‘‘ஹவுடி மோடி... ஹவுடி மோடி...’’ என்று ‘ரௌடி பேபி’ பாடல் மெட்டில் சத்தமாகப் பாடியபடியே வந்தார் கழுகார்.

‘‘என்ன இது... ஏகத்துக்கும் உற்சாகம் பொங்குகிறதுபோலிருக்கிறதே!’’ என்றபடியே வரவேற்றோம்.

‘‘பின்னே... அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ‘மோடியே சரணம்’ எனப் படுத்தேவிட்டாரே ட்ரம்ப். இந்தியத் தேர்தலில் சாதித்துக்காட்டிய மோடியை, அமெரிக்க அதிபரான ட்ரம்ப் தன்னுடைய ‘அரசியல் குரு’ என்கிற ரேஞ்சுக்குக் கொண்டாட ஆரம்பித்துவிட்டாரே. ஓர் இந்தியனாகப் பெருமைப்பட வேண்டிய தருணமல்லவோ!’’

‘‘இதில் உள்குத்து ஏதுமில்லையே?’’

‘‘வெளிகுத்துகூடக் கிடையாது. சரி, நான் வந்த வேலையைப் பார்க்கிறேன். நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி என அறிவிக்கப்பட்ட உடனேயே, இரு கழகக் கூட்டணிகளிலும் விறுவிறுவென வேலைகள் வேகமெடுத்துவிட்டன. ‘நாங்குநேரித் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க விட்டுத்தருமா... தராதா?’ என்று நீடித்த சஸ்பென்ஸுக்கு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மு.க.ஸ்டாலின் சந்திப்பு விடை கொடுத்துவிட்டது!’’

‘‘தி.மு.க எதற்காக விட்டுக்கொடுத்ததாம்?’’

‘‘அது, காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமார் ராஜினாமா செய்த தொகுதி. அதனால்தான் அவர்கள் பிடிவாதமாகக் கேட்டனர். ஆனால், அந்தத் தொகுதியில் வெற்றிபெறுவதன் மூலம் தி.மு.க-வின் பலத்தை மேலும் கூட்டிக் கொள்ளலாம் என்று பெருந்தலைகள் சில தூபம்போட்டதால், அந்தத் தொகுதியை தி.மு.க எடுத்துக்கொள்ள நினைத்தது. காங்கிரஸ் தரப்பில் அதை கௌரவப் பிரச்னையாகவே கருதி ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.’’

``தெரிந்த கதைதானே... சமாதானம் எப்படி ஏற்பட்டது?’’

``கடைசியில், ‘இந்த ஒரு தொகுதியால் என்ன நடந்துவிடப்போகிறது? இப்போதைக்கு விட்டுக்கொடுத்தால், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை நம் கட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ளலாம்’ என்று ஒரு சில தி.மு.க. புள்ளிகள் ஆலோசனை சொல்ல, அதை ஆமோதித்துவிட்டாராம் ஸ்டாலின். அதே சமயம், ஒரு விஷயத்தை காங்கிரஸுக்குத் தெளிவாகச் சொல்லிவிட்டதாம் தி.மு.க தரப்பு.’’

‘‘அது என்ன?’’

‘‘எல்லாம் பண விஷயம்தான். ‘பூத் கமிட்டி செலவு முதல் வாக்காளர்களைக் குளிப்பாட்டுவது வரை உங்கள் பொறுப்பு’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். ஏற்கெனவே நாங்குநேரி எம்.எல்.ஏ-வாக இருந்த வசந்தகுமார், ‘இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு முழுச்செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சொல்லியிருந்தார். தி.மு.க கழன்றுகொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்!’’

‘‘கண்டிப்பாகச் செலவுசெய்வாரா?’’

‘‘அதைக் காப்பாற்றுவாரா என்பதுதான் தொகுதி கதர்சட்டைகளிடையே விவாதமாக மாறியுள்ளது. ‘வசந்தகுமார், தன் சார்பில் கூட்டம் நடத்தினால் வருகிறவர்களுக்கெல்லாம் சைனா பேக் வாங்கிக் கொடுத்து வேலையை முடித்துவிடுவார். தற்போது 20 கோடி, 30 கோடி என்று தேர்தல் செலவு எகிறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தான் போட்டியிட்டால் அவ்வளவு தூரம் செலவு செய்வார். ஆனால், அடுத்தவருக்காகச் செய்வாரா?’ என்று கதர்சட்டைக்காரர்கள் பேசிக்கொள்கிறார்கள்.’’

‘‘பரிதாபம்தான்.’’

‘‘பசையுள்ள பார்ட்டியைக் களத்தில் இறக்கினால் மட்டுமே ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வை எதிர்கொள்ள முடியும் என்கிற சூழல் நாங்குநேரியில் நிலவுகிறது. சோப் கம்பெனி அதிபர், முன்னாள் சட்டமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் என காங்கிரஸ் கட்சியில் போட்டியில் இருக்கிறார்கள்!’’

‘‘அ.தி.மு.க-வில் என்ன நிலவரமாம்?’’

‘‘இரண்டு தொகுதிகளிலும் ஜெயித்தால் சட்டமன்றத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்று ஆளுங்கட்சி திட்டமிடுகிறது. ஆனால், சட்டமன்றத்தில் நமது கணக்கைத் தொடங்கலாம் என்று பி.ஜே.பி-க்கு ஆசை வந்திருக்கிறது!’’

‘‘என்னது... பி.ஜே.பிக்கு ஆசையா?’’

‘‘ஆமாம்! ‘நாங்குநேரித் தொகுதியில் நாம் போட்டியிட்டால் என்ன?’ என்று பி.ஜே.பி பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் கிளம்பிவிட்டார். சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்டபோது ஏகப்பட்ட செலவு செய்தார். வெற்றிக்கனியைப் பறிக்க முடியாத அவர், ‘நாங்குநேரி... எனது ஊரின் பக்கத்துத் தொகுதி. நிச்சயம் ஜெயித்துவிடுவேன்’ என்று பொன்.ராதாகிருஷ்ணனிடம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து, ‘2021-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக மோதிப் பார்த்தால் என்ன?’ என்று டெல்லி பி.ஜே.பி தலைமை வரையிலும் சிக்னல் அனுப்பியிருக் கிறாராம் பொன்.ராதாகிருஷ்ணன்.’’

‘‘பலே, பலே...’’

‘‘அதேபோல, அ.தி.மு.க தரப்பிடமும் ‘காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் எங்களுக்கு வாயப்பு தாருங்கள். நாங்கள் மோதிப் பார்க்கிறோம்’ என்று அடிபோட்டுள்ளாராம். ஆனால், அ.தி.மு.க தரப்பு ரொம்பவே யோசிக்கிறதாம்.’’

``ஏன்?’’

‘‘ஏற்கெனவே, ‘பி.ஜே.பி-யின் அடிமை ஆட்சி’ என, ஊர் முழுக்க பெயர் கெட்டுக் கிடக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜோடி போட்டதிலும் முழுக்கவே தோல்விமுகம்தான். எல்லாவற்றுக்கும் காரணம், பி.ஜே.பி மீதான தமிழக மக்களின் கோபம்தான். இந்த நிலையில், இந்தத் தொகுதியையும் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு மேலும் கெட்டபெயர் சுமக்கவேண்டுமா என்று தென்மாவட்ட அமைச்சர்கள் சிலரே எதிர்ப்புத் தெரிவிக்கிறார் களாம்.’’

‘‘விக்கிரவாண்டியில் யாருக்கு வாய்ப்பு?’’

‘‘அமைச்சர் சி.வி.சண்முகத்திடம், ‘விக்கிரவாண்டியில் யாரை வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளுங்கள். பா.ம.க நம்முடன் இருக்கிறது. அதனால் அந்தத் தொகுதியில் நாம் வெற்றிபெற்றே ஆகவேண்டும்’ என்று அழுத்த மாகச் சொல்லியிருக் கிறாராம் எடப்பாடி. தி.மு.க-வில் மாவட்ட தி.மு.க பொருளாளர் புகழேந்தியிடம், ‘வேட்பாளர் நீதான்... பணத்தைக் கட்டு’ என்று உறுதிகொடுத்திருக்கி றாராம் பொன்முடி.’’

‘‘இவரின் மகன் கௌதம சிகாமணி, ‘விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும்’ என மனு கொடுத்திருக் கிறாரே?’’

‘‘அதுகூட இல்லையென்றால் எப்படி? இப்படியெல்லாம் பிறருக்காக விருப்ப மனு தாக்கல் செய்வது, தேர்தல் நேரத்தில் சகஜம்தான். யாரை நிறுத்தினால் ஜெயிக்க முடியும் என்று முக்கிய தலைவர்களுடன் 23-ம் தேதி மாலை தன் வீட்டிலேயே ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஸ்டாலின். ‘அ.தி.மு.க தரப்பு, தொகுதியைச் சேர்ந்த நபரையே வேட்பாளராக நிறுத்தும் திட்டத்தில் இருப்பதால் அந்தத் தொகுதியைச் சேர்ந்த வன்னிய இனத்தவரையே களத்தில் இறக்கினால் நன்றாக இருக்கும்’ என்று எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.’’

``அப்படியென்றால், பொன்முடியின் சிபாரிசு?’’

``அவர், ‘நான் சொல்லும் புகழேந்திக்குத்தான் தொகுதியைத் தரவேண்டும்’ என்று மல்லுக்கட்டி யிருக்கிறார். அதனால், அப்போதைக்கு முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. தேர்தல் பொறுப்பாளராக ஜெகத்ரட்சகனை நியமிக்கும் எண்ணத்தில் தி.மு.க இருக்கிறது. வன்னியர் வாக்குகளைக் கவரவும், ஆளுங்கட்சிக்கு கரன்சி விஷயத்தில் ஈடுகொடுக்கவும் அவரே சரியான சாய்ஸ் என முடிவுசெய்திருக்கிறார்களாம்.’’

‘‘சிதம்பரத்தை, சிறைக்குச் சென்று சந்தித்துள் ளார்களே சோனியாவும் மன்மோகனும்?’’

‘‘சிதம்பரம் சிறைக்குச் சென்றதிலிருந்து பெரும்தலைகள் எதுவும் கண்டுகொள்ளவில்லை. ‘கட்சி தன்னைக் கைவிட்டுவிட்டதோ’ என்கிற கவலை சிதம்பரத்துக்கு வந்துவிட்டதாம். அதைப் போக்கும்விதத்தில்தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. 1978-ம் ஆண்டு இந்திரா காந்தி சிறையில் இருந்தபோது, சிறைக்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார் சோனியா. அதற்குப் பிறகு சிதம்பரத்தைச் சந்திக்கவே சிறைக்கு வந்திருப்பதாக சோனியா சொன்னதும் சிதம்பரம் நெகிழ்ந்துவிட்டாராம்.’’

‘‘ஓ!’’

‘‘தனி அறையில் சோனியா, சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், மன்மோகன் சிங் ஆகியோர் பேசியிருக்கிறார்கள். ‘அரசியல்ரீதியாக நடைபெற்றுவரும் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையால் துவண்டுவிட வேண்டாம். உங்கள் பக்கம் நாங்கள் நிற்போம்’ என்று சோனியா காந்தி சொல்ல, தெம்பாகத் தலையாட்டிச் சிரித்தாராம் சிதம்பரம்!’’

‘‘சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி விஷயத்தில் புதிய தகவல்கள் கசிந்துள்ளனவாமே?’’

‘‘ஒரு தலைமை நீதிபதிக்கு பதவி உயர்வு கொடுக்கவோ, பணிமாற்றம் செய்யவோ கொலீஜியத்தின் ஒப்புதல் தேவை. தஹில் ரமானி விஷயத்தில் கொலீஜியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில்தான் மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார் தஹில் ரமானி. விஷயம் இழுபறியாகவே இருந்த நிலையில், ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது உச்ச நீதிமன்றம். இத்தகைய சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று விஷயங்களை டெல்லி மீடியாக்கள் வெளியிட்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.’’

‘‘அதென்ன மூன்று விஷயங்கள்?’’

‘‘தஹில் ரமானி குறித்து கொலீஜியத்துக்கு முக்கியமாக மூன்று புகார்கள் வந்தன. நீதிமன்றத்தில் 11 மணி முதல் 1 மணி வரை மட்டுமே பணியாற்றுகிறார். சென்னையின் மையப் பகுதியில் சில சொத்துகளை வாங்கியிருக்கிறார். அ.தி.மு.க மூத்த அமைச்சர் ஒருவரின் சிபாரிசு அடிப்படையில், சில வழக்குகளில் சில முடிவுகளை எடுத்திருக்கிறார் என்பவைதான் அந்தப் புகார்கள் என்று டெல்லி மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.’’

‘‘இது உண்மையாக இருக்குமா... கொலீஜியம் சார்ந்த விஷயங்கள், ராணுவ ரகசியத்துக்கு இணையானதாயிற்றே. அவை எப்படி வெளியில் கசிந்தன?’’

‘‘அந்தப் புகார்கள் எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், ராணுவ ரகசியங்களே கசிந்துகொண்டிருக்கின்றன என்பது உண்மை’’ என்ற கழுகார்,

‘‘2ஜி ஊழல் வழக்கில் முக்கியப் புள்ளியான மும்பைப் பிரமுகரை சமீபத்தில் விசாரித்திருக்கிறது சி.பி.ஐ. இது தி.மு.க தரப்புக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தகட்டமாக காங்கிரஸ் ஆட்சியில் எழும்பிய நிலக்கரி ஊழல் தொடர்பான கோப்புகளை ஆய்வுசெய்யச் சொல்லியிருக்கிறாராம் அமித் ஷா. இந்த வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருடன் இரண்டு தி.மு.க புள்ளிகளையும் சேர்த்து புதிதாக வழக்கு பதியும் வேலைகளைத் தொடங்கியுள்ளதாம் சி.பி.ஐ!’’ என்றார்.

‘‘ஓ... ஏற்கெனவே ஒரு பொருளாதாரப் புலி உள்ளே இருக்கிறது. இன்னொரு புலியையும் உள்ளே அனுப்பப்போகிறார்களோ!’’

‘‘புலிகளின் எதிரியான சுப்பிரமணியன் சுவாமி, கொழும்பில் நடந்த ராஜபக்சே இல்லத் திருமணத்தில் பி.ஜே.பி தேசியச் செயலாளர் ராம் யாதவ், முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோருடன் பங்கேற்றிருக்கிறார். இன்னொரு முக்கிய வேலையையும் அங்கே செய்துவிட்டு வந்துள்ளார் சுவாமி. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதுபோல, இலங்கையில் ஹெச்.எஸ்.எஸ் என்ற பெயரில் இந்துத்துவ அமைப்பு செயல்படுகிறது. அதன் பிரதிநிதிகளைச் சந்தித்தவர், ‘பி.ஜே.பி போல இலங்கையிலும் ஒரு கட்சியைத் தொடங்கி, வரவிருக்கும் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக வேலை செய்யுங்கள்’ என்று ‘அடிக்கல்’ போட்டுவிட்டு வந்திருக்கிறார். ஆக, இலங்கையிலும் காவிக்கால் ஊன்றப்போகிறது!’’ என்ற கழுகார், ‘‘ `எங்கே நித்தி?’ செம டைட்டில்... செம அட்டைப்படம்’’ என்று இந்த இதழுக்கான அட்டைப்படம் மற்றும் கட்டுரையைப் பாராட்டிவிட்டுப் பறந்தார்.

இலங்கை அமைச்சர் ஹக்கீம் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ளச் சென்ற கனிமொழி, அங்கு ரணில் மற்றும் மைத்திரிபால சிறிசேனா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இது இலங்கைத் தமிழ் அமைப்பினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தமிழ்ப் பிரதிநிதிகளைச் சந்திக்காமல் அவர்களை மட்டும் சந்தித்து ஏன்?’ என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது. கனிமொழியைக் கண்டிக்கும்விதமாக வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்துவது பற்றியும் பேசிவருகிறார்களாம்.