செல்வத்தில் கொழிக்க ஆரம்பித்துவிட்டாராம். மிகச் சமீபத்தில் இதையறிந்து அதிர்ந்துபோன அமைச்சர், அந்த உதவியாளரை ஒதுக்கிவைத்துவிட்டார். ஆனாலும், பிற உதவியாளர்களிடம் நைசாகப் பேசிச் சில காரியங்களைச் சாதிக்க முயன்றிருக்கிறார். அப்போதும் ‘பப்பு’ வேகவில்லை. இதனால் நொந்துபோனவர், மற்ற உதவியாளர்களைப் பற்றி இஷ்டம்போல தவறான தகவல்களைப் பரப்பிக்கொண்டிருக்கிறாராம். இதையடுத்து, தன் உதவியாளர் பட்டியலிலிருந்தே அவரை நீக்கிவிடத் தீர்மானித்திருக்கிறாராம் உடும்புப்பிடி அமைச்சர்.

* பத்திரப்பதிவு ஐ.ஜி ஜோதி நிர்மலா மாற்றப்பட்டு, அவரது பணியிடத்தில் சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார். துறை அமைச்சரான கே.சி.வீரமணி தரப்பு அளிக்கும் இடமாறுதல் கோப்புகளில் கையெழுத்துப் போடாததே ஜோதி நிர்மலா மாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism