Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘அந்த சாமிதான் காப்பாத்தணும்...’ - கைவிட்ட நீதிமன்றம்... கலக்கத்தில் ஓ.பி.எஸ்!

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப் பேச்சியம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப் பேச்சியம்மன் கோயில்

சாவியை எடப்பாடி தரப்பிடம் ஒப்படைத்ததற்கு எதிராக, ஓ.பி.எஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

மிஸ்டர் கழுகு: ‘அந்த சாமிதான் காப்பாத்தணும்...’ - கைவிட்ட நீதிமன்றம்... கலக்கத்தில் ஓ.பி.எஸ்!

சாவியை எடப்பாடி தரப்பிடம் ஒப்படைத்ததற்கு எதிராக, ஓ.பி.எஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப் பேச்சியம்மன் கோயில்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப் பேச்சியம்மன் கோயில்

“ ‘ஆளும் இல்லை... நிதியும் இல்லை... அல்லாடும் எஸ்.சி., எஸ்.டி ஆணையம்’ என்ற தலைப்பில் 14.09.2022 தேதியிட்ட இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தீர்கள் அல்லவா... அதன் விளைவாக ஆணையத்துக்கான நிதியை ஒதுக்கியதோடு, 48 பணியாளர்களை நியமிப்பதற்கான ஆணையையும் பிறப்பித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. வாழ்த்துகள்” என்றபடி உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“நீதிமன்றத் தீர்ப்பு, குடும்பத்துக்குள் குழப்பம் எனத் தொடர்ந்து பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் சமயத்தில், தனது குலதெய்வமான ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப் பேச்சியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். பொதுவாக, தான் மட்டும் தனியே சென்று வழிபாட்டை மேற்கொள்ளும் ஓ.பி.எஸ்., இந்த முறை ஒட்டுமொத்த குடும்பத்தையுமே அழைத்துச் சென்றிருக்கிறார். டெல்லி சென்றிருப்பதால் ஓ.பி.ரவீந்திரநாத் மட்டும் மிஸ்ஸிங். ‘இந்த இக்கட்டான சூழலிலிருந்து அந்த சாமிதான் உங்களைக் காப்பாத்தணும்... பௌர்ணமிக்குள் குடும்பத்தோட போய் குலதெய்வ வழிபாடு செய்யறது நல்லது’ என்று ஜோதிடர் ஒருவர் சொன்ன அறிவுரைதான் இதற்குக் காரணமாம்.”

மிஸ்டர் கழுகு: ‘அந்த சாமிதான் காப்பாத்தணும்...’ - கைவிட்ட நீதிமன்றம்... கலக்கத்தில் ஓ.பி.எஸ்!

“ஓஹோ...”

“இதற்காக, முதல்நாளே விருதுநகர் வந்த ஓ.பி.எஸ்., அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார். அங்கிருந்து குலதெய்வக் கோயிலுக்குப் போய், சிறப்பு பூஜைகளெல்லாம் முடித்துவிட்டு, சந்நிதியில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்திருக்கிறார். பின்னர், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்யவிருந்த வழக்கு ஆவணங்களை சாமியின் காலடியில் வைத்து வழிபட்டு, கையெழுத்திட்டிருக்கிறார். கேரளாவுக்குச் சென்று ரகசியமாகச் சில பூஜைகளைச் செய்துவிட்டு வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.”

“என்ன வழிபாடு செய்து என்ன புண்ணியம்... அ.தி.மு.க அலுவலகச் சாவி தொடர்பான வழக்கும் அவருக்கு எதிராக வந்திருக்கிறதே?!”

“ஆமாம், சாவியை எடப்பாடி தரப்பிடம் ஒப்படைத்ததற்கு எதிராக, ஓ.பி.எஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. `கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் எப்படி உரிமை கோர முடியும்?’ என்ற கேள்வி, உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் பொதுக்குழு வழக்கிலும் பிரதிபலிக்க வாய்ப்பிருக்கிறது என இப்போதே அச்சத்தில் இருக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. அவர் பிளான் செய்த பொதுக்கூட்டம் ஏற்கெனவே கோவையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு ஷிஃப்ட் ஆனதல்லவா... இப்போது அது எம்.ஜி.ஆர் வீட்டுக்கு ஷிஃப்ட் ஆகியிருக்கிறது. ‘கூட்டம் சேராவிட்டால் இருக்கிற கொஞ்ச நஞ்ச இமேஜும் டேமேஜ் ஆகிவிடும்’ என்று சசிகலா அட்வைஸ் செய்ததாலேயே இந்த மாற்றம் என்கிறார்கள். ராமாவரம் தோட்டத்தில், அக்டோபர் 17-ம் தேதி அ.தி.மு.க பொன்விழா ஆண்டையொட்டி இந்தக் கூட்டத்தை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.”

மிஸ்டர் கழுகு: ‘அந்த சாமிதான் காப்பாத்தணும்...’ - கைவிட்ட நீதிமன்றம்... கலக்கத்தில் ஓ.பி.எஸ்!

“இவ்வளவு ரணகளத்திலும் கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டிருக்கிறாரே சசிகலா?”

“ஓ... அந்த விவகாரமா... இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இரு பிரிவுகளாக நெட்டிசன்கள் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த நேரத்தில், ‘ராணி எலிசபெத்தின் மறைவை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவின் புரட்சிப் பயணம் ஒரு நாள் தள்ளிவைப்பு’ என்கிறரீதியில் வந்த சசிகலாவின் அறிக்கையால் குபீர் ஆகியிருக்கிறது சமூக வலைதளம். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் அப்படியே ‘யூ டர்ன்’ அடித்து சசிகலாவைக் கலாய்த்துத் தள்ளிவிட்டனர்.”

“பரபரப்பாக இருக்கும் தமிழக அரசியல் களத்தில் இது போன்ற என்டர்டெயின்மென்ட்டும் தேவைதானே... டி.டி.வி.தினகரன் என்ன செய்கிறாராம்?”

“அண்ணா பிறந்தநாளுக்கு தி.மு.க., அ.தி.மு.க-வைவிட இரண்டு மடங்கு கூட்டங்களை நடத்த கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் தினகரன். `தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் வருவாய் மாவட்டங்களுக்கு ஒரு கூட்டம் நடத்தினால், நாம் கட்சி நிர்வாக மாவட்டத்துக்கு ஒரு கூட்டம் நடத்த வேண்டும்’ என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டவர், வழக்கம்போல பர்ஸை மட்டும் திறக்கவே இல்லையாம். ‘கொஞ்சமாவது கரன்சியையும் கண்ணுல காட்டினால் என்னவாம்?’ என முணுமுணுக்கிறார்கள் அ.ம.மு.க மா.செ-க்கள்” என்ற கழுகாருக்கு பாதாம் பால் கொடுத்தோம். அதைப் பருகியபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

மிஸ்டர் கழுகு: ‘அந்த சாமிதான் காப்பாத்தணும்...’ - கைவிட்ட நீதிமன்றம்... கலக்கத்தில் ஓ.பி.எஸ்!

“ஜாக்டோ - ஜியோ சார்பில் முதல்வர் ஸ்டாலினை அழைத்து, ‘ஆசிரியர், அரசு ஊழியர் வாழ்வாதார மாநாடு’ நடத்தினார்கள் அல்லவா... பழைய ஓய்வூதியத் திட்டத்தை முக்கியக் கோரிக்கையாக வைத்துத்தான் முதல்வரை அழைத்திருக்கிறார்கள். அப்போது, கோரிக்கை மாநாடு என்றால் வர முடியாது என்று முதல்வர் தரப்பு மறுத்துவிட்டதாம். பிறகே, ‘வாழ்வாதார’ மாநாடு என்று பெயரை மாற்றியிருக்கிறார்கள். ‘மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார், முக்கியமான பல அறிவிப்புகள் இருக்கின்றன’ என்று கூட்டமைப்பிலுள்ள குட்டிக் குட்டி அமைப்புகளின் தலைவர்கள், சங்கத்தினரை சென்னைக்கு அழைத்து வந்திருந்தனர். எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் இல்லாமல், முதல்வரின் உரை முழுவதும் வெறும் வார்த்தைஜாலமாகவே இருந்ததால் அதிருப்தியடைந்த அரசு ஊழியர்கள் நிகழ்ச்சி முடியும் முன்பே வெளியேறியிருக்கிறார்கள். விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.”

மிஸ்டர் கழுகு: ‘அந்த சாமிதான் காப்பாத்தணும்...’ - கைவிட்ட நீதிமன்றம்... கலக்கத்தில் ஓ.பி.எஸ்!

“கே.எஸ்.அழகிரிக்கும் ஜோதிமணிக்கும் இடையே என்ன பிரச்னை?”

“ஒற்றுமைப் பயணத்தில்தான் ‘ஒரண்டை’யாகியிருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தி நடைப்பயணத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை ஓரங்கட்டிவிட்டு, ஜோதிமணியே அனைத்து விஷயங்களையும் முன்னின்று செய்திருக்கிறார். மீனவர்கள் சந்திப்பு, விவசாயிகள் சந்திப்பு என எல்லாமே ஜோதிமணி திட்டப்படிதான் நடந்திருக்கின்றன. விவசாயிகள் சந்திப்பின்போது, தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் உள்ளிட்டவர்களை சந்திப்பதாக காங்கிரஸ் இணையதளத்தில் லிஸ்ட் போடப்பட்டிருந்தது. ஆனால், இளங்கீரன் குழுவைச் சந்திக்கவிடாமல் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயக்குழுவை மட்டும் சந்திக்கவைத்திருக்கிறார் ஜோதிமணி. ‘நான் தேர்ந்தெடுத்தவர்கள் என்பதாலேயே இளங்கீரன் குழுவை ஜோதிமணி தவிர்த்திருக்கிறார்’ எனத் தன்னுடன் இருந்தவர்களிடம் கடுகடுத்திருக்கிறார் அழகிரி” என்ற கழுகார்...

“தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஓய்வூதியர்களுக்கு இதுவரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க, துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் பலமுறை உத்தரவிட்டும் எதுவும் நடக்க

வில்லையாம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* கோட்டை மாவட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் ஆக வேண்டுமென்பதற்காக கோயிலில் கிடா வெட்டி பூஜை போட்டிருக்கிறார். விருந்துக்கு வந்த அவரின் அடிப்பொடிகள், டாஸ்மாக் கடைகளில் எம்.எல்.ஏ பெயரைச் சொல்லியே மிரட்டி பெட்டி பெட்டியாகச் சரக்கு பாட்டில்களை வாங்கியிருக் கிறார்கள். அதற்கான பணம் தங்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பதால் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.

*  அ.தி.மு.க ஆட்சி முடியப்போகும் நேரத்தில், சென்னை ராஜ்பவன் அருகே 30 கோடி ரூபாய் செலவில் அவசர அவசரமாக வனத்துறை அலுவலகம் கட்டப்பட்டிருக்கிறது. சி.எம்.டி.ஏ., மாநகராட்சி என எங்கும் ஒப்புதல் வாங்காமல் கட்டப்பட்டது இப்போது சர்ச்சையாகியிருக்கிறது. அலுவலகக் கட்டடத்தைக் காப்பாற்ற, ஒரே மூச்சில் எல்லா அனுமதியையும் வாங்கிவிட வேண்டுமென துறை அதிகாரிகள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்களாம்!

* முருகக்கடவுள் பெயர்கொண்ட உயரதிகாரி, விளையாட்டுத்துறை ஊழியர்களை ஒருமையில் திட்டுவது, ஆபாச அர்ச்சனை செய்வது என ஆட்டம் போடுகிறாராம். ஓய்வுபெறும் நிலையிலிருந்த, சென்னையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரைத் திட்டி, சமீபத்தில் திருநெல்வேலிக்குத் தூக்கியடித்திருக்கிறார் அவர்.